Monday, December 8, 2008

சிங்கள படைகள் முன்னேற்றம்...

கடந்த ஆறு மாதங்களாக... தமிழ் நாட்டில் வெளிவரும் தி பொந்து... மற்றும் தினமலம் பத்திரிக்கைகளில்... தினமும் சிங்கள படைகள் சில கிலோ மீட்டர் முன்னேறுவதாக செய்தி வெளியாக வருகிறது...

கடந்த வாரம் மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்த போது கூட தினமலம்... சிங்கள் படைகள் 5 கி.மீ. முன்னேறி விட்டதாக எழுதி இருந்தது...

இரண்டு மாதங்களுக்கு முன்னே சிங்கள படைகள் கிளிநொச்சிக்கு 7 கி.மீ. தொலைவில் மட்டும் இருப்பதாகவும்... 12 மணி நேரத்தில் பிடித்து விடுவார்கள் எனவும் எழுதினார்கள்... அதை வைத்து என் நண்பர் ஒருவர் கூட என்னிடம் சிங்கள படைகள் வெற்றி அடைவதாக பேசினார்...

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பத்திரிக்கைகள் எழுதும் கி.மீ. கணக்கை வைத்து பார்க்கும் போது சிங்கள படையின் ஒரு பிரிவு தலை மன்னாரை கடந்து ராமேசுவரம் வழியாக... ராமநாதபுரதை கடந்து இப்போது உத்திரகோசமங்கையில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... சில நாட்களில் பரமகுடி வந்து விடுவார்கள் போல் தெரிகிறது...

சிங்கள படை மற்றொரு பிரிவு யாழ்பாணத்தை கடந்து கோடியகரை... வேதாரண்யம் வழியாக... வேளாங்கன்னியை கடந்து... இப்போது பொய்ங்கைநல்லூரில் தமிழர்களை வீழ்த்தி இருப்பதாகவும்... நாளை அவர்கள் நாகப்பட்டினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்... மற்றும் மாவட்ட ஆட்சியரையும் பிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்...

இப்படி பொந்து... தினமலம் கணக்குபடி... சிங்கள படைகள் விரைவில் கிலோ மீட்டர்... கிலோ மீட்டராக முன்னேறி சென்னைக்கு வந்து முதல்வர் கலைஞரையும்... ஆளுனர் பர்னாலாவையும் பிடிக்க சிங்கள சிறைகளில் அடைக்கப் போகிறார்களாம்... பின்னர் சோரம் போன சோமாறி பயல் சோ தான் தமிழக ஆளுனராம்... பொந்து ராம்... ஜெ போன்றவர்கள் சிங்கள அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்பட போகிறதாம்...

சிங்கள படைகளின் வீர தீர வெற்றிகளை பாராட்டி... மன்மோகன்... சோனியா... அத்வானி... கூட்டனி... சி.பிஎம். போன்ற கட்சிகள் பேரதரவோடு... தமிழ் நாட்டை சிங்களர்களுக்கு அடிமையாக எழுதி கொடுக்க போகிறார்களாம்... அந்த அடிமை சாசனத்தை பிரனாப் முகர்ஜி முன்னிலையில்... சிவசங்கர மேனன் எழுதி தர போகிறாராம்...

இனிமேல் தாய் தமிழர்கள்... சிங்களர்களின் அடிமை...

Sunday, December 7, 2008

இந்தியாவில் தீவிரவாதம்...

1980 களுக்கு முன்... இந்தியா எனும் பெயரில் அழைத்து கொள்ளும் நாட்டில் தீவிரவாதம் எனும் வழக்கத்தில் இல்லை...

அதற்கு முன் 1960 களின் பிற்பகுதியில் மேற்கு வங்கத்தில் தொடங்கிய வர்க்க போராட்டம் நச்சல்பாரிகள் இயக்கமாக... ஆதிக்க சக்திகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் எனும் அளவில்தான் இருந்தது... நச்சல்பாரிகல் இயக்கத்தினர் மக்களை தாக்குவதை செய்ய மாட்டார்கள்... அவர்கள் ஆதிக்க வர்க்கத்தை... சமுதாயத்தை அடிமைபடுத்தி வைத்திருந்த பெருநில உரிமையாளர்களை மட்டுமே... தாக்கியும்... கொலை செய்தும் வந்துள்ளனர்...

1980 களுக்கு பின்னே... தீவிரவாதம் எனும் சொல் வழக்கத்திற்கு வந்துள்ளது... இந்தியாவில் இருந்த... இருக்கும் தீவிரவாத அமைப்புகள் பற்றி... சற்றே பின்னோக்கி பாருங்கள்...

1980 - 1991 - பஞ்சாப்... காலிஸ்தான் தீவிரவாதம்.... பஞ்சாபில் இருக்கும் அகாளிதள் இயகங்களை பலவீனபடுத்தவே தீவிரவாதத்தை... ஊட்டி வளர்த்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா... காராணம் அகாளிதள் இயகங்களின் வளர்ச்சியால் பஞ்சாபில் காங்கிரஸ் காணாமல் போனது... பஞ்சாப் தீவிரவாதிகளை காரணம் சொல்லிதான் 1984 இல் பஞ்சாபில் எஸ்.எஸ்.பர்னாலா (இப்போதைய தமிழக ஆளுனர்) ஆட்சியை இந்திரா அரசு கலைத்தது... இந்திரா வளர்த்த பிரந்திரன்வாலே... பொற்கோயில் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்தான்... இந்திரா 1984 அக்டோபர் 31 இல் அதன் பலனை அனுபவித்தார்...

1983 - 1991 - அஸ்ஸாம் உல்பா தீவிரவாதம்... அஸ்ஸாமில் 1982 இல் நடந்த மாணவர் புரட்சியின் மூலம்... மாணவர் தலைவர் பிரபுல்லகுமார் மகந்தா... அஸ்ஸாம் கனபரிஷத் கட்சியின் மூலம் முதல்வர் ஆனார்... அங்கேயும் மகந்தாவின் அரசை ஆட்டி படைக்கவும்... கலைக்கவும்... இந்திராவும்... ராஜிவும் தேர்ந்தெடுத்த உத்தி... உல்பா தீவிரவாதம்... இவர்களை ஊட்டி வளர்த்தவர்கள்... இந்திரா... ராஜிவ்...

இந்த இரண்டு பிரச்சனைகளும்... மக்கள் பிரச்சனைகள்... சமுதாய பிரச்சனைகள் என்பது மறந்து போய்... காங்கிரஸ் கட்சிக்கும்... இந்திரா-ராஜிவ் குடும்பத்திற்குமான தனிப்பட்ட பிரச்சனைகள் போல் கையாளப்பட்டன... 1991 இல் ராஜிவ் பலி கொடுக்கப்பட்ட பின்னர்... பஞ்சாப் - அஸ்ஸாம் தீவிரவாதம் மறைந்து... அங்கே குடியரசு தலைவர் ஆட்சிகள் போய்... மாநில... மக்கள் ஆட்சி நடத்த முடிகிறது... உண்மையில் பஞ்சாப் - அஸ்ஸாம் தீவிரவாததின் உண்மை முகங்கள்... இந்திரா-ராஜிவ்...

1989 - இன்று வரை... காஷ்மீர் தீவிரவாதம்... கிட்டத்தட்ட 1989 வரை காஷ்மீரில் ஏன் தீவிரவாதம் நடக்கவில்லை என்பதை யாரும் சிந்திக்க முற்படவில்லை? அங்கே ஷேக் அப்துல்லா தேசிய மாநாடு கட்சியின் முதல்வராக இருந்த 1986 வரை பிரச்சனைகள் இல்லையே? 1960 களில் நேருவும் ஷேக் அப்துல்லாவும் செய்து கொண்ட ஒப்பந்ததின் படி பிரச்சனை இல்லாமல் போய் இருப்பதாக கொள்ள முடியும்... 1986 வரை சரியாக இருந்த ஜம்மு-காஷ்மீர் நிலை... 1990 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் ஆட்சி ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன? காரணம் பரூக் அப்துல்லா - ராஜிவ்... நீரோ மன்னன் போல் ஆட்சி செய்த ராஜிவின் அவலம் நாடு அறிந்த ஒன்றே... 1987 இல் இருந்து 1989 வரை காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக்... இந்தியாவில் வாழந்த காலம் 6-8 மாதங்கள்... இங்கிலாந்தில் வாழ்ந்த காலம் 26-30 மாதங்கள்... அப்படி என்றால் அந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு... நிர்வாக நிலை எப்படி இருக்கும்? நீரோ மன்னன் போல் ஆட்சி நடத்திய ராஜிவும்... 1987- 89 களில் 23 ஆம் புலிகேசி போல் ஆட்சி செய்த பரூக் அப்துல்லாவும்தான் இப்போதைய ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைகளுக்கு காரணம்...

1985- இன்று வரை... ஆர்.எஸ்.எஸ்.... வி.எச்.பி...பாஜக... சங்பரிவார் இந்து தீவிரவாதம்... 1948 இல் இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட மாகத்மா காந்தி கொலைக்கு பிறகு... இந்து தீவிரவாதம் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது... ஜனசங்கம்... ஜனதாவில் சங்கமம் ஆகி... பின்னர் 1980 இல் ஜனதா சங்கமத்தில் இருந்து வாஜ்பாய்-அத்வானி கூட்டனி கரைந்து வந்ததது... பாரதீய ஜனதா கட்சி... 1984 இல் பாஜக மக்களவை உறுப்பினர்கள் 2 பேர்... 1988 வரை பாஜகவின் தலைவர் வாஜ்பாய்... அவரால் சரியாக வளர்க்க முடியாமல் போன கட்சியை 1988 இல் தலைவரான... ஜின்னா கொலை முயற்சி குற்றவாளி எல்.கே.அத்வானி கண்டிபிடித்த ஆயுதம்... ராம ஜென்ம பூமி...

1989 தேர்தலில் நீரோ மன்னன் ராஜிவை விரட்ட... ஏற்ப்பட்ட கூட்டனி... ஜனதா தளம்... பாஜக... அப்போது ஜனதா தளம் 136 தொகுதிகளிலும்... பாஜக 118 தொகுதிகளிலும் வெற்றி பெற்று... இடதுசாரிகள் ஆதரவுடன் தேசிய முன்னனி ஆட்சி அமைக்கப்பட்டது... 1990 ஆகஸ்ட் மாதம் மண்டல் குழு அறிக்கையின்படி பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வி.பி.சிங் அரசால் வழங்கப்பட்டது... சமூக நீதிக்கு எதிரான பா-ர்ப்பன பாஜக... 1990 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வட மாநிலங்களிலும்... ஆந்திரா கர்நாடகா உட்பட மாணவர்களை தூண்டி... முதல் பா-ர்ப்பன சாதி தீவிரவாத்தை தொடங்கியது... இதில் என்ன கொடுமை என்றால்... பாஜகவின் மாணவர் அமைப்புகள் தூண்டி விடப்பட்ட பிற்ப்பட்ட சாதி மாணவர் தீக்குளித்து இறந்தனர்... (இந்த செய்தியை சந்தேகிப்பவர்கள் 1990 அக்டோபர் 21 - நவம்பர் 5 காலதிற்கான இந்தியா டுடே இதழை தேடிப் படிக்கலாம்... மாணவர்களின் படம்... பின்னனியோடு செய்தி இருக்கும்)...

1990 நவம்பரின் ராமன் கோயில் கட்ட... ரதத்தில் கிளம்பிய அத்வானி கைதுக்கு பின் வி.பி.சிங் ஆட்சி விலகியது...

1992 டிசம்பரில் காங்கிரஸ் கட்சியின் நரசிம்மராவை சாட்சியாக கொண்டே... அத்வானி - முரளிமனோகர் ஜோஷி கூட்டம் பாபர் மசூதியை இடித்தது...

இந்த சம்பவத்தை லோக குரு காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எப்படி வர்ணித்தார் தெரியுமா? "நம்மவா பிஜேபிகாராவால கூட செய்ய முடியாததை... நரசிம்மராவ் செய்து முடித்தார் தெரியுமோல்லியோ? இவா காலத்திலதான பாபர் மசூதிய இடிச்சா"...

அப்போதைய தமிழக முதல்வர் ஒருவர்தான் 1992 டிசம்பரில் மசூதி இடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன நடந்த தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாஜவிற்கு ஆதரவாக பேசியவர்...

இப்போது நடக்கும் அனைத்து இஸ்லாமிய தீவிரவாதங்களுக்கும் மூலம் பாபர் மசூதி இடிப்பு...

இந்தியாவின் தீவிரவாததிற்கு முழு பொறுப்பு... கையாலாகத காங்கிரஸ் கட்சியே... காங்கிரஸ் சரியான முறையில் மக்கள் ஆதரவின் மூலம் மத வெறி சக்திகளை ஒழித்திருக்கலாம்... ஆனால் காங்கிரஸ் அப்போது ராஜிவை கொண்டு நீரோ மன்னன் போல் அல்லவா ஆடியது...

இன்று இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி முட்டி... முட்டி அழுபவர்கள்... அந்த தீவிரவாதிற்கான காரணத்தை மறைப்பதேன்?

இந்தியாவில் இந்துக்கள் என சொல்லி கொள்வர்களுக்கு தீவிரவாதம் நடத்தவும்... மக்களை கொலை செய்யவும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதா?

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். - பாஜக போன்ற மதவெறி சக்திகள் வளர... வளர... தீவிரவாதம் வளர்ந்து கொண்டே இருக்கும்...