Saturday, August 25, 2007

காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் வாக்குமூலம். 1

நான் பல ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். இல் பணிபுடிந்தேன். பின் இந்து மகாசபையில் சேர்ந்தேன். இந்து கொடியின் ஒரு போர் வீரனாகச் செயல்பட நானாகவே முன்வந்தேன். இந்த நேரத்தில்தான் வீர சாவர்க்கர் இந்து மகாசபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவரது சுறாவளி பிரச்சாரம், காந்தமாகக் கவர்ந்திடும் தலைமையின் கீழ் முன் எப்போதையும் விட இந்து இயக்கம் பன்மடங்கு வளர்ச்சியும் வேகமும் பெற்றது. லட்சக்கணக்கான இந்து பெருமக்கள் இவரை தங்களது தள்பதியாக போற்றினர்.

இந்து மக்களுக்காகத் திறமையுடன், நம்பிக்கையுடனும் வாதாடக் கூடிய தலைவராக சாவர்க்கரை பார்த்தனர். இப்படிப் பட்டவர்களுல் நானும் ஒருவன். இந்து மகாசபையின் நடவடிக்கைகளை நான் பக்தி சிரத்தையுடன் மேற்கொண்டேன். இதனால் எனக்கு சாவர்க்கருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 'சாவர்க்கர் சதனில்' (சாவர்க்கரின் விடு) தரைத் தளத்தில் அமைந்திருந்த இந்து சங்காதன் அலுவலத்திற்கு அவ்வப்பொழுது சென்று வந்தது இதற்க்காகத்தான் என்பதை நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

Tuesday, August 21, 2007

ஈழ தமிழர்களுக்கான உதவி...

சிங்கள பேரினவாத அரசு... ஈழத்திற்கு செல்லும் வழிகளை அடைத்த பின்... ஈழத்தில் உணவு தட்டுபாடு ஏற்பட்டு தமிழர்கள் சாக வேண்டும் எதிர்பார்க்கிறது...

இங்கே தமிழ நாட்டில் ஈழ தமிழர்களுக்கான... உணவு... மருந்து... உடை போன்ற உதவி பொருளகளை மக்களிடம் இருந்து பெற்று... சர்வ தேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க இந்திய அரசிடமும்... தமிழக அரசிடமும் அனுமதி கோரிய போது... அதற்கான அனுமதி வழங்க படவில்லை... ஒரு வேளை அனுமதி மறுக்க பட்டால்... நீதி மன்றம் சென்று சென்று அனுமதி பெற்று விட கூடாது என்பதற்காக காலம் கடத்துவதாக தெரிகிறது...

இப்போதைய நிலை... உதவி பொருட்களுடன்... நெடுமாறன் தலைமையிலான தமிழர் இயக்கம்... செப்டம்பர் 7 தேதி மதுரையில் இருந்து ஒரு பிரிவு இராமேஸ்வரம் சென்றும்... திருச்சிராய்பள்ளியில் இருந்து ஒரு பிரிவு... நாகப்பட்டினம் சென்று... செப்டம்பர் 11 ஆம் தேதி ஈழதிற்கு சென்று... நேரடியாக உதவிகளை வழங்குவதாக அறிவிக்க பட்டுள்ளது...

எனது சந்தேகம்...

1. சர்வதேச செஞ்சிலுவை சங்கம்... தீவிரவாத இயக்கம் இல்லை...

2. தமிழன் சாக வேண்டும் என சிங்கள பேரினவாதிகளும் அவர்கள் அடிவருடிகளான பார்ப்பனர்களும் விரும்பலாம்... ஆனால் ஆட்சியை காத்து கொள்ள கலைஞரும்... காங்கிரஸ் அடிமையாகி விட்டாரோ?

3. ஒரு முட்டாள் அரசியல்வாதி ராஜிவ் இறந்துவிட்டதால்... ஒட்டு மொத்த ஈழ தமிழினமே அழிய வேண்டுமா?

