Saturday, February 9, 2008

மூத்த திராவிட இயக்க தலைவர் க.இராசாராம் மறைந்தார்...
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மூத்த திராவிட இயக்க தலைவர் க.இராசாராம் மறைந்தார்...

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 26- 08 - 1926 இல் பிறந்தவர்...

தர்மபுரியில் பள்ளி படிப்பை முடித்து... பின்னர் சேலத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்... படிக்கும் காலத்தில் தமிழ் விழாவிற்கு வந்த பாவேந்தர் பாரதிதாசனால் ஈர்க்கபட்டு திராவிட இயக்கத்தில் இணைத்து கொண்டவர்...

கல்லூரி கல்விக்கு பின்... திராவிடர் கழகத்தில் இணைந்து தொண்டாற்றியவர்... பெரியாருக்கு செயலராக பணியாற்றிவர்...

திமுகவில் இணைந்து... 1962 தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு... ராஜாஜியின் மகன் நரசிம்மனை தோற்கடித்தவர்...

1967 தேர்தலில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்...

அண்ணாவின் நம்பிக்கைகுரிவராக விளங்கியவர்... வட மாநில தலைவர்களுக்கு அன்பிற்குரிய்வராகவும் இருந்தவர்...

அண்ணா வெளிநாடு பயணம் சென்ற போதெல்லாம்... புற்று நோய் சிகிச்சைகாக அமெரிக்கா சென்ற போதும்... இவரும்... இரா.செழியனும் உடன் சென்றார்கள்...

1971 தேர்தலில் போட்டியிட்டு திமுக அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சரானார்...

1972 இல் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு விலகிய போது... இவர்தான் கலைஞருக்கும்... எம்.ஜி.ஆருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகளை போக்க முயற்சி செய்தார்... எம்.ஜி.ஆர். பிடிவாதமாக இருந்ததாலும்... நெடுசெழியனும்... மதுரை முத்துவும் எம்.ஜி.ஆரை நீக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்ததாலும் இவரது சமரச முயற்சிகள் தோல்வி அடைந்தன...

வீட்டு வசதி வாரிய அமைச்சராக சிறப்பாக பணியாற்றவர்... இப்போது சென்னையில் உள்ள அண்ணா நகர் மற்றும் கலைஞர் நகர் போன்ற இடங்கள் இவரின் ஆலோசனையினால் உருவாக்கபட்டவை...

பின்னர் சில ஆண்டுகள் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிவர்...

இந்திரா காந்தி அவசர நிலை கொண்டு வந்த போது... கலைஞருக்கும்... வட நாட்டு தலைவர்கள்... ஜெயபிரகாஷ் நாரயண், மொராஜி தேசாய், கிருபாலணி போன்றவர்களுக்கும் பாலமாக செயல்பட்டவர்...

1977 இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பின்... திமுகவின் மீது கடும் குற்றசாட்டுகளை அளித்து... கட்சியை தடை செய்ய முயற்சி செய்ய விரும்பி போது... மத்தியில் ஆட்சி செய்த ஜனதா கட்சியினரும்... பிரதமர் மொராஜி தேசாயும்... கலைஞர் தலைவர் பதவியில் இருந்து விலகி வேறு யாரையாவது கொண்டு வரலாமே என சொன்ன ஆலோசனையை... திமுக செயற்குழுவில் சொன்ன போது கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருந்தது... அப்போது சேலம் இரயில்வே சந்திப்பில் இவர் மீது தாக்குதல் முயற்சி நடந்ததாலும்... இவர் திமுகவை விட்டு விலகினார்...

1977 இல் இவரும்... நெடுஞ்செழியனும், இரா.செழியனும் சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினர்... மக்கள் திமுகவின் தலைவராக நெடுவும்... பொது செயலாளராக இராசாராமும் இருந்தனர்... கட்சி தொடங்கிய 30 நாளில் மக்கள் திமுகவை... அதிமுகவும் இணைத்தனர்...

1978 இல் இவரது மனைவி மறைந்த போது... எம்.ஜி.ஆர். டெல்லியில் தமிழக சிறப்பு பிரதிநிதி எனும் ஒரு பதவியை உருவாக்கி இவரை டெல்லிக்கு அனுப்பினார்...

1979 இல் ஜனதா அரசு கவிழ்ந்த போது... சரன்சிங் ஆட்சி அமைய அதிமுக ஆதரவளிக்க உதவி செய்தார்...

