Wednesday, November 25, 2009

சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்சமூக நீதி காவலர் திரு.விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களுக்கு முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் வெள்ளி (27-11-2009) அன்று மாலை 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பாவலர் அறிவுமதி மற்றும் வழக்கறிஞர் அருள்மொழி கலந்து கொண்டு உரை ஆற்றுவார்கள்.

1990 ஆம் ஆண்டு மே மாதம்... சென்னையில் பத்திரிக்கையாளர்கள் விடுதலை புலிகள் தீவிரவாதிகள் என விளித்து வி.பி.சிங் அவர்களிடம் கேள்வி கேட்ட போது... எவரையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது கோட் பாக்கெட்டில் இல்லை என பதில் அளித்து... தமிழீழ விடுதலை போராளிகளுகளை சரியான பார்வையில் கண்டவர்...

நவீன நீரோ மன்னன் சிங்கள பேரினவாததிற்கு ஆதரவாக... எம் இன மக்களை கொன்று குவிக்கவும், தமிழின சகோதரிகளை கற்பழிக்கவும் அனுப்பிய படைகளின் சேவை சிங்கள அரசிற்கு போதும் என திரும்ப அழைத்தவர் வி.பி.சிங்...

தமிழர்கள் மீது மட்டற்ற அன்பு கொண்ட அந்த தலைவர் மானமுள்ள தமிழர்கள்... மரியாதை செலுத்தும் மாவீரர்கள் நாளிலேயே மறைந்தார்...


சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் மறைவு... கடந்த ஆண்டு பாசிச ஊடங்களால் மறைக்கப்பட்டும், இந்தியா டுடே எனும் பத்திரிக்கையால் இழிவுபடுத்தப்பட்டது...

ஆதிக்க வர்க்கமும், பாசிசவாதமும்... இழிவுபடுத்திய சமூக நீதி காவலர்... பிற்ப்படுத்தப்பட்ட... ஒடுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்குரியவர்...

சமூக நீதியில் விருப்பமுடைய நண்பர்கள் அனைவரும் சமூக நீதிக் காவலரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்...

Thursday, October 22, 2009

22ஆம் ஆண்டு நினைவஞ்சலி... இந்தியா ஒழிக... தமிழ் வாழக...

1987 அக்டோபர் 21... தீபாவளி... 'ஹிந்தி'யாவின் நவீன் நீரோ மன்னன்... பெண் பொறுக்கி ராஜிவ்... தமிழ் ஈழத்திற்கு அனுப்பிய கற்பழிப்பு படை... யாழ் மருத்துவமனையில் கோர கொலை வெறி தாண்டவம் ஆடி 68 தமிழர்களை கொன்று குவித்த நினைவு நாள்...

தீபாவளி தமிழர்களுக்கு கருப்பு தினம்...

அன்று தீபாவளி... தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள். இந்தியா தன் இரத்த வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.

அந்த நாட்களில் யாழ்பாணத்தில் மருத்துவமனைகள் இயங்காத காலம். போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம். அப்போது யாழ் அப்பாவி மக்களுக்கு யாழ் மருத்துவமனன மருத்துவர்களும் ஊழியகளும் மருத்துவ சேவை செய்து கொண்டு இருந்தனர், இந்த சேவை அப்பாவி மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவாவது பூத்தி செய்தது.

1987 அக்டோபர் 21 அன்று கோழைதனமாக ராஜிவின் 'ஹிந்தி'ய படைகள் யாழ் மருத்துவமனையில் புகுந்து கோர கொலை வெறி தாண்டவம் ஆடியது, இந்திய படையின் துப்பாக்கிகள் கொண்டு கொண்டு X-Ray அறை, மருத்துவர்களின் ஓய்வு அறை,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகள் என சராமாரியா தாக்குதல் நடத்தி மருத்துவர்கள்,ஊழியர்கள்,நோயளிகள் என தமிழ் உறவுகளை கொன்று குவித்தது...

டாக்டர் C.K.கணேசரட்ணம், டாக்டர். பரிமேல்ழகர், தலைமை செவிலியர் திருமதி.P.வடிவேல், செவிலியர் மங்கையகரசி, உழியர்கள் செல்வரஜா, சீவரட்ணம், வண்டி ஓட்டுணர் சண்முகலிங்கம்,பீற்றர்,துரைராஜா போன்றோர் இந்திய படைகளின் கொலை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த இந்திய கொலை வெறியாட்டத்தை பார்ர்த்த குழந்தைகள் மனதளவில் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த வெறியாட்டத்தை கண்ட வயதான நேயாளிகள் இரத்த அழுத்தத்தால் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் உதவி கேட்டும் சிவபுரணம் பாடி தம்மை காப்பற்றும் படி கேட்ட அப்பாவிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.

இது நடந்த அடுத்தநாள் அக்டோபர் 22 அன்று மருத்துவமனை ஆய்வுக்கு வந்த தலைமை மருத்துவர் டாக்டர்.சிவபாதசுந்தரம் இந்திய இரத்தக் காட்டேரிகளால் கொல்லப்பட்டார்.

'ஹிந்தி'ய காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மருத்துவமனை அமரர் அறைக்கு பின்னால் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

மொத்தமாக 68 தமிழ் மக்கள் ராஜிவின் 'ஹ்ந்தி'ய படைகளால் கொல்லப்பட்டனர். இதில் 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 17 ஊழியர்கள் 55 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.

அப்போதும் தமிழக முதல் அமைச்சர் இந்த காட்டுமிராண்டி தனமான இந்திய தாக்குதலுக்கு மௌன சாட்சியாவே இருந்தார்...

எனது இளமை காலத்தில் நடந்த அந்த தமிழர் கொலை பற்றிய செய்தியை... பிபிசியின் தமிழோசையின் வழியாகவே அறிந்தவன் நான்...

தமிழ் நாட்டு மக்கள்... 1987 அக்டேபர் 22 அன்றும்... சொரானையற்று டெல்லியில் நடந்த இந்தியா ஆஸ்தேலியா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாம் சுற்று உலக கோப்பை போட்டியை கண்டு களித்து... மாலையில் இந்திய வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்...

தமிழ் நாட்டு தமிழனுக்கு சொரனை எப்போது வரும் என்றே தெரியவில்லை...

இந்தியா ஒழிக... தமிழ் வாழ்க...

தமிழா இன உணர்வு கொள்...

Friday, October 16, 2009

தீபாவளி.... தமிழனுக்கு இழிவு...

என்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னிடம் பேசிய போது...

அண்ணே தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?

இல்லப்பா எங்களுக்கு தீபாவளியெல்லாம் பெரிச எதுவும் இல்லை, இங்கதான் இருப்போம், கொண்டாட என்ன இருக்கு?

ஆமாண்ண எங்களுக்கு தீபாவளி கிடையாது, எங்க பாங்காளி ஒருவர் இறந்து விட்டாராம்.

பாருப்பா என்ன வேடிக்கை, ஏற்கெனவே உங்க பங்காளி ஒருவன் செத்த திதிய தீபாவளியா கொண்டாட சொன்னா கொண்டாடுறீங்க, இப்ப சொந்த பங்காளி ஒருவர் இறந்த கொண்டாட மாட்டேங்கிறீங்க.
எப்படிண்ணே?

நீ தமிழனா?
ஆமாண்ணே...

அப்போ நீயுதாம்பா அசுரன், அப்ப நாமம் போட்ட கிருஷ்ணன் கொலை பண்ணதா சொல்லப்படும் நரகாசுரன் தமிழன் எல்லாருக்கும் பங்காளி. உங்களயே அசுரன் அரக்கன் என கதை சொல்லி வந்தேறிகள், உங்க ஆளையே கொலை பண்ணிட்டு கொண்டாட சொல்லி இழிவுபடுத்தினா கொண்டாடுவது நல்லாவ இருக்கு.
நமக்கு ரொம்ப வருசமா கொண்டாடி பழக்கம் ஆயிட்டேண்ணே...

இப்படிதாம்பா நம் மீது திணிக்கப்பட்ட இழிவுகளை, சிந்திக்காமலே மகிழ்ச்சியா கொண்டாடிக்கிட்டு இருக்கிறோம்.

அப்போ என்னதான் சொல்றீங்கண்ணே?

தீபாவளி என்பது தமிழினின் மீது திணிக்கப்பட்ட இழிவு, அந்த இழிவை தமிழன் அறிவிழந்து மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டுள்ளான். இழிவால் நம்மை அவமானபடுத்தும் போது எதிர்க்கிறோமோ, அதைவிட இழிவால் நமக்கு மகிழ்ச்சி என ஆட்டிவிக்கும் போது அந்த இழிவான மகிழ்ச்சியை தூக்கி எறிய வேண்டும்.

நீங்க சொல்றது புரியலையேண்ணே...

உங்களுக்கு புரிய வைக்க, இன்னும் எத்தனை பெரியார் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து போராட வேண்டும் தெரியவில்லையப்பா.
தீபாவளி என்பது தமிழனுக்கு இழிவு, சொரனையுள்ள, மானமுள்ள தமிழன் தீபாவளி கொண்டாட மாட்டான்...

