Wednesday, June 2, 2010

எல்லாம் சரி... பூக்காரி என்றால் இழிவோ?

சமீபத்தில் நான் வினவு தளத்தில் ஒரு பதிவை படிக்கும் போது... பூக்காரியை பற்றி கதையை படிக்க நேர்ந்தது... ஏன் பூக்காரியை பற்றி இழிவாக விபசாரியாக எழுத வேண்டும் என கேட்டால்... புனையப்பட்ட கதை என்கிறார்கள்...

பூக்காரிகளை இழிவாக விபசாரி என எழுதிய கை... ஆயிரம் பெண்களுடன் விபசாரம் செய்த கேடு கெட்ட ஆண் விபசாரிகள் சின்ன, பெரிய சங்கராச்சாரிகளை பற்றிய உண்மை கதை எழுதுமா? கேவலமான ஆதிக்க சாதி ஆண்கள் விபசாரம் செய்யும் போது கண்களை மூடி கொண்டு இருப்பவர்கள் எல்லாம் விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை விபசாரி என எழுதும் போது குரூரமாக ரசிப்பதேனோ?

நான் காட்டும் உதாரணத்தில் கூட வேறு எந்த சமூகத்தின் பெண்களை பற்றி இழிவாக சொல்லவே கூடாது என்பதால்... உலகறிந்த கேடு கெட்ட பொறுக்கிகளான சங்கராச்சாரிகளை உதாரணத்திற்கு காட்டுகிறேன்... பெண்களை இழிவாக எழுதினால் அந்த குரூர பதிவுக்கு எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்...

வாருங்கள் சென்னை... கோயம்பேடு வணிக வளாகத்திற்கு... காலையிலும்... மாலை 11-12 வாக்கில் மல்லிகை... முல்லை பூக்களை கூடை வாங்கி... மாநகர பேருந்திலேயே உட்கார்ந்து... பூக்களை கோர்த்து செல்லும் உழைக்கும் பூக்காரி விபசாரியோ?

அந்த குரூர பதிவர்... விபசாரி என எழுதிய பூக்காரி கட்டிய பூக்களைதான் கடவுளுக்கு போடுவார்கள்...

பூக்களை கட்டுபவள் விபசாரி... என்றால் அந்த பூக்களை போட்டு கொள்ளும் கடவுள்?

சில காலம் முன்பு... வலைபதிவுகளில் வன்முறையோடு எழுதியதாக போலி என்பவரை வலைபதிவாளர்கள் எப்படி எல்லாம் எதிர்தார்கள் என்பதை மறந்து விட்டு... ஆதிக்க சாதிகாரர் என்பதற்காகவும்... பண வசதி படைத்தவர் என்பதற்காகவும்... நண்பர் என்பதற்காகவும்... காப்பாற்ற முனைவது ஏனோ?

சமூகத்தில் விளிம்பு நிலை பூக்காரியை விபசாரி என எழுதியது கண்டிக்க மட்டுமல்ல... தண்டிக்க படவும் வேண்டிய ஒன்று...

இதனை பற்றிய ஒரு பதிவில் உண்மைத் தமிழன்... இடதுசாரி சிந்தனையாளர்கள் வினவு இதனை பற்றி எழுத கூடாது... நாமே ஆல மரத்தடி பஞ்சாயத்து வைத்து ஆதிக்கவாதியை ஆதரிப்போம் என்கிறார்...

நான் இடதுசாரியோ... வலதுசாரியோ... இல்லை... விளிம்பு நிலை... உழைக்கும் பூக்காரியை விபசாரி என எழுதியதை... ஒரு நாகரீக சமூகத்தில் வாழும் மனிதனாக எதிர்க்கிறேன்...

போலிக்கு ஒரு நியாயம்... ஆதிக்க வர்க்க பதிவருக்கு ஒரு நியாயம்... என வலைபதிவு ஆலமரத்தடி பஞ்சாயத்து கருதுமானால்... வலைபதிவாளர்கள் இன்னும் மனுதர்மத்தை மதிக்கும்... காட்டுமிராண்டி சமூகத்தை விட்டு வெளியே வரவில்லை என சொல்லி விடுங்கள்...

ஒரு விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை புனைவில் விபசாரி வன்கொடுமை செய்த ஒரு குரூர புத்திக்கு என்ன துணிச்சல்... பூக்காரி வீட்டு பிள்ளைகள் யாரும் படித்து... வலைபதிவை படிக்க மாட்டார்கள் என்பதுதானே?

குரூர மனத்துடன்... பூக்காரியை புனைந்த அந்த பதிவர்... நேர்மையோடு பதிவை நீக்காமல் வைத்திருக்கட்டும்... பூக்காரி வீட்டு பிள்ளைகள் எல்லாம் வந்து படிக்கும் வரை... அவர்கள் வந்து ஏன் எங்கள் அம்மாவை... அக்காவை... விபசாரி என எழுதி இருக்கிறாய் என கேட்கும் வரை?

அந்த விளிம்பு நிலை... உழைக்கும் பூக்காரி வீட்டு பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? வலைபதிவு ஆலமரத்தடி பஞ்சாயத்து தலைவர்கள்...

எனக்கு பூக்காரியை விபசாரி என எழுதிய பதிவர் வேண்டாதவர் இல்லை... யாரும் வேண்டியவர்களும் இல்லை...

உழைக்கும் வர்க்கத்தின் நேர்மையான... என்னை அண்ணா என அழைக்கும் பூ விற்கும் சகோதரியை பார்த்தவன்... அந்த பூ விற்கும் சகோதரியின் உழைக்கும் சமூகத்தை இழிவு படுத்திய குரூரத்தை எதிர்க்க வேண்டியவன்...