உங்களிடம் பதில் இருந்தால் சந்தேகங்களை தீர்க்கலாம்...

Tuesday, August 14, 2007

வெட்கம் கெட்ட 'சஷ்டியப்தபூர்த்தி' - விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்...

இந்திய சுதந்திரத் தாய்க்கு இன்று 'சஷ்டியப்தபூர்த்தி' அதாவது அறுபதாம் கல்யாணம்!!!! இந்தியத் தந்தை....? ஒவ்வொரு இந்தியக்குடிமகனும்தான்.

இப்படி ஒரு பதிவை பார்க்க நேர்ந்ததது... என்ன கொடுமை சரவணன்...
இவர்கள் வாழ்த்து சொல்வதற்கு ஒரு விவஸ்த்தையே கிடையாது போல் உள்ளது...


இந்திய தாய்க்கு கல்யாணமாம்... அதுவும் 100 கோடி பேர் உடனாம்... இப்படிதான் ஏதாவது தொடர்பில்லாமல் எழுதுவார்களோ?

இந்த நாட்டை தாய் என்று சொல்பவர்கள்... நாட்டு தந்தை என அழைக்கப் பட்ட மகாத்மா காந்தியை 30-01- 1948 இலேயே மதவெறி பிடித்த சாவர்க்கர்... கோட்சே கூட்டம் கொன்று... இந்திய தாயை விதவை ஆக்கி விட்டார்களே? அப்புறம் என்ன தாய்... கல்யாணம் என வெட்கம் இல்லாமல் எழுதுவது...

எப்படி இருந்தாலும்

இந்தியாவின் 60வது விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்...

இந்த நாளில் விடுதலைக்காக உரிரையும்... உடமைகளை நாட்டுக்கு அர்பணித்த தியாகிகள் நன்றியோடு நினைக்க பட வேண்டியவர்கள்...

Thursday, August 9, 2007

சுஜாதா... சங்கர் கூட்டனியின் தமிழர் மீதான் வக்ர தாக்குதல்...

வள்ளல் பாரி ஆட்சி செய்தி பகுதி... இப்போது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பிரான் மலை... அங்கே அந்த மலையில் அவர் கட்டிய சிவன் கோயில் இருக்கிறது...அந்த முல்லை கொடிக்கு தேடி... படர விட்ட... நிகழ்வு நடந்ததது... திருப்பத்தூர் எனும் ஊரில் என சொல்வார்கள்...

மூவேந்தர்களும் போரில் பாரியை தோற்க்கடிக்க முடியாமல்... புலவர் போல் வேடமணிந்து படையுடன் சென்று மூவேந்தர்களும்... அவனை கொன்றதாக வரலாறு உள்ளது...பின்னர்தான் பாரியின் பெண்களை கபிலர்... அழைத்து சென்று... தற்போது விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூருக்கு அருகில் உள்ள கபிலர் குன்றில் வைத்து வளர்த்தாக வரலாறு உண்டு...

வஞ்ச புகழ்ச்சி அணியில்... கபிலர்தான் பாரியை புகழ்ந்து பாடியிருப்பார்...

பாரி... பாரி என்று உருவேத்தி
ஒருவர் புகழ்வார் சென்னா புலவர்
பாரி ஒருவன் மட்டும்ல்லன்...
மாரியும்உண்டு இங்கு இவ்வுலகு புரப்பதுவே...

இதன் பொருள்... பாரி மழையை போல்... கொடையுள்ளம் கொண்டவன் என்பதுதான்... பாரி ஒருவன் மட்டும்தானா இருக்கிறான்... மழையும் இருக்கிறது என வஞ்சகமாக சொல்லி... அவன் மழையை போன்றவன் என்கிறார் கபிலர்...

பாரி... கடை ஏழு வள்ளல்களில் முதன்மையானவனின் மகள்கள்தான்... அங்கவை... சங்கவை...அங்கவை... சங்கவை...