Sunday, October 11, 2009

இலங்கையில் தமிழர்களின் முகாம் பற்றி எம்.பி.கள் அறிக்கை.

10-10-2009 இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தமிழ் நாடு எம்.பி.கள் குழு அறிக்கை அளித்து விட்டது.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமா: ஈழ தமிழர்கள் மீளா துயரில் உள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை.
...
...
...

டி.ஆர்.பாலு - கனிமொழி: தலைவர் கலைஞரின் செய்தி இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களது அறிக்கை தலைவர் கலைஞரிடம் அளிக்கப்பட்டு விட்டது. முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு வசதி செய்து கொடுப்பதாகவும், அவர்களை விரைவில் அவர்கள் இடங்களுக்கு அனுப்புவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்தாவின் செய்தியை தலைவர் கலைஞருக்கு தெரிவித்து விட்டோம். கலைஞர் முயற்சியால் முகாம்களில் வாழும் தமிழர்கள் 1 மாததிற்குள் வீடுகளுக்கு அனுப்பபடுவார்கள். தலைவர் கலைஞரின் முயற்சி வெற்றி.

சுதர்சன நாச்சியப்பன் - கே.எஸ்.அழகிரி: அன்னை சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து எங்கள் அறிக்கையை அளிப்போம். கிழக்கு மாநிலத்தில் பிள்ளையான் தலைமையில் ஒரு சிறப்பான அரசு செயல்பட்டு கொண்டுள்ளது, அதே போல் ஒரு சிறப்பான அரசை வடக்கிலும் அமைக்க இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் ராகபக்சே, பாதுகாப்பு ஆலோசர் கோத்தபயா, சரத் பொன்சேகா ஆகியோரின் மிக சிறப்பான நடவடிக்கைகளால் இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது, அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்தோம். தமிழர்களின் முகாம்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா வழங்குவதாக அறிவித்த 500 கோடியோடு கூடுதலாக 1000 கோடி உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது, அதனால் இந்தியா 1000 கோடி வழங்கி இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என பிரதமரையும், அன்னை சோனியா காந்தி அவர்களையும் வலியுறுத்துவோம். தமிழர்களின் முகாம உலக தரத்தில் இருப்பதால், தமிழ் நாட்டில் இருக்கும் அகதி முகாம்களை இலங்கை அரசையே பராமரிக்க வேண்டுகோள் விடுக்கப்படும். இலங்கை அரசு மிக சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றி விட்டது. இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி இலங்கை தேசிய ஒருமைபாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். அன்னை சோனியா காந்தி இலங்கை தமிழர்களுக்கும் அன்னையாக இருக்கிறார். இலங்கையில் அனைத்து இனத்தவரும் சகோதர்களாக வாழ இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அனைத்து உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.

இந்த அறிககைகள் பற்றி


ஜெயலலிதா: இது கருணாநிதியின் கபட நாடகம். இலங்கையில் கனிமொழிக்கு பல கோடிகளில் சொத்துக்கள் வாங்குவதற்காகவே இந்த போலி பயணம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. கருணாநிதி குடும்பத்திற்கு பல கோடிகள் லாபம்.

வைகோ: கருணாநிதியின் இந்த துரோகத்தை தமிழினம் மன்னிக்காது.

தினமலரின் ஊடக விபசாரம்...

நடிகைகள் செய்வது ஒன்றும் தூய தொழில் அல்ல... அவர்கள் அதனை தூய தொழில் என சொல்லி கொள்வதும் இல்லை...

ஆனால் தினமலர் நடிகைகள் விபசாரம் செய்வதாக நடிகைகளை இழிவுபடுத்தி வருகிறது...

ஆனால் நடிகைகள் செய்யும் தொழிலை விட கேடு கெட்ட பத்திரிக்கை விபசாரம் செய்யும் தினமலரை என்ன செய்வது?

நடிகைகள் விபசாரி என எழுதும் தினமலர்...

பல பெண்களுடன் கள்ள உறவு கொண்டு... ஒரு பெண்ணை கள்ள உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக வழக்கு போடப்பட்ட தினமலர் முதலாளி ரமேஷ் ஒரு ஆண் விபசாரி என ஒத்து கொள்ளுமா?

சாரு எனும் மனநோயாளி பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண் விபசாரி என எழுதி கிழிக்குமா?

பல 100 பெண்களுடன் உறவு வைத்திருந்த சங்கராச்சாரி பெரியவா, சின்னவா வை... இந்தியாவின் முன்னணி ஆண் விபசாரிகள் ஏன் எழுத வில்லை...

Thursday, September 10, 2009

சாரு எனும் குடுட்டு கபோதி...

ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேசிய சாரு நிவேதிதா எனும் பத்திரிக்கையாளர்... மறுமணம் பற்றி பேசும் போது தெரிவித்த சில கருத்துகள்...

ஒரு காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்... இப்போது பெண்கள் வேலைக்கு சென்றார்கள்... இப்போது இரவு நேர பணிக்கெல்லாம் செல்கிறார்கள்... காரணம் துட்டு... இதன் மூலம் சாரு சொல்ல வருவது... பணத்திற்காக மட்டுமே பெண்கள் இரவு நேர பணிக்கு சொல்கிறார்கள்... இதில் மறுமணதிற்கும் இரவு பணிக்கு என்ன தொடர்பு என தெரிய வில்லை...

சாருவின் பார்வையில் பணம் வருகிறது என்பதற்காக பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது போல் சொல்கிறார்... வேண்டுமானால் சாரு பணம் வருகிறது என்பதற்காக அவர் வீட்டு பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்ய சொல்வாரோ?

இரவு நேர பணிக்கு செல்லும் பெண்களை இழிவுபடுத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும்...

இப்போது நடக்கும் மறுமணம் போன்ற சமுதாய மாற்றங்கள் ஏதோ தானாக நடந்தது போல்... சாரு சொன்னதுதான் பெரிய அயோக்கியதனம்...

இன்று பொதுமக்கள் ஊடகத்தில்... மறுமணம் பற்றி வெளிப்படையாக பேச முடிகிறது என்றால்... அதன் மூலம்... ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்... பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்காக... பெண்கள் முன்னேற்றதிற்காகவும்... தன் வாழ்க்கை முழுவதும் போராடி சென்ற தந்தை பெரியார்...

ஆனால் பெரியாரின் போராட்டத்தையும்... அதனால் விளைந்த சமுதாய சீர்திருத்தங்களையும்... சாரு நிவேதிதா போன்ற எத்தனை ஊடக விபசாரிகளாலும் மறைக்க முடியாது... மறுக்கவும் முடியாது...

இன்னும் எவ்வளவு காலம்... சாரு போன்ற பிச்சைகார குருட்டு கபோதியின்... வக்கிரங்களை... பொறுத்து கொள்ள வேண்டும் என தெரிய வில்லை...

அந்த கபோதிக்கு சாராயம் வாங்கி கொடுக்கும்... வக்கிர எழுத்தின் அடிமைகள் யாராவது... பெரியாரை தெரியுமா என கேட்டு பாருங்கள்?

Saturday, August 29, 2009

வரலாற்று பதிவு - 1

10-08-1983

1980-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தோகுதியில் இருந்து கருணாநிதியும், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து அன்பழகனும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

ராஜினாமா
இலங்கை தமிழர் பிரச்சனையில், மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து, கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ராஜினாமாவை விளக்கி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

(1) இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் நடைபெற்றுள்ள தமிழ் இனப் படுகொலை குறித்து, இதுவரையில் இந்திய அரசின் தலைமை அமைச்சரோ அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையுள்ள நாடாளுமன்றமோ ஒரு கண்டனத்தைக்கூட அறிவிக்கவில்லை.

ராணுவம்
(2) இலங்கை தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நிம்மதியான வாழ்வளித்திடவும் உடனடியாக முடிவுகளை மேற்கொண்டு இந்திய ராணுவத்தை அனுப்ப தவறியது மட்டுமல்லாமல், எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு அதன் கவனத்தை ஈர்த்த இந்திய அரசு, இலங்கை தமிழர் பிரச்சனையில் அந்த முறையை எவ்வளவோ கோரிக்கைகளுக்கு பிறகும் ஏற்க மறுத்துவிட்டது.

(3) ஐ.நா.மன்றத்தின் (செக்யூரிட்டி கவுன்சில்) பாதுகாப்பு சபையில் வலியுறுத்தி, உடனடியாக பாதுகாப்பு சபையின் சார்பில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி, தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு தனது அக்கறையற்ற தன்மையின் காரணமாக தவறிவிட்டது.

நரசிம்மராவ்
(4) இந்திய வெளியுறவு துறை அமைச்சர் நரசிம்மராவ் இலங்கைக்கு சென்றபோது, தமிழர் தலைவர்களை சந்திக்க இயலாத ஒரு நிலை ஏற்பட்டதோடு, தமிழ் அகதிகள் லட்சக்கணக்கில் அடைபட்டு அவதியுறும் அகதிகள் முகாமிற்கே செல்ல முடியாமல் திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயின் சகோதரர் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய அரசிடம் இலங்கையின் நிலைமைகளை சிங்களவர் சார்பில் விளக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் தலைவர்கள் இந்தியாவிற்கு அழைக்கப்பட அல்லது இந்திய அரசு வலியுறுத்தி அந்த தமிழர் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து இலங்கையின் நிலவரங்களை விவரிக்கின்ற சூழ்நிலையை உருவாக்குதின் மூலம் உண்மை நிலவரங்களை அறிய இந்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததாலும், அப்படி ஒரு முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று நமது தமிழ்க அரசு இந்திய அரசை வலியுறுத்தாததும் பெரும் குறையாகும்.

உணவு
5) இலங்கையில் அகதிகளாக உள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முறையான கவனிப்பின்றி மேலும் மேலும் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகின்ற நிலைமையும் அவர்களுக்கென அனுப்படுகிற உணவு வகைகளோ, ஏனைய மருந்து போன்ற பொருட்களோ அவர்களுக்கு போய்ச்சேராமல் சிங்கள ராணுவத்திற்கு போய் சேருகிறது என்ற கொடுமையை சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மற்ற அமைப்புகளும் சுட்டிகாட்டியும் அந்த பொருட்களும், நிதியும் தமிழர்களுக்கு போய்ச்சேர மத்திய - மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை.

கண்டன தீர்மானம்
(6) இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் தமிழர்களை காப்பாற்றக்கூடிய கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.கணேசன், வை.கோபாலசாமி இருவரும் மேற்கொண்ட உண்ணா நோன்பின் உணர்வை புரிந்து கொள்ளாமல், இதுவரையில் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் இதுவரை தெரிவிக்காதது வருத்தத்திற்குரியது.

(7) தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நண்பர் நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற தியாக பயணத்தில் செல்பவர்களை இந்திய அரசு இடையிலேயே தடுத்துவிடும் என்ற செய்தியை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா வெளியிடுகிற அளவிற்கு இங்குள்ள மாநில அரசு காவல் துறையும், மத்திய அரசு காவல் துறையும் இலங்கையோடு தங்களுக்குள்ள நேசத்தை வெளிகாட்டியிருப்பது பெரும் வேதனைக்குரியது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராசாராமுக்கு அனுப்பிவிட்டதாக கருணாநிதி தெரிவித்தார்.

Wednesday, August 19, 2009

ஏ மழையே பொய்த்து போ...மழைக்கு ஏன் என் இனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு?

நேரத்தில் பெய்யாமல் போய் ஆறுகளை வற்ற விட்டு, தமிழர்களின் வயிறுகளை வாட விடுவதும்

நேரம் கடந்து பெய்து எங்களின் பயிர்களில் புகுந்து வடியாமல் நின்று, தமிழர்களின் வயிற்றில் அடித்து விடுவதும்

மழையான போது தமிழனால் தாங்கி கொள்ள முடிந்தது

சம உரிமை பேசிய சாத்தான்கள் சீனாவும், ரஷ்யாவும் கொடுத்த கொத்து குண்டு மழை அக்னியாய்

பாகிஸ்தான் ஓட்டிகள் என் மக்கள் மீது அடை மழையாய் கக்கி தமிழர்களை கரி கட்டைகளாய்

எரித்த போது பொய்த்து போன மழை

இப்போது

என் இனத்தின் குறுதியினை ஆறாக ஓட விட்டு நந்தி கடலில் கரைத்த போது

உடம்பில் ஓடும் செந்நீரையெல்லாம் கண்ணீராய் கொட்டி விட்ட என் இனத்தை

கல்லில் கம்பி கட்டி வேலிக்குள் அடைத்த பின்னும் பட்டினியே பரிசாக கிடைத்த போதும்

வேலிக்குள் மாட்டிய என் இனத்தை கொத்து கொத்தாக கொல்வதை கண்டு மகிழும்

மலையாளத்தான் போல் மகிழ்ச்சியுடன் மழையாக வந்து என இனத்தை அழிக்கின்றாயோ?

ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...

என் இனத்தின் 2 லட்சம் உயிர்கள் கொன்று குருதியை குடித்த பின்னும் இரத்த வெறி அடங்காத

என் இன எதிரிகளை என்ன செய்வது?

என் இனத்தின் இரத்தத்தை குடித்த மூட்டை பூச்சிகள் இரத்த தானம் செய்ய போகிறது என

பத்திரம் எழுதி கொடுத்த தமிழனின் பிணம் திண்ணி கழுகுகளை என்ன செய்வது?

தமிழனுக்கு சொரனை வந்தால் மூட்டை பூச்சிகள் கோபபடும் என சொல்லி தமிழனுக்காக பொங்கிய

எரிமலை அணைந்து குட்டி சுவரான போது என்ன செய்வது?

ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...

Friday, August 14, 2009

போர் குற்றவாளி - தண்டனைக்குரியவர் - விடுதலை

நாளை 15-08- 2009... இந்தியா என அழைக்கபடும் ஒன்றின் 62வது விடுதலை நாளாம்...

காந்தி-நேரு கூட்டம் விடுதலை பத்திரம் வாங்கும் போது... விடுதலைக்கு வீரத்துடன் போராடிய சுபாஷ் சந்திர போஸை... வெள்ளையர்கள் ஏகாதிபத்தியதிற்கு எதிராக சண்டையிட்ட போர் குற்றவாளி... இவர் இந்தியாவிற்குள் வந்தால் வெள்ளை ஏகாதிபத்தியதித்கு பிடித்து கொடுப்பதாக பத்திரம் எழுதிகொடுத்துள்ளனர்... இன்றும் நேதாஜி இந்தியாற்கு போர் குற்றவாளிதான்...

ஐ.சி.எஸ். பதவி தூக்கி எறிந்து விட்டு... போராட்டதிற்கு வந்த சுபாஷ்... 1940களின் தொடக்கத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தலில் காந்தியால் நிறுத்தப்பட்ட பட்டாபியை தோற்கடித்து காங்கிரஸ் தலைவரான போது... பட்டாபியின் தோல்வி எனது தோல்வி என காந்தி சொன்ன காரணத்தால்... காங்கிரஸை விட்டு விலகி... ஜப்பான்... மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு சென்று... 1942 ஆகஸ்ட் 7ஆம் தேதி... இந்திய தேசிய படையை உருவாக்கினார்... இவரது படையில் போராட்டங்களே... இந்திய விடுதலைக்கு ஆதரவாக... வெள்ளை அரசுக்கு கொடுக்கப்பட்ட பேரிடி... ஆனால் விடுதலையின் போது சுபாஷ் போது குற்றவாளி... இதுதான் இழிவாக இந்தியா வெற்ற விடுதலை...

இந்த ஆண்டு இந்தியர்கள்... மிக மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்களோ?

இந்த ஆண்டு இந்தியாவின் ஆதிக்க வெறிக்கு இரையானவர்கள்... சுமார் 1 1/2 லட்சம் ஈழ தமிழர்கள்... தமிழினத்தின் 1 1/2 லட்சம் உயிர்களை சிங்கள காட்டுமிராண்டிகளுன் சேர்ந்து கொன்று ஒழித்து விட்டு 'ஹிந்தி'யர்கள்... விடுதலை நாளை மகிழ்ச்சியாக கொண்டாட்டும்... இப்படிப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடதானா தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி... முதல் முதலில் 1969இல் முதல் அமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை... 'ஹிந்தி'ய அரசிடம் இருந்து பிச்சையாக பெற்றாரோ?

தமிழர்கள் கொன்றொழித்த மகிழ்ச்சியில் எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேனனும், பிரனாப் முகர்ஜியும், சோனியாவும், ராகுலும், மன்மோகனும், ஏ.கே.அந்தோனியும், இந்து ராமும், சோனா சாமியும், சூனா சாமியும், ஜெவும்... மகிழ்ச்சியாக கொண்டாட்டும்...

'ஹிந்தி'யா போட்ட பிச்சையை கொண்டு... கருணாநிதியும், ஸ்டாலினும், தயாநிதியும் மகிழ்ந்து விட்டு போகட்டும்...

இந்த மானகெட்ட நாட்டில்... உண்மையாய்... உறுதியாய் போராடிய சுபாஷே குற்றவாளியான போது... இந்த கேடு கெட்ட விடுதலை நாள் என்பது போராளிகளுக்கு அவமானம்...

கொலைகாரர்களும்... பிச்சைகாரர்களும் வேண்டுமானால்... கேவலமான விடுதலை நாளை கொண்டாடி விட்டு போகட்டும்...

மானமுள்ள தமிழர்களே... 'ஹிந்தி'யாவின் கொடியை காறி உமிழ்ந்து... காலால் மிதித்து எறியுங்கள்... என்று தமிழனுக்கென்று... அவனது சொந்த மண் உரிமையாகிறதோ... அன்றுதான் தமிழனுக்கு விடுதலை நாள்...

