Thursday, March 1, 2018

ஜெயேந்திரன் - நினைவு கூர்தல்...

1939இல் கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இடம் பெயர்ந்த சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திரன் இன்று காலை இறந்தார்...


பெரியவா எனவும் ஜெயேந்கிர சரஸ்வதி ஸ்வாமிகள் எனவும் பார்ப்பனர்களாலும், தினமலர், துக்ளக், கல்கி, விகடன், குமுதம் போன்ற பத்திரிக்கைகளாலும் அழைக்கப்பட்டவர்... இன்று இவரின் மரணத்திற்காக ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனர்களோடு திக தலைவர் கி.வீரமணி, திமுகவின் மு.க.ஸ்டாலின், காங்கிரசின் திருநாவுக்கரசர் போன்றவர்களும் அதிர்ச்சி அடைந்து வருந்தி இருக்கிறார்கள்...


திருவாரூர் மாவட்டம் கோட்டூர் இருள்நீக்கி சுப்ரமணியன் என்கிற சுப்புனி, 1954இல் மடத்திற்கு நேந்து விடப்பட்டு ஜெயேந்திரன் ஆக அவதாரம் எடுத்து மாடாதிபதியாக இருந்த சந்திரசேகரனுக்கு உதவியாக இருந்ததாக சொல்கிறார்கள்...


ஜெயேந்திரன் இறப்பிற்காக ஆல் இன் ஆல் ஆர்.எஸ்.எஸ். அம்பி ராம சுப்புனி போன்றவர்கள் கதறி கொண்டிருக்கும் போது, அந்த இந்திரனை நினைவு கூற வேண்டி இருக்கிறது...
பொய் பித்தலாட்டங்களால் பார்ப்பன புனிதத்தை காப்பாற்ற உருவாக்கப்பட்ட 80 வருட பழைமையான மடத்தில் இருந்த ஜெயேந்திரன் சில உண்மைகளை உலகிற்கு சொல்லி விட்டு சென்றுள்ளார்.


1924இல் தூத்துக்குடியில் நடந்த சைவ சமய மாநாட்டில் பேசிய திருவிக மடங்களை பற்றி வரையரை செய்திருப்பார்... எப்படி? மடங்கள் என்பவை கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, விபசாரம் செய்பவர்களின் கூடாரமாக இருக்கிறது...


1924இல் பேசிய திருவிகவின் கூற்றை உண்மையென உலகிற்கு அறிய வைத்த பெருமை ஜெயேந்திரனையே சேரும்...


கடந்த 70 ஆண்டுகளாக இந்திய பெருமுதலாளிகள், ஆளும் வர்க்கம், நீதித் துறை, ஊடகம் என அனைத்து ஓடுக்குமுறை அமைப்புகளிடமும் உறவு வைத்துக் கொண்டு இவர்களுக்கு புரோக்கர் வேலை செய்வதை தொழிலாக கொண்ட இந்த மடத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக, காங்கிரஸ், ஜெ கட்சிகள், உச்ச நீதி மன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள், கல்கி, விகடன் போன்ற பத்திரிக்கை முதலாளிகள், பழைய பார்ப்பன பண்ணையார்கள் முதல் இன்றைய டாடா குழும தலைவர் சந்திரசேகரன் வரை அனைவரும் பக்தர்கள்...


குறிப்பாக ஜெயேந்திரனின் உச்சபட்ச சாதனை என்றால்... கொலை குற்றத்திற்காக 2004 நவம்பரில் தைரியலஷ்மி கைது செய்து வேலூர் சிறையில் அடைத்ததாக பெருமைபடுகிறார்கள்... வாழை இலையில் மலம் கழிப்பதுதான் லோக குருவின் மரபு என சொல்லி தைரியலஷ்மியின் சிறைத் துறையை வாழை இலை கொண்டு வர செய்தது...
சங்கரராமனை யார் கொலை செய்திருப்பார்கள் என பத்திரிக்கையார் கேள்வி கேட்ட போது, தன் காலில் முள் குத்தினாலே ரத்தம் வடிக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள், இவன் கொடுத்த ஹிம்சையை பார்த்த தனது பக்தர் யாரோ போட்டிருக்கலாம் என பதில் வந்தது.
கொலை வழக்கை விசாரணை செய்து வந்த புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிபதி ராமசாமியிடம் தீர்ப்பிற்காக பேரம் பேசியது... போன்றவை ஜெயேந்திரனை பற்றி குறிப்ப்டும்படியான செய்திகள்...


வழக்கின் விசாரணையின் போது விசாரணை அதிகாரி கூடுதல் கண்காணிப்பாளர் சக்திவேல் முதல் 100க்கும் அதிகமானவர்களின் பிறழ் சாட்சி அளித்தமையால் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போய் விட்டது, மற்றபடி விஷ்ணு காஞ்சி பெருமாள் கோயிலில் சங்கரராமன் வெட்டப்பட்ட பின்னர் அலைபேசியில் அசிரிரி மூலம் வெட்டி முடிக்கபட்டது செய்தி வந்தது, மடத்து ஐசிஐசிஐ வங்கி வங்கி கணக்கில் இருந்து வெட்டிவர்களுக்கு கடவுள்களில் சங்கரனோ, சுப்ரமணியனோ, இந்திரனோ பணத்தை அனுப்பி இருக்கிறார்கள்... இப்படியாக கடவுளர்களை விட மேன்மையானவர் என தெரியபடுத்தியவர் ஜெயேந்திரன்...


2002 பிப்ரவரில் குஜராத்தில் அரசால் நடத்தபட்ட நரவேட்டைக்கு சில நாட் களுக்கு முன்னர் அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதி இருந்த பிரச்சனைக்குரிய இடத்தை விஷ்வ இந்து பரிஷதிடம் பிடுங்கி கொடுக்க பஞ்சயத்து செய்ய சென்றவர் இந்த ஜெயேந்திரன்... இதுதான் பின்னாள் நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு தொடக்கபுள்ளி...


சாமியார்கள் அரசியலில் தலையிடலாமா என கேட்ட போது, தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறினால் பட்டியல் சாதி இடஒதுக்கீடு கொடுக்க கூடாது நேருவிடம் சொல்லி மாற்றிவர் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரன், அதன் வழியில் தானும் அரசிற்கு ஆணையிட முடியும் என்றார் ஜெயேந்திரன்...


சேரி மக்கள் மதம் மாற கூடாது என சொல்லி சேரி மக்களுக்கு தரிசனம் காட்ட ஜெயேந்திரன் சென்ற போது, இவரிடம் நெருங்கும் சேரி மக்கள் சுத்தமாக இல்லை, அதனால் ஒழுங்காக அழுக்கு தேர்த்து குளிக்க ஆணையிட்டார், ஆனால் இவர் ஒழுங்காக பல் விளக்கினால் நன்றாக இருக்கும் என இவரிடம் நெருங்கி சென்ற மகளிர் சொன்னதாக ரவி சுப்பிரமணியன் எழுதி இருந்தார்...


ஜெயேந்திரனின் பொன் மொழிகள் என சொல்வதானால் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள், விதவைகள் களர் நிலம் என்பவை...


காஞ்சிபுரம் ஏகாமரம் கோயிலுக்கு சென்றால் ஏகாம்பரமும் மனைவி காமாட்சியும் தனி கோயில் என இல்லாமல் சிலைகளை ஒரே கல்லில் செதுக்கி இருப்பார்கள், அந்த ஏகாம்பரம் மனைவி காமாட்சியை பிரித்து தனியே வைத்து கொள்ளையடிக்கும் மாபியா தலைவர் ஜெயேந்திரன்...


குடியரசு தலைவர், பிரதமர், முதல் அமைச்சர்கள், மத்திய அரசு, மாநில அரசு, உச்ச நீதி மன்றம் என அனைவருக்கும் ஆணையிடும் அதிகாரத்தை பார்ப்பன புனிதம் எனும் பிம்பத்தால் கட்டமைத்திருந்ததை தகர்த்து காஞ்சிபுரம் சங்கரமடம் என்பது கொலை, கொள்ளை, புரோக்கர் வேலை, விபசாரம் போன்ற குற்ற செயல்கள் செய்வதற்கு உரிமம் பெற்ற இடம் என உலகிற்கு புரிய வைத்த பெருமைகுரியவர் ஜெயேந்திரன்...


ஜெயேந்திரனின் ஆன்மீக பணி என எதுவும் இல்லையா என்றால் காமாட்சி அம்மன் கருவறைக்கு முன்னாள் ஜெயேந்திரன் அருளிய செளந்தர்ய லகரி என எழுதி சமஸ்கிருத வார்த்தைகளை தமிழ் எழுத்துக்களில் எழுதி இருப்பார்கள்... அதன் அர்த்தத்தை சமஸ்கிருதம் தெரிந்த ஆன்மீக அன்பர்கள் படித்து ஜெயேந்திரனின் மந்திர சக்தியை புகழ்ந்து எழுதலாம்...


இனி என்ன?
இந்த சங்கரமடத்திற்கான குற்ற செயல்களுக்கான கல்யாண குணங்களை ஜெயேந்திரனை விட கேவலமான கிரிமினல் விஜயேந்திரன் தலைமையேற்று தனது பெருமைகளை இன்னும் சிறப்பாக  உலகிற்கு புரிய வைக்க முடியும்...