1980 தமிழக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு... தமிழக சட்ட மன்ற பேரவை தலைவரானார்... செல்லபாண்டியனுக்கு பிறகு தமிழக சட்ட மன்ற பேரவை தலைவராக சிறப்பாக பணியாற்றிவர்...

1984 தேர்தலில் போட்டியிட்டு அதிமுக அமைச்சரவையில் தொழில் துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சராக இருந்தவர்...

எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஜா அணியில் இருந்தவர்... 1989 சட்ட மன்ற தேர்தலில் ஜா அணி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்...

1991 தேர்தலில் சேலம் பனைமரத்து பட்டி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று ஜெ அமைச்சரவையில் உணவு துறை அமைச்சரானார்...

1991 ஆண்டு அக்டோபர் மாதம்... ஜெ மத்திய அரசிற்கு தீபாவளிக்கு குடும்ப அட்டைகளுக்கு பாமாலின் எண்ணெய் ஒதுக்க வேண்டி கடிதம் எழுதிய போது... நரசிம்மராவ் அரசு இல்லை என அனுப்ப வில்லை... உணவு துறை அமைச்சராக இருந்த இராசாராம் டெல்லிக்கு சென்று இவருக்கு வேண்டியவர்களிடம் பேசி தமிழகத்திற்கு பாமாலின் எண்ணெய் அனுப்ப ஏற்பாடு செய்து விட்டு... சென்னை விமான நிலைத்தில் இறங்கும் போது... தன்னால் முடியாத வேலையை... இவர் எப்படி செய்யலாம் என்ற அகம்பாவத்திலும்... சைகோதனமாகவும்... இராசாராமை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்...

பின்னர் இவர் ஜெ கட்சியில் இருந்து ஒதுங்கி... இராசாராம், வி.வி. சுவாமிநாதன், பி.எச்.பாண்டியன், திருநாவுகரசு போன்றவர்கள் நல்லாட்சி இயக்கம் என்ற பெயரில் ஜெ செய்த டான்சி ஊழல் போன்ற மோசடிகளுக்கு எதிராக சு.சாமி... வழக்கு போட உதவினர்...

1994 இல் இவரது சட்ட மன்ற உறுப்பினர் பதவியை பறிக்க முயற்சி செய்த போது... நீதிமன்ற உதவியினால் தடை வாங்கினார்...

1992- 96 ஜெ ஆட்சி காலத்தில் சட்ட மன்றத்தில் பேசினால் ஜெ கட்சி அடியாட்களால் தாக்க படலாம் எனும் அச்சத்தில்... சட்ட மன்ற நடவடிக்களில் இருந்து ஒதுங்கி இருந்தார்...

1996 ஜெ தோல்விக்கு பின் முத்துசாமி, கண்ணப்பன், புட்போட்டு எஸ்.டி.எஸ். போன்றவர்களுடன் சேர்ந்து போட்டி அதிமுகவில் இருந்தார்...

2001 தேர்தலிலும் எம்.ஜி.ஆர். அதிமுக என நடத்தினார்...

2008 பிப்ரவரி 8 ஆம் நாள் சிறுநீரக கோளாரால் சென்னையில் காலமானார்...

பெரிய பதவியில் இருந்தாலும் மிக எளியானவர்... இவரை சாதரணமாக எல்லா இடங்களிலும் காணலாம்... இருவர் படம் பார்க்க சாதரணமாக திரை அரங்கில் பார்த்ததுண்டு...

இவர் இருந்த சாந்தோம் பகுதியில் காலை நடை பயிற்சி செல்லும் போது கூட பார்க்கலாம்... 1994 இல் சில ஜெ கட்சி ரவுடிகள் இவரை காலை நடை பயிற்சியின் போது... தாக்க முயற்சி செய்தனர்...

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அண்ணாவின் குடும்ப திருமணத்தில் எல்லா வேலைகளையும் வலிய போய் செய்தாராம்... அந்த அளவிற்கு அண்ணாவின் மீது பற்றுள்ளவர்...

திராவிட இயக்கம் ஒரு சிறந்த தலைவரை இழந்துள்ளது...

பாவேந்தர்... பெரியார்... அண்ணா... கலைஞர்... எம்.ஜி.ஆர்... மொராஜி தேசாய்... போன்ற பெரிய தலைவர்களுடன் பணியாற்றியவர்...

திராவிட இயக்க வளர்ச்சியில் சிறப்பான பங்காற்றியவர்...

சிறந்த நாடாளுமன்றவாதியாக... நடுநிலையான சபாநாயகராக... பொறுப்பான அமைச்சராக... மாறாத பெரியார் தொண்டராக நினைக்கபட வேண்டியவர்... க.இராசாராம்...