சங்க தமிழ் பெயர்களை கேவல படுத்தியது தெரியாமல் நடந்ததது அல்ல...
சுஜாதா வயதான பின் இப்படியா ஜாதி வெறி பிடித்தலைய வேண்டும் என தெரிய வில்லை...

சங்கர் பெரிய ஜாதி வெறியன் என எல்லோரும் அறிந்த ஒன்றுதான்... அவன் படங்களில் எல்லாம்... வக்ரம்தான் மிஞ்சி இருக்கும்....

இந்த தமிழ் பெயர்களுக்கு பதில்... பாமா - ருக்மணி என்றோ ராதா - ருக்மணி என்றோ வைத்திருக்கலாமே? மாமா வேலை பார்க்கும் நடிகராக எஸ்.வி.சேகரையோ... சோ ராமசாமியையோ போட்டிருக்கலாமே? இவர்களுத்தான்... சங்கராசாரிகளுக்கு மாமா வேலை பார்த்த முன் அனுபவம் இருந்திருக்கும் அல்லவா?

அங்கவை... சங்கவை... யார் என்று தெரியாதவர் நடித்திருந்தாலும் பராவாயில்லை... தமிழ் பேராசிரியராக இருந்த டாக்டர் சாலமான் பாப்பையா வைத்தல்லவா தமிழர்களை கேவல படுத்தியுள்ளனர்... ஊடக விபசாரிகள் சங்கர் மற்றும் சுஜாதா... அப்படி இவர்கள் கருப்பானவர்களுக்கு உதாரணம் காட்ட விரும்பி இருந்தால்... இவர்கள் கடவுள்... கருப்பு ராமன் கருப்பான பெண்களை பெற்று கூட்டி கொடுப்பதாக காட்டியுருக்கலாமே?

ஆதிக்க வர்க்கத்தினர்... மேலும்... ஒரு முறை நிருபித்துள்ளனர்... தமிழனுக்கு சூடு சொரனை குறைவென்று....

Thursday, August 2, 2007

காவிரி நீர் பிரச்சனை...

காவிரி ஆறு தென்னிந்தியாவின் புனித நதியாக கருதப்படுகிறது. காவிரி மேற்கு தொடர்ச்சி மலையில் 1340 மீட்டர் உயரத்தில் இருந்து தோன்றி 800 கிலோ மீட்டர் பயணித்து காவிரி பூம்பட்டினத்தில் கடலோடு கலக்கிறது. காவிரியின் பாசன பகுதி 81,555 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 3.3 % கேரளாவிலும் 41.2 % கர்நாடகாவிலும் 55.5 % பகுதி தமிழ் நாட்டிலும் உள்ளது. காவிரி ஆறு மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது, 1. மேற்கு தொடர்ச்சி மலை 2. கர்நாடகா, 3. தமிழ் நாடு டெல்டா.

ஒரு ஆண்டிற்கு காவிரி நீரின் தேவை 730 டிஎம்சி ஆகும். காவிரி ஆற்றின் நீர் பகிர்வு கர்நாடகா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களால் 1824 ஆம் ஆண்டு சென்னை மற்றும் மைசூர் மாகானங்களுக்கு இடையே ஏற்ப்பட்ட ஒப்பந்ததின் படி பயன் படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் 150 ஆன்டுகள் 1974 வரை அமலில் இருந்தது.

நீர் பாசன தேவைக்காக 1932 இல் கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் 1934 இல் தமிழ் நாட்டில் மேட்டூர் அணை திட்டங்கள் தொடங்கப்பட்டன.

காவிரி நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆகும் வரை நீர் பங்கீட்டில் பெரிய அளவில் பிரச்சனை எதுவும் எழ வில்லை. ஆனால் கர்நாடகா அரசு காவிரி நீர் ஒப்பந்தததை மீறி பல அணை திட்டங்களை நிறைவேற்றியது.