Thursday, May 7, 2009

”ரா’வின் ராஜதந்திரம்...

”ரா” இதனை பற்றி ஒன்றும் அதிகம் சொல்லி கொள்ள தேவையில்லை...

ஒரு தமிழான சொன்னால்... “ரா” என்பது தமிழர்களுக்கும்... தமிழர் நலனுக்கும் எதிராக செயல்படும் அமைப்பாக எப்போதும் செயல்பட்டிருக்கும்...

நான் கேள்விப்பட்ட வரையில்... “ரா” செயல்பாடுகள்... சிஐஏக்கு குறைந்தது அல்ல என்ற கருத்து உண்டு... சிஐஏ மற்றும் மொசாத் துழைய முடியாத இடுக்குகளிலும் “ரா” துழையும்... நெளிவு சுளிவு... “ரா” உண்டு என்றே கருத முடியும்...

இந்தியாவில் ஆட்சியாளர்கள்... யார் வந்தாலும்... அவர்களது செயல்பாடுகள்... “ரா”வின் வழிகாட்டுதலில் அடிப்படையிலேயே இருக்கலாம்...

இவர்கள்... சிறு குழுவாக இருந்தாலும்... மக்களிம் சென்று அதிகாரம் பெற்றவர்களை... ஆட்டி படைக்கும்... வல்லமை இவர்களுக்கு எப்போது இருந்து கொண்டே இருக்கிறது...

சிஐஏ போல... “ரா”வும் தனியாக ஏஜெண்ட் எல்லாம் கிடையாது... இவர்கள் மக்களிடையே கலந்து... இவர்களுக்கு வேண்டிய தகவல்களை பெறுவதில் வல்லவர்கள்... நம் வாயை பிடுங்கியே... அவர்களுக்கு வேண்டிய தகவல்களை நிரப்பி கொள்வார்கள்... தகவல் தொழில் நுட்பத்தையும் சிறப்பாக பயன்படுத்துபவர்கள்...

“ரா” அமைப்பில் வட இந்திய... ஆதிக்க சமுதாயத்தை சேர்ந்த குப்தா... மாலையாளிகள்... தமிழ் நாட்டில் வாழம்... வழந்த... தமிழ்... மற்றும் மொழிகளை பேசும் தமிழ் தெரிந்த பார்ப்பனர்கள்...

தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது... “ரா’ ராஜ தந்திரம் மிக்கவர்களாவே தெரிகின்றனர்... இதை சொல்லும் போது...ஈழ விடுதலை போராட்ட அரசியல் பிரிவு சூன்யங்களா என யாரும் கேட்க கூடாது... அப்படி கேட்டால்... இதை எழுதும் நானும்... கேட்பவர்களும் தமிழின துரோகிகள் ஆகி விட 100க்கு 200 விழுகாடு வாய்ப்புண்டு....

கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில்... மிக தீவிரமான ஈழ தமிழர்கள் மீதான ஆதரவு கிளம்பியது... அந்த ஆதரவை திரட்டியதில் பெரும் பங்கு... திருமாவளவனையும்... பழ.நெடுமாறன், சுப.வீ., தோழர் தியாகு போன்றவர்கள் மட்டுமே சாரும்... அரசியல் கட்சியினர்... விடுதலை சிறுத்தைகளை தவிர... வேறு யாரும்... கடந்த 3 மாதங்களுக்கு முன்... ஈழ மக்களை பற்றி பேசவே இல்லை...

கடந்த 2008 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை... சமூகத்தில் கடைநிலை மக்களாக ஆக்கப்பட்ட அரவாணிகள் முதல்... தொழில் நுட்ப துறையில் பணி செய்து... அதிக ஊதியம் பெரும் ஐடி பணியாளர் வரை... ஈழ ஆதரவு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி கொண்டே இருந்தனர்...

2009 ஜனவரி மாதம்... திருமாவின் உண்ணாவிரதம்... சட்ட கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் முதல்... இறுதி சென்னையில் 50 தாய்மார்கள் உண்ணாவிரதம் வரை நெடிய போராட்டங்கள் நடத்தப்பட்டு விட்டது...

ஜனவரி 28 ஆம் தேதி... இனபடுகொலைக்கு எதிராக... தன் உயிரை ஈகையாக்கிய தம்பி முத்துகுமார் முதல் இது வரை 16 பேர் உயிரை கொடுத்து போராடியுள்ளனர்...

இந்திய “ரா”வை பொருத்தவரை... ஈழத்தில் நடத்தபடும் தமிழின படுகொலைகள்... சரியாக தெரிகிறது... அவர்கள்... இந்திய நலனிற்காக இந்த கோர கொலை செய்யும் போது... அவர்களுக்கு தடையாக கத்துபவர்கள்... தமிழ் நாட்டு தமிழர்கள்...

கடந்த 2007 ஆம் ஆண்டு... தூத்துகுடி மீனவர்களை கடத்தி... தமிழீழ போராளிகள் கடத்தினார்கள் என கதை... திரைகதை... வசனமெழுதிய... “ரா”வினர் இப்போதும்... அடுத்தடுத்து... தமிழினதிற்கு எதிரான நாடங்களை அரகேற்றி வருகின்றனர்... அவர்களின் சதி வலையில் விழுந்தவர்கள் யார்... யார்... என நான் சொன்னால்... தமிழின துரோகியாகி விடுவேன்...

கடந்த ஏப்ரல் மாதம்... என் நண்பர் ஒருவர் சொன்னார்... தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களுக்கும்... ஈழ தமிழர்களுக்கும்... இடையில் சண்டையை... தொடங்கி வைத்து... பகையை உண்டாக்கி விடும்... “ரா” அமைப்பு என எச்சரிக்கை செய்தார்... இப்போது நடக்க வில்லை... என்பார்கள்... அறிவை... உணர்வுக்கு தொலைத்தவர்கள்...

கடந்த பல ஆண்டுகளுக்கு பின்... ஈழ ஆதரவளார்கள்... ஈழ மக்களின் தேசிய தலைவர் மற்றும் கொடியுடன் திரண்டது... கடந்த ஜனவரி 31 ஆம் தேதி... சென்னை... முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தில்... அதில் கலந்து கொண்டவர்கள்... விடுதலை சிறுத்தைகள்... மக இக... பெரியார் திக... திக... மற்றபடி அமைப்பாக எந்த கட்சியும் கலந்து கொள்ளவில்லை... அந்த ஊர்வலத்தின் முழு தொகுப்பும் அரசிடம் இருக்கும்...

இப்போது... விடுதலை சிறுத்தைகள் மற்றும் திக... திமுக அணியில்... மக இகவினர்... சிலை கைது செய்யப்பட்டுள்ளனர்... பெரியார் திகவினர் கைது செய்யப்பட்டு மன மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்...

இங்கே சில “ரா”வின் செப்புவித்தைகளை எடுத்துக்காட்ட முடியும்...

1. கடந்த மார்ச் மாதம்... சிங்கபூர் தமிழ் முரசு... பத்திரிக்கையில் வந்த செய்தி... வைகோ... ஜெவுடன் கூட்டணி வைக்க... விடுதலை போராளிகள் அறிவுறுத்தியுள்ளனர்... போராடி கொண்டிருக்கும் இந்த போராளிகள்... இதை செய்திருக்க வாய்ப்பு குறைவு என்பது என் கணிப்பு... இந்த “ரா”வின் புரளியை... ராமனடிமை சாதியை சேர்ந்த... தன் சாதி கட்சி இருக்கும் கூட்டணிக்கு பயன்படுத்தி கொள்வதற்கு நடந்த பெருமுயற்சியும் நடந்தது...

2. ஜெ... திடீர்... என்று... மார்ச் மாதம் 9ஆம் தேதி... சிங்கள அரசியல் சட்டதிற்கு உட்பட்ட தீர்வை ஆதரிப்பதாக சொன்னார்... பின்னர் திடீர்... திடீர்... என்று தமிழீழத்தை ஆதரிப்பதாக சொன்னார்... சோனியா... தமிழின அழிப்பிற்கு அனுப்பிய ராணுவத்தை... திரும்பி விட்டு... சிங்களர்களை அடிக்க போவதாக சொல்லியுள்ளார்... இவரது பேச்சு... ஆஸ்ரேலியா... சுவிடன், கனடா தமிழர்களுக்கு ஆன்ம பலத்தை அளித்துள்ளது... ஈழ தமிழர்களுக்கு ஜெ... ஈழ தாயக்கப்பட்டுள்ளார்... தமிழ் நாட்டில் கிளம்பிய திடீர் ஈழ ஆதரளர்கள்... நீண்ட காலமாக... குரல் கொடுத்து வந்த ஈழ ஆதரவாளர்களை... தமிழின துரோகிகள் எனவும்... ஜெவுக்கு ஓட்டு போடாத தமிழன் எவனாக இருந்தாலும் மலத்தை தின்பவர்கள் எனவும் அழைக்கப்பட்டார்கள்...

3. சிங்கள காட்டுமிராண்டிகளிடம்... தமிழர்களை அடைத்து வைத்துள்ள... சித்ரவதை முகாம்கள்... தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம்களை விட சிறப்பாக இருப்பதாக சான்றிதழ் அளித்து வந்த... பெண் பொறுக்கி குருஜி... அவர் சாதியை சேர்ந்த தலைவரிடம்... சிடி கொடுத்து தமிழர்கள் அவதி படுவதாக காட்டினாராம்... அந்த ஆதிக்க சாதி தலைவியும்... மனமிரங்கி விட்டாராம்... இப்போது அந்த தலைவி... தமிழீழம் பேசி... புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களின் தாயாகி விட்டார்...

ஆனால் கடந்த மாத இறுதிக்கு பின்... தமிழின அழிப்பை நிறுத்த போராடிய... மேற்கத்திய நாடுகளின் தமிழர்கள்... இப்போது வேகத்தை குறைத்து... தமிழக தலைவியை நம்பி கொண்டுள்ளனர்... மே... 16 வெற்றி பெற்று... மே 22 பிரதமராக... இவர் ஈழம் வாங்கி கொடுத்து விடுவார் என எதிர்பார்த்து... தமிழக தலைவியை தாயாக்கி விட்டு... இவர்கள் போராட்டத்தை குறைத்து விட்டனர்...

இப்போது... சிங்கள வெறி பிடித்த காட்டுமிராண்டிகளிடம் சிக்கி தவிக்கும்... 2 லட்சதிற்கும் மேலான மக்களை பற்றி கவலைபடாமல்... ஈழ ஆதரவாளர்கள் எல்லோரும்... தமிழக ஆதிக்க சாதி தலைவியை... பிரதமராக்கவோ... துணை பிரதமர் ஆக்கவோ... முதல் அமைச்சர் ஆக்கவோ போராடி கொண்டுள்ளனர்... வன்னி பகுதியில் கொல்லபட போகும் உயிர்களை காக்க தொடங்கப்பட்ட போராட்டம்... தமிழக தலைவிக்கு ஆதரவான போராட்டமாக்க திசை திருப்பப்பட்டது...

2 லட்சம் தமிழர்களை பலி கொடுத்து விட்டு... யாருக்காக ஈழம் வாஙக போகிறார்கள்? மண்ணை காக்க போராடியவர்களை... கொடுத்து விட்டு... தமிழக தலைவியை... தாயாக்கிய பின்... இவ்வளவு நாள் மக்களோடு... போராடிய போராளி தலைவரை என்ன சொல்ல போகிறார்கள்... ஈழ தாயின்... வார்த்தைகளிலேயே... தீவிரவாதியா என்றா?

போராளிகளும் பேச்சுவார்த்தைக்கு... சரியான ஆளை தேர்ந்தெடுக்க வில்லை... பொறுக்கி பயல் கஞ்சா குடுக்கி குருஜியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினால் காட்டி கொடுத்து விடுவான் என்ற எச்சரிக்கை கூட இல்லையா? இவனே... போராளிகளுக்கு எதிரான உளவாளிதானே? போராளிகள் இந்த இக்கட்டான நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனும் ஆதங்கத்தில் எழுதுகிறேன்... எப்போதும்... பொறுக்கி குருஜி போன்ற அயோக்கி பயல்களை நம்ப கூடாதே?

தொடக்கத்தில் இருந்தே... தமிழர்கள் விடுதலை போராட்டம்... தந்திரமான துரோகங்களால் பின்னடைவை சந்தித்து வருகிறது... போராட்டத்தின் அரசியம் பிரிவு... உணர்வு ரீதியாக மட்டுமில்லாமல்... அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும்...

தமிழர்களுக்கு எதிரான “ரா”ஜ தந்திரங்கள் தோற்கடிக்கபட வேண்டும்...

எப்போதும் எதிரிகளை குறைவாக மதிப்பிட கூடாது... எதிரியின் செயல்பாடுகள் பற்றி கணக்கிடாமல்... உணர்ச்சி வச பட மட்டுமே தெரிந்த தமிழன்... தந்திரத்திற்கு அறிவை அடகு வைத்து... தமிழன் ஒருவனுக்கு ஒருவன் சண்டையிட்டு கொண்டுள்ளான்...

வெற்றி பெற்று கொண்டிருப்பது... “ரா”வின் ராஜ தந்திரமே...

Tuesday, April 21, 2009

தமிழின அழிப்பு... கொலைகள் நடைபெறுகிறது...இன்று 12 மணி முதல்... முல்லை தீவில் இருக்கும் 2 1/2 லட்சம் மக்களை கொல்ல போவதாக... ராஜபக்சேக்கள் அறிவித்து... கொலை வெறி தாண்டவம் ஆடி கொண்டுள்ளனர்... அந்த சிங்கள பேரின வாத தாண்டவத்திற்கு... இத்தாலிய/இந்தியாவின் சோனியா, எம்.கே.நாராயணன், ஏ.கே.அந்தோனி, பிரனாப் முகர்ஜி, சிவசங்கர மேனன் போன்ற ஆதிக்கவாதிகள் பக்க வாத்தியம் வாசித்து கொண்டுள்ளனர்...

தமிழினம் மொத்தமாக 2 1/2 லட்சம் மக்களை இழக்க போகிறது... தமிழக தமிழர்கள்... 2 1/2 லட்சம் தமிழ் பிணங்களை பார்த்து... ‘இந்தி’யராக ஆனந்தபட போகிறார்களா?

தமிழினம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது... தமிழர்கள்... தேர்தல் திருவிழாவிலும்... ஐபிஎல் கிரிகெட் திருவிழாவிலும்... திக்கு முக்காடி கொண்டுள்ளனர்...

வைகோவிற்கும்... தாவண்ணா பாண்டிக்கும்... மருத்துவர் அண்ணனுக்கும், பாசிச ஜெவுக்கும்... பிணங்கள் விழுவது மகிழ்ச்சியே... எவ்வளவு பிணங்கள் விழுகிறதோ... அவ்வளவு பிணங்களையும் காட்டி ஓட்டு வாங்கி விடலாம் என மகிழ்ச்சியில் இருப்பார்கள்...

தமிழின தலைவர் என அழைக்கப்பட்ட கருணாநிதி... தமிழின அழிவை கண்ணை மூடி கொண்டு.... இந்தாலிய தங்கை சோனியாவோடு ரசித்து கொண்டுள்ளாரோ?

ஈழத்தில் தெரித்து ஒடுவது தமிழ் ரத்தம்... பார்ர்பன ரத்தமாக இருந்தால்... இந்திய ஆதிக்கத்திற்கு அது ரத்தம் என்று தெரிந்திருக்கும்... கருணாநிதிக்கு ஓடுவது தமிழ் ரத்தம்தானா?

தமிழினம் அழிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடும் போது... கருணாநிதிக்கும்... தமிழர்களுக்கான இயக்கம் என சொல்லி கொண்ட இயத்திற்கு அதிகாரம் வேண்டுமா? அதிகாரம் என்பது சம்பாதிக்க மட்டும்தான் முடியுமா? இன அழிப்பை தடுக்க முடியாதோ? அப்படிப்பட்ட அதிகாரத்தை தூக்கி எறிய கருணாநிதிக்கு தடையாக இருப்பது... சுய நலமோ?

இரண்டு தலைமுறை தமிழர்கள்... இவரை தமிழின தலைவர் என பின்னால் சென்று... 5 முறை ஆட்சி அதிகாரத்தை கொடுத்தது... இப்போது... தமிழினத்தை பேரினவாதமும்... இந்திய வல்லாதிக்கமும்... அழிக்கும் போது அமைதியாக வேடிக்க பார்க்கவா?

இந்தியாவே... ஒரு பொறுக்கி ராஜிவின்... சதைக்கு... எத்தனை லட்சம் தமிழனின் உயிர் வேண்டும்?

Saturday, April 18, 2009

2009 - இந்திய மக்களவை தேர்தல்...

2009 இந்திய மக்களவை தேர்தல்...

இதுவரை நடந்த தேர்களில் இந்த தேர்தல் நிறைய வேறுபட்டு... இனிமேல் தேசிய கட்சிகள் என எவனும் அதிகாரம் செலுத்த முடியாது நிலை இந்த தேர்தலில் உண்டாகும்...

எல்லா மாநில மக்களுக்கும் கட்சி என்பதை விட... மாநில நலன் என பார்க்க தொடங்கும் நிலை வந்து விட்டது...

பாஜக... ரத்த வெறி மிருகம் பேடி பயல் மோடி, ம.பி., ராஜஸ்தான் என சுருங்கி விடும்...

காங்கிரஸ்... உயிரோடும் இல்லாமல்... சாகவும் செய்யாமல்... கோமா நிலைக்கு போய் விடும்...

வடக்கு... கிழக்கு... மேற்கு என மூன்று பகுதிகளிலும் பிராந்திய கட்சிகளே வெற்றி பெறும்...

கர்நாடகாவில் காங்கிரஸ்... ம.ஜ.க., பாஜக... என மூன்றும் சம அளவில் பங்கு போட்டு கொள்ளும்...

கேரளாவில்... காங்கிரஸ் நல்ல பலத்துடன் வெற்றி பெறலாம்...

ஆந்திராவில் சிரஞ்சிவி புயலால் என்னவாகும் என்றே சொல்ல முடியாது...

தமிழ் நாட்டில் திமுக... அதிமுக இரண்டு கட்சிகளும் சம பலத்தில் வெற்றி பெறும்... காங்கிரஸ் 3 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெறும்... மதிமுக... இடது சாரிகள் 6-8 இடங்களிலும்... பாமக 2 க்கு குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெறும்... வி.சி. 1 அல்லது 2 லும் வெற்றி பெறலாம்...

இந்த தேர்தலில் காங்கிரஸ்... பாஜக இரண்டு கட்சிகளும் சேர்த்தே... 260 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெறுவார்கள்...

அப்போது இடதுசாரிகள் ஆதரவோடு... மூன்றாவது அணி கங்கிரஸ்... பாஜக ஆதரவு இல்லாமலே ஆட்சி அமைக்க வாய்ப்புண்டு...

இந்த தேர்தலில்... இந்திய அளவில் பார்ப்பனரக்ள் அல்லாதவர்கள் அதிகாரதிற்கு வர வாய்ப்பு வந்துள்ளது...

அடுத்த பிரதமர்... முலயாம் சிங் யாதவ்... போல் யாரவது வர வாய்ப்புண்டு...

எனது விருப்பம்... காங்கிரஸ்... பாஜக... ஜெ... போன்ற பார்ப்பன ஆதிக்க சக்திகளிடம் அதிகாரம் போகமல் இருந்தாலே போதும்... எல்லா பிரச்சனைகளும் தானாக தீரும்...

எனது கணிப்பு நடந்தால்... தமிழ் நாட்டுகாரர்கள் ஆதிக்கம் செலுத்தி... நம் இன போராட்டதிற்கு எதிராக செயல்படாமல் வைக்க வாய்ப்புண்டு...

நிறைய பேர்... ஜெ.. வந்தால்... தமிழீழம் வாங்கி கொடுத்து விட்டு அடுத்த வேலை பார்ப்பார் என சொல்லி கொண்டு திரிகின்றனர்... அவர்கள் விரும்புவது போல்... ஜெ... வந்தால் மே... 13 க்கு பிறகு... கள்ள புருசன் ராஜிவ் சாவு பற்றி பேச தொடங்கி... சிங்கள ராஜபக்சே அண்ணன்களோடு சேர்ந்து தமிழரை அழிப்பார்... அப்போது நாம்... சோனியாவிற்கு பதிலாக ஜெவை திட்டுவோம் அவ்வளவுதான்...

இப்போதும் ஜெ... தமிழீழத்தையோ... தனி நாடு போராட்டத்தையோ ஆதரிக்க வில்லை... சிங்களர்களுக்கு அடிமையான... பிள்ளையான் இருப்பது போல்... அடிமை அரசு வேண்டும் என ராஜபக்சேவின் குரலை ஒலித்துள்ளார்...

இந்த தேர்தலில்... நீங்கள் தமிழக மக்களையோ... தென்னிந்திய மக்களை எதிர் பார்ப்பதை விட... வட உ.பி, பிகார், வங்க, ஒரிஸா இந்திய மக்கள்... நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என விரும்புகிறேன்... இவர்கள்தான் காங்கிரஸையும்... பாஜகவை அடித்து விரட்ட வேண்டியவர்கள்...

காங்கிரஸோ... பாஜகவோ... அதிகாரத்திற்கு வரவே கூடாது... பார்ப்பனர்கள் கையில் இருக்கும் அதிகாரங்களை பிடுங்க வேண்டும்...

Friday, February 20, 2009

தமிழினதிற்கு ஓர் அறைகூவல்...

யாழ்பாணம்... வவுனியா தமிழர்கள் எனும் ஒரே காரணதிற்காக கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்களை சிங்கள அரசு படைகளும், இந்தியா ரகசியமாக அனுப்பிய படைகளும் கொன்று குவித்து தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தில் குரல் வலையை நெரித்து ஈழ தமிழர்களை அடிமையாக்கி விட வேண்டும் என வெறியில் அலைகின்றனர்...

முல்லைதீவு... மரங்களால் சூழப்பட்ட காடு... அந்த காட்டில் நீர், உணவு கூட இல்லாமல் உயிரை மட்டுமே காத்து கொள்ள வேண்டும் என ஈழ தமிழர்கள் மான்களை போலவும், முயலக்ளை போலவும் ஓடிக் கொண்டுள்ளனர்... அந்த மனிதர்களை... மான்களையும் முயல்களையும் வேட்டியாடுவது போல, சிங்கள காட்டுமிராண்டி மகிந்தா ராஜபக்சே மற்றும் சோனியா-பிரனாப் கூட்டணி இந்தியாவில் இருந்து அனுப்பிய படைகள் ஆயுதங்களோடு தமிழர்களை வேட்டையாடி கொன்று குவித்து கொண்டுள்ளது...

ஈழ தமிழர்களுக்கும் தாய் தமிழக தமிழர்களுக்குமான உறவு இரத்த உறவு... 22 மைல் நீர் இடையில் இருந்து விட்ட காரணத்தால் கடலுக்கு அப்பால் இருக்கும் இரத்த உறவுகளான ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுப்பது... இந்திய ஆதிக்கத்திற்கு குற்றமாகவும், தேச துரோகமவும் தெரிகிறது...

5 ஆம் நூற்றாண்டில் வாழந்த திருஞானசம்பந்தர்... திருகோணமலை கோயிலை பாடிய தேவரமும்... 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் தலைமன்னார் திருகேதிசுவரம் கோயிலை பாடிய தேவாரமும்... ஈழத்திற்கு தாய் தமிழகமும் சைவத்திலும் ஒன்று என்பதன் ஆதாரம்...

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கி.பி.1018 இல் இராஜேந்திர சோழன் ஈழத்திற்கு படையெடுத்து சிங்கள அரசன் மகிந்தா என்பவனை சிறையில் அடைத்ததும் வரலாறு...

16 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்த இரகுநாதன், நாகப்பட்டினத்தில் இருந்து ஈழதிற்கு படையுடன் சென்று தமிழ் மன்னருக்கு உதவி செய்து ஆட்சியில் அமர்த்தியதும் வரலாறு...

1947 இல் இந்தியாவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு முன்னாலும், 1948 இல் இலங்கை தீவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு முன்னாலும்... யாழ்பாணம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தாலுக்காவாகவே இருந்துள்ளது... அப்படி பார்த்தால் கூட இன்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்கள் 62 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய தமிழர்கள்...

இப்படி ஈழ தமிழர்களுடன் நெருங்கிய இரத்த உறவுடைய தாய் தமிழக தமிழர்கள், நம் இனம் கண் முன்னே அழிவதை கண்டு, அழக் கூட முடியாமல், செயல்பட முடியாமல்... ஊமையாய்... முடவானாய் வாழ வேண்டிய இழி நிலையில் இருக்கின்றோம்...

தமிழர்களின் இழி நிலைக்கு காரணம் என்ன?


1947 இல் இங்கிலாந்து வெள்ளைகாரர்கள்... அவர்கள் இந்திய தீபகற்பம் எனும் நிலத்தில் 700 மேற்ப்பட்ட சிற்றரசர்களிடம்... செலுத்தி வந்த அதிகாரங்களை டெல்லியில் பார்ப்பனர்களுக்கு மாற்றி கொடுத்து விட்டு சென்றனர்.

1948 இல் இங்கிலாந்து வெள்ளைகாரர்கள்... அவர்கள் இலங்கை எனும் தீவில் 3 நாடுகளாக இருந்த இடங்களின் அதிகாரங்களை... கொழும்பில் சிங்களர்களுக்கு மாற்றி கொடுத்து விட்டு சென்றனர்...

அதிகாரங்களை பெற்ற பார்ப்பனர்களும், சிங்களர்களும்... தமிழினத்தை நான்காம் தர மக்களாக்கி அடிமையாக்கி ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் நிலையில் இது வரை வெற்றியடைய முடியவில்லை...

தாய் தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள்... தமிழர்களிடைய கலந்து... தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் சிதைத்து... தமிழின அழிப்பை கொஞ்சம்... கொஞ்சமாக செய்து கொண்டுள்ளது...

கடலுக்கு அப்பால் ஈழத்தில் மொழியையும் கலாச்சாரத்தையும் அழிக்க முடியாத சிங்கள பேரினவாதம்... நேரடியான தமிழின அழிப்பை இந்திய-பார்ப்பன ஆதிக்க உதவியிடன் செய்து கொண்டுள்ளது...


உலக தமிழினமே...

இப்போது கொத்து கொத்தாக குண்டு வீசி கொல்லப்படும்... நம் இன அழிப்பை நிறுத்த... இரக்கமே இல்லாத இந்திய பார்ப்பன ஆதிக்க சக்திகளிடமும்... வெள்ளைகாரர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலக சமுதாயத்திடம் மண்டியிட்டு கண்டதென்ன?

உலக சமுதாயம் நீலி கண்ணீர் மட்டுமே வடிகின்றது...

இந்திய பார்ப்பன ஆதிக்கம் மண்டியிட்டு விழுந்தவர்களை எட்டி உதைத்து மிதித்து கொண்டுள்ளது...

ஈழ விடுதலை போராட்ட வீரர்களே...


உலக சமுதாயதிற்காக பொறுத்திருக்க வேண்டாம்... நம் இனத்தை அழிக்க வரும் எதிரிகளின் மீது... உங்களின் அடிகளை இடியாக இறக்குங்கள்... கொல்ல வரும் எவனையுன் உயிரோடு விடாதீர்கள்... முக்கியமாக சோனியா-பிரனாப் கூட்டம் அனுப்பிய அத்தனை மனிதர்களையும் சடங்களாக்கி சவபெட்டிகளில் வைத்து இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்... தமிழின அழிப்பிற்கு சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கும் இந்திய வல்லமை ஆதிக்கத்திற்கு மறக்க முடியாத பாடத்தை சொல்லி அனுப்புங்கள்...


தமிழக தமிழர்களே...


ஆறரை கோடி பேரும் கிளர்ந்து எழுங்கள்... களத்திற்கு வாருங்கள்... குற்றுயிரும்... கொலையுருமாக மிச்சமிருக்கும் மீத தமிழர்களையாவது காப்பாற்றுவோம்...

1950களின் இறுதியில் தனி நாடு கோரிக்கையை கைவிட்ட போது... அறிஞர் அண்ணா சொன்னதை நினைவு படுத்திப் பாருங்கள்... “இப்போதைய சூழ்நிலையில்... தனி நாடு கோரிக்கையை தள்ளி போடுகிறோம்”. இப்போது நம் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளது... ஈழம் பற்றியும் அண்ணா சொன்னதை நினைவு படுத்தி பாருங்கள்... 4 கோடி தமிழர்களும் ஒன்றாக போய் நின்றால் கடலும் திடல்தான் என்றாரே... இன்று ஆறரை கோடி தமிழர்களும்... ஊமையாய்... முடமாய் இருக்கின்றோமே?

நம் தமிழ் சகோதர்களையும், சகோதரிகளையும், பிள்ளைகளையும் காப்பாற்ற... ஒரு பார்ப்பன பொறுக்கி இழுத்து கொண்டு வந்த இந்தாலிய சமயல்காரன் மகளிடமும், சீக்கியனிடமும், வங்காள பார்ப்பனனிடமும், மலையாள பார்ப்பனனிடமும் மண்டியிடுவதை நிறுத்துங்கள்...

இது நமக்கு இழிவாக தெரியவில்லையா?


ஈழத்தில் தெறித்து ஆறாக ஓடுவது... நம் இரத்தம்...


குறைந்தது ஐந்து கோடி தமிழர்களாவது வாருங்கள்... ஆளுக்கு அரை லிட்டர் இரத்தத்தை எடுத்து கொடுப்போம்... இரண்டரை கோடி லிட்டர் இரத்தம் கிடைக்கும்...

இங்குள்ள அடிமை காங்கிரஸ்காரர்களை கூப்பிட்டு கொடுப்போம்... அவர்கள் டெல்லிக்கு சுமர்ந்து போய் கொடுக்கட்டும்... அவர்களின் இரத்த வெறி பிடித்த இத்தாலிய சமையல்காரன் மகளிடம்...

அந்த இத்தாலிய பெண்மணி... பொறுக்கி புருசனினின் சதைக்கு ஈடாக... தமிழர்கள் இரண்டரை கோடி லிட்டர் இரத்தத்தை அனுப்பிய பின்னாவது... அந்த பெண்மணியின் இரத்த வெறி அடங்குகிறதா என பார்ப்போம்...

அவர்தான் இத்தாலிய சமையல்காரனின் மகள் ஆயிற்றே... நம் தமிழர் இரத்தத்தை கொண்டு விதவிதமாக பிள்ளைகளுக்கும்... பேர பிள்ளைகளுக்கும்... சீக்கிய அடிமைக்கும், வங்காள பார்ப்பன அடிமைக்கும், மலையாள அடிமைகளுக்கும் சமைத்து கொடுக்கட்டும்... அப்போது தமிழக காங்கிரஸ் அடிமைகளுக்கு மற்றவர்களின் தட்டில் இருந்து சிந்தி சிதறும்... தமிழர்களின் இரத்த பொறியல் மட்டுமே கிடைக்கும்... அதை பொறுக்கி தின்பதற்கு கூட இந்த தமிழக காங்கரஸ் அடிமைகள் கோஷ்டி... கோஷ்டியாக அடித்து கொள்வார்கள்.

இறையாண்மை பற்றி பேசுகிறவர்களே? யாருமே இறையாண்மை பற்றி சிந்திப்பதே கிடையாதோ?

மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில்... மன்னர்களை இறைவனுக்கு நிகராக வைத்து மக்கள் வணங்க வேண்டும் என்பதுதானே இறையாண்மை?

இப்போது நடக்கும் மக்கள் ஆட்சியில் இறையாண்மையின் அவசியம் என்ன? எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆயிற்றே?

இனிமேல் எவனாவது எவளாவது இந்திய இறையாண்மை என பேசினால் தமிழர்களே... அடித்து விரட்டுங்கள்... நம் ஒவ்வொருவருக்கும் இறையாண்மை உள்ளது... எவனது... எவளது இறையாண்மைக்கும் நாம் அடங்கி போக வேண்டிய அவசியம் இல்லை...

நமது தமிழின விடுதலைக்கு எதிராக இருப்பது என்ன? இல்லாத... நம்மை ஏமாற்ற பயன்படுத்தும் இந்திய இறையாண்மை... இந்த மக்களாட்சியில் இறையாண்மை என்பது நம்மை அடிமைப்படுத்துவது... அடிமைதனமான இந்திய இறையாண்மையை அடித்து விரட்டுவோம்... அப்போதுதான் நம் மக்களின் உயிரை காக்க வேறு இனத்தவரிடம் மண்டியிடாமல் நாமே செயல்பட முடியும்...

எவனெல்லாம் இந்திய இறையாண்மை பேசுகிறானோ... அவனெல்லாம் தமிழினத்தின் எதிரி...

தமிழர்களே...

பெரியார்... வளைந்து போய் கிடந்த தமிழனின் முதுகை நிமிர வைத்த நெம்புகோல்...

பார்ப்பன ஜெயலலிதா, இந்தாலியில் இருந்து பொறுக்கியுடன் வந்த ஓடுகாலி போன்ற இரத்த வெறி பிடித்த பாசிச பேய்களிடம் மண்டியிட்டு மண்டியிட்டே... நமக்கு பெரியார் கற்று கொடுத்த சுயமரியாதையை மறந்து போய் விட்டோம்...

பாவம் கலைஞர் கருணாநிதி... பெரியாரால் கொடுக்கப்பட்ட நெம்புகோலை காங்கிரஸ்காரர்கள் பிடுங்கி கொண்டார்களே?

அழிக்கப்படும் தமிழினத்தை நாம் காப்பாற்ற வேண்டிய கடமையுடைய தமிழக முதல்வர் கருணாநிதியின்... முதுகெலும்பை வளைத்து... வளைத்து... கடைசியில் உடைத்து... அவரை மருத்துவமனை கிடத்தி வைத்துள்ளனர்... காங்கிரஸ்காரர்கள்... பாவம் முதுகெலும்பில்லாத ஒரு மனிதரை இனிமேலும் நாம் தொந்தரவு செய்வது சரியாக இருக்காது... திமுக தலைவர் கருணாநிதி... இனிமேல் நன்றாக ஓய்வெடுத்து கொண்டு இருக்கட்டும்...

நம் இன அழிப்பை கண்டு சகிக்காமல்தான்... வாழ வேண்டிய... அறிவு மிக்க 26 வயது முத்துகுமார்... தனது உடலை தீக்கு இரையாக்கி... உயிரை தமிழினத்திற்கு ஈகையாக கொடுத்து விட்டு போனான்...

அவன் தனியாக போகவில்லை... ஆறரை கோடி தமிழர்க்ளுக்கும் சேர்த்துதானே செத்து போனான்?

அவன் உயிரை விட்டு... மாணவர்களிடம் கொளுத்தி வைத்த தமிழின உணர்வு நெருப்பை கூட... இங்குள்ள அதிகார வர்க்கமும்... பார்ப்பன ஊடகங்களும் நீரை ஊற்றி அணைத்து கொண்டுள்ளது...

அதிகார வர்க்கமே... ஊடகங்களே... உங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையே...

தமிழக மக்களே உங்களுக்குமா?

இனிமேல் எவனும் முத்துகுமார் போல் சாகவே கூடாது... வாருங்கள் போராடுவோம்... இங்கே தமிழனுக்கு என ஒரு நாட்டையும்... கடலுக்கு அப்பால் தமிழீழத்தை வாங்கி கொடுத்து விட்டு சாவோம்...

தமிழினத்தின் தந்தை பெரியார்... மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகு... என்றாரே...

இன்று தமிழினம் மானமிழந்து... அறிவிழ்ந்து... அடிமை நாயாக மண்டியிட்டு கிடக்கிறது...

அடிமை நாயாக சாவதை விட மானத்தோடு தமிழனாக சாக வேண்டும்...

வீட்டுக்கு ஒரு தமிழனாவது வரட்டடும்... களத்திற்கு வந்து போராடுவோம்... இந்திய-டெல்லி-பார்ப்பன ஆதிக்க வெறியை அழித்து ஒழிப்போம்...

தமிழினத்தை... பெரியார் விரும்பிய மானமுள்ள... அறிவுள்ள இனமாக்குவோம்...

Sunday, January 25, 2009

மொழி போர் தியாகிகளுக்கு... வீர வணக்கம்...

1965... சனவரி 25... தமிழ் மொழி போர் வரலாற்றில் மறக்க முடியாத நாள்...

அறிஞர் அண்ணா... இந்தி திணிப்பை எதிர்த்து... இந்திய குடியரசு தினத்தை புறகணித்து... அனைவரும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என கேட்டு கொண்ட நாள்... இதனால் அறிஞர் அண்ணா, என்.வி.நடராசன் போன்ற திமுக முன்னனி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்...

தமிழ நாட்டை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்... இந்த போராட்டதிற்கு தலைவராக... சென்னை சட்ட கல்லூரி மாணவர் ரவி சந்திரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்... எல்.கணேசன், கா.காளிமுத்து, நா.காமராசன், ம.நடராசன் போன்றவர்கள்... இந்த மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர்...

சனவரி 26...

சென்னையை சேர்ந்த மாணவர்கள் முதல் அமைச்சர் பக்தவசலத்திடம் மனு கொடுக்க பேரணியாக வந்த போது... லால் பகதூர் சாஸ்தரி அரசின் துனை ராணுவ படை மாணவர்களை தாக்கியதில்... மாணவர்கள்... கூவம் நதியில் குதித்து தப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்...

மதுரை வடக்கு மாசி வீதியில் ந.காமராசன்... கா.காளிமுத்து தலைமையில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய போது... அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த டி.என்.சேஷன், காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து பால் கூட்டணி... மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி சூடு... என அனைத்து வெறியாட்டங்களையும்
நடத்தி பல மாணவர்களை கொலை செய்து முடித்தது
...

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 100 மாணவர்களுக்கும் மேல்... லால் பகதூர் சாஸ்தரி தலைமையில் இருந்த இந்திய அரசு மற்றும் பக்தவசலம் தலைமையில் இருந்த சென்னை மெட்ராஸ் ஸ்டேட் அரசால் கொல்லப்பட்டனர்...

இந்த போராட்டத்தில் தமிழக மாணவர்கள்... இங்கிருந்த எல்லா சிறைகளை நிறைத்து இருந்தனர்...

காங்கிரஸின் அடக்கு முறை... தமிழுக்காக பேசிய அனைவரை உள்ளே போட்டது... தமிழுக்காக பேரணி நடத்திய சைவ சமய தலைவர் குன்றகுடி திருவ்ண்ணாமலை ஆதினம் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்... மொழிக்காக போராடி சிறை சென்ற... ஒரே சமய தலைவர் குன்றகுடி ஆதினமாக மட்டுமே இருப்பார்...

இந்தியப் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டோரைத் தவிர சின்னசாமி, முத்து, ரங்கநாதன், சாரங்கபாணி, சிவலிங்கம் மற்றும் வீரப்பன் ஆகியோர் தமக்குத் தாமே நெருப்பூட்டி இந்தித் திணிப்புக்கு எதிராகத் தற்கொலை செய்து தம் இன்னுயிரை நீத்தனர்.

இந்தி எதிர்ப்பு போராட்டதிற்கான காரணம் இன்னும் எவ்வளவு மக்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்வி குறியே... ஏதோ இந்த போராட்டம் திமுகவின் போராட்டம் போல் நிறைய புத்திசாலிகள் நினைத்து கொண்டுள்ள்னர்...

உண்மையான காரணம்...

1950 ஆம் ஆண்டு இந்திய குடியரசு சட்டம் கொண்டு வரப்பட்ட போது... 15 ஆண்டுகளில்... மக்கள் அதிகமாக பேசும் இந்தியை இந்தியா முழுவதும் அலுவல் மொழியாக்கி விட வேண்டும்... என ஜவகர்லால் மற்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது...

அதாவது... இந்திய அரசு... மற்ற ஸ்டேட் அரசு நிர்வாகங்களில் ஆங்கிலம் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்... ஆங்கிலத்தை நீக்கி விட்டு இந்தியை கொண்டு வருவது என்பது திட்டம்... இந்த திட்டத்தை முதலில் எதிர்த்தவரகள் மேற்கு வங்கத்தினர்... பின்னர் மானமுள்ள (மானமே இல்லாத காங்கிரஸ்காரர்கள் இந்த திட்டத்தை ஏற்று கொண்டவர்கள்) தமிழர்கள் இதனை தீவிரமாக எதிர்த்தனர்...

1963 இல் அறிஞர் அண்ணா... நாடாளுமன்ற மாநிலங்கள் அவை இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்...

அதிகமானவர்கள் பேசும் மொழியை குறைவானவர்கள் எப்படி ஏற்று கொள்ள முடியும்? அப்படி என்றால் குறைவானவர்கள் பேசும் மொழி என்னவாகும்?

அதிகமானவர்கள் பேசும் மொழி மட்டுமே அலுவல் மொழி என்றால்... அதிகமாக இருக்கும் காகத்தை விட்டு... ஏன் மயிலை தேசிய பறவையாகவும்... அதிகமாக இருக்கும் எலியை விட்டு... ஏன் புலியை தேசிய விலங்காகவும் அறிவிக்க வேண்டும் என கேள்விகளை எழுப்பினார்...

வங்கத்தவர் மற்றும் தமிழர்களின் உணர்வுகளை காலின் கீழே போட்டு மிதித்து விட்டு... 1965 சனவரி 26 இல் இருந்து இந்தி மட்டுமே... இந்தியாவில் இயங்க முடியும் எனும் அதிகார சட்டதிற்கு... காங்கிரஸ் குறியாக காய் நகர்த்தியது...

காங்கிரஸ் மோசடியாக... வல்லமை ஆதிக்கத்தின் மூலம்... சிறுபான்மை மக்கள் பேசும்... மொழிகளை... அழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தமிழ் நாட்டில் வெடித்ததுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம்...

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பயன்... மானமே இல்லாத காங்கரஸ்கார அடிமைகளின் கோர முகம் தெரிந்து... தமிழ் நாட்டில் காங்கிரஸ் எனும் ஒன்று... ஊனமாக்கப்பட்டு முடமாகி விட்டது... அதனால்தான் முடிமாகி போன மெட்ராஸ் ஸ்டேட் காங்கிரஸ்... சிங்கள ராஜபக்சே, இத்தாலிய சோனியா, பார்ப்பன ஜெ... போன்ற பாசிசவாதிகளுக்கு அடிமையாக இருக்கிறது....

இந்திய அரசு என சொல்லி கொள்ளும் ஆதிக்க சக்திகள் மற்றும் அடிமைகளின் அதிகார வட்டம்... என்றும... தமிழின் விரோத அமைப்பாக இயங்கும் நிலையில்...

தமிழனுக்கு குடியரசு நாள் என்பது கருப்பு நாளாகவே இருக்கும்...

இந்த நாளை குடியரசு நாள் என்பதற்கு பதில் அடிமை நாள் என்றே அழைக்கலாம்... இந்த நாளில் கொடியேற்றும் பாசிசவாதிகளுக்கு குடியரசு என்றால் புரியாது... அவர்களுக்கு தேவை அடிமை நாய்கள்...

இன்று தமிழ் நாட்டிலும்... மற்ற வங்கம் போன்ற சிறுபான்மை மொழிகள்... அந்தந்த மாநிலங்களில் அலுவல் மொழியாக இருக்க முடிகிறது என்றால்... மக்கள் கொடுத்த விலை...

சில நூறு தமிழர்களின் உயிர்கள்...
லால் பகதூர் சாஸ்திரி படைகளால் ஊனம் ஆக்கப்பட்ட தமிழர்கள் 500 பேருக்கு மேல் இருப்பார்கள்...

அடங்கி போ... அண்டி வாழ், அடிமை நாயாக செத்து மடி எனும் ஆதிக்கம் செலுத்த வந்த இந்திய வல்லாண்மையை எதிர்த்து குரல் கொடுத்து...

உயிர் நீத்த தமிழ் உணர்வாளர்களும்... லால் பகதூர் சாஸ்திரி அனுப்பிய படையின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும்...வீர வணக்கம்...