கபினி (1959)
ஸ்வர்ணாவதி (1965)
கேரங்கி (1964)
கேமாவதி (1968)

1824 நதி நீர் ஒப்பந்தத்தை மீறி மேற்க்கண்ட அணைகளை கர்நாடகா கட்டிய போது, தமிழ் நாட்டிலும், கர்நாடாகாவிலும், மத்திய அரசிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. காமராசர், பக்தவச்சலம் ஆகியோர் தமிழக முதல் அமைச்சர்க்ளாகவும், நிஜலிங்கப்பா கர்நாடகா முதல் அமைச்சராகவும், நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தனர். ஆனால் யாருமே கர்நாடகாவின் அத்து மீறலை கண்டு கொள்ள வில்லை.

1974 ஆம் ஆண்டு காவிரி நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆன போது தமிழக அரசு, ஒப்பந்தத்தை நீட்டிக்க முயற்சி செய்தது. ஆனால் கர்நாடகா காவிரி நதி நீர் ஒப்பத்தம் ஏற்ப்பட விரும்பவில்லை. இதனால் தமிழ் நாடு அரசு காவிரி நீர் பங்கீட்டிற்காக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டது. ஆனால் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்ப்பட தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் கர்நாடகா முதல்வர் தேவராஜ் உரூஸ் இருவரையும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுகோள் விடுத்தார். அப்போதும் கூட கர்நாடகா பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தரவில்லை.

1976 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டு, தமிழ் நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1976 ஆம் ஆண்டு மத்தியில் இந்திரா தலைமையிலான மத்திய அரசு காவிரி நீர் பங்கீட்டிற்க்கான கீழ்கண்டவாறு ஆணையிட்டது.

ஓர் ஆண்டிற்க்கான பகிர்வு.

கர்நாடகா - 239 - 261 டிஎம்சி
கேரளா - 39 - 43 டிஎம்சி
தமிழ் நாடு & புதுச்சேரி - 393 - 414 டிஎம்சி

காவிரியின் மொத்த பயன்பாடு 671 - 880 டிஎம்சி என கணக்கிடப்பட்டது.

ஆனால் கர்நாடகா இந்த மத்திய அரசின் காவிரி பங்கீடு ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை.

1977 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக அரசு அரசு பதிவியேற்றது.

பொது தேர்தலில் இந்திரா தலைமையிலான் காங்கிரஸ் அரசு தோற்கடிக்கப்பட்டு மொராஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசு பதவியேற்றது.

கர்நாடகாவில் தேவராஜ் உருஸ் காங்கிரஸை உடைத்து தனியாக ஆட்சியை தொடர்ந்தார். புதிதாக பதவிக்கு வந்த எம்ஜிஆர் காவிரி நீர் பிரச்சனையை மறக்கவே விரும்பினார், அவரது கொள்கைப்படி முந்தய திமுக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.

இப்ப்டியாக மத்திய மாநில அரசுகள் காவிரி பிரச்சனையை கால்ப்பந்து விளையாடிய போது கர்நாடகா மேலும் ஒரு கோல் அடித்தது, அதாவது 1983 ஆம் ஆண்டு ஏகஞ்சி அணை திட்டத்தை நிறைவேற்றியது.

1982 இல் கர்நாடகாவில் ராமகிருஷ்ண கெட்டே தலைமையிம் ஜனதா அரசு அமைந்தது.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, ராஜிவ் காந்தி காங்கிரஸ் அரசின் பிரதமரானார்.

1987 டிசம்பர் இறுதியில் எம்ஜிஆர் இறந்த போது, வி.என்.ஜானகி அதிமுக அரசின் முதல்வர் ஆனார்.

1988 ஆம் ஆன்டு ஜனவரி 31 ஆம் தேதி வி.என்.ஜானகி தலைமையிலான் அதிமுக(ஜ) அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1988 அக்டோபர் மாதம் தொலைபேசி ஒட்டு கேட்ட பிரச்சனையில் ராமகிருஷ்ண கெக்டே பதவி விலகி எஸ்.ஆர்.பொம்மை கர்நாடகா ஜனதா அரசின் முதல்வர் ஆனார்.

1989 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.

1989 ஏப்ரல் மாதம் தேவகவுடா தலைமையில் கர்நாடகாவில் ஜனதா கட்சி உடைந்து, எஸ்.ஆர்.பொம்மை ஆட்சி கவிழ்க்கப்பட்டது. குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1989 நவம்பரில் நடந்த பொது தேர்தலில் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோற்க்கடிக்கப்பட்டு, விஸ்வநாத் பிரதாப் சிங் தலைமையில் தேசிய முன்னனி அரசு அமைந்தது. கர்நாடகாவில் வீரேந்திர பாட்டில் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.

1990 அக்டோபரில் கர்நாடகாவில் வீரேந்திர பாட்டில் பதவி விலகி எஸ்.பங்காரப்பா காங்கிரஸ் அரசின் முதல்வர் ஆனார்.

1990 நவம்பரில் மத வெறியை தூண்டி பாபர் மசூதியை இடிக்க கிளம்பிய எல்.கே.அத்வானி பிகாரில் கைது செய்யப்பட்டதாலும், மண்டல் குழு அறிக்கை அமல் படுத்தப்பட்டதாலும், மத வெறி கொண்ட சமூக நீதிக்கு எதிரான் பஜக தேசிய முன்னனி அரசை கவிழ்த்தது. வி.பி.சிங் பதவி விலகினார். பின்னர் ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து 54 எம்.பி.க்களை கொண்டு சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற பெயருடன் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் ஆட்சி அமைத்தார்.

1991 ஜனவர் 30 ஆம் தேதி தமிழ் நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, ஜெயலலிதா மற்றும் ராஜிவ் நிர்பந்தத்தால் கலைக்கப்பட்டு குடியரசு ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1991 மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சி, சந்திரசேகர் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதால், சந்திரசேகர் பதவி விலகினார்.

1991 ஜீன் மாதம் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி பி.வி.நரசிம்மராவ் தலைமையில் மத்திய அரசை அமைத்தது. தமிழ் நாட்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது.

1992 நவம்பரில் கம்யூட்டர் வாங்கிய ஊழலில் பங்காரப்பா பதவி விலகி, கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு வீரப்ப மொய்லி முதல்வரானார்.

1994 நவம்பரில் நடந்த கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அரசு தோற்க்கடிக்கப்பட்டு, எச்.டி.தேவகவுடா தலைமையில் ஜனதா தள் அரசு அமைந்தது.

1996 மே மாதம் நடந்த பொது தேர்தலில் தமிழ் நாட்டில் ஜெயலலிதா அரசு தோற்க்கடிக்கப்பட்டு, கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.

மத்திய அரசுக்கு எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் வாஜபாய் தலைமையில் சிறுபான்மை பஜக அரசு 13 நாட்கள் பதவியில் இருந்தது.

பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா தலைமையில் ஐக்கிய முன்னனி அரசு அமைந்தது.

கர்நாடகாவில் தேவகவுடாவிற்கு பின் ஜெ.எச்.பட்டேல் ஜனதா தள் அரசின் முதல்வரானார்.

1997 ஏப்ரல் தேவகவுடா பதவி விலகியதால் இந்திர குமார் குஜ்ரால் ஐக்கிய முன்னனி அரசின் பிரதமரானார்.

1997 நவம்பரில் காங்கிரஸ் ஐக்கிய முன்னனி அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டதால் குஜ்ரால் தலைமையிலான அரசு பதவி விலகியது.

1998 மார்ச் மாதம் நடந்த பொது தேர்தலில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் என்.டி.எ. அரசு அமைந்தது.

1999 மார்ச் மாதம் ஜெயலலிதா கலகம் செய்து வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை வில்க்கி கொண்டதால், வாஜ்பாய் தலைமையிலான என்.டி.எ. அரசு பதவி விலகியது.

1999 செப்டம்பரில் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையில் மீண்டும் என்.டி.எ. ஆட்சி அமைந்தது. கர்நாடகாவில் ஜனதா தள் அரசு தோற்க்க்டிக்கப்பட்டு, எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

2001 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார்.

2001 செப்டம்பர் மாதம் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தணடனை பெற்றிருந்ததால் உச்ச நீதி மன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தமிழ் நாடு முதல்வரானார்.

2002 மார்ச்சில் நிதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஊழலுக்கான தண்டனைகளில் இருந்து விடுதலை பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழ் நாட்டின் முதல்வரானார்.

2004 மே மாதம் நடந்த பொது தேர்தலில் வாஜ்பாய் அரசு தோற்க்க்டிக்கப்பட்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய ஜன்நானயக கூட்டனி அரசு அமைந்தது.

கர்நாடகாவில் தரம் சிங் த்லைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.

2006 ஜனவரியில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டு எச்.டி.குமாரசாமி தலைமையில் ஜனதா தள்(கே) அரசு அமைந்தது.

2006 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் ஜெயல்லிதாவின் அதிமுக அரசு தோற்க்கடிக்கப்பட்டு, கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.

மேலே குறிப்பிட்ட ஆட்சி மாற்றங்களாலும், கர்நாடகா அரசின் ஏமாற்று வேலைகளாலும், அரசியவாதிகளின் அலட்சியதாலும் காவிரி நீர் பிரச்சம்னைக்கு தீர்வு காணப்படவில்லை. ஆனால் கர்நாடகா மற்றும் தமிழ் நாடு அரசியல்வாதிகள் இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை என் சொல்லிக் கொண்டு டெல்லி, சென்னை, பெங்களூர் என சுற்றுலா சென்று அனுபவித்துதான் மிஞ்சியது. கர்நாடகா தமிழ் நாட்டை ஏமாற்றுவதில் பல வழிகளையும் கையாண்டது.

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முரசொலி மாறன் தலைமையிலான திமுக-கம்னிஸ்டு எம்.பி.க்கள் குழு தமிழகத்தின் சார்பில் பிரதமர் வி.பி.சிங் அவர்களை சந்தித்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க கோரியது. காங்கிரஸ் எம்.பி. வைஜெந்திமாலா பாலி இந்த தமிழக எம்.பி.க்கள் குழுவோடு பிரதமரை சந்தித்ததால் பின்னர் ஜெயலலிதாவால் பழிவாங்கப்பட்டார்.

கர்நாடகா அரசு காவிரி நடுவர் மன்றம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது.

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.பி.சிங் அரசில் நீர்வள் துறை அமைச்சராக இருந்த மனுபாய் கொட்டாடியா அவர்களால் பம்பாய் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி சிட்டதோஷ் முக்ர்ஜி தலைமையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

வி.பி.சிங் அரசின் இந்த முடிவுதான் காவிரி நீர் பிரச்சனையின் தீர்வுக்கு மைல் கல் ஆகும். இப்பிரச்சனையை மிச சரியாக கையாண்ட நேர்மையான பிரதமர் வி.பி.சிங் ஆவார்.

1990 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையிலான நடுவர் மன்ற குழு கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்தது.

1991 ஆம் ஆண்டு ஜீன் 25 ஆம் தேதி நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையிலான நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழ் நாட்டிற்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என ஆணையிட்டது.

இடைக்கால தீர்ப்புக்கான புள்ளி விபரம் கீழ்வருமாறு:

மேட்டூர் அணைக்கு வந்த நீரின் அளவு.

ஆண்டு அளவு - டிஎம்சி
1980- 81 392.01 *
1981- 82 403.20 *
1982- 83 173.09
1983- 84 230.37
1984- 85 284.36
1985- 86 158.28 **
1986- 87 187.36
1987- 88 103.90 **
1988- 89 187.37
1989- 90 175.64

* - மிக அதிகமான் அளவு நீர் வரத்து
** - மிக குறைவான அளவு நீர் வரத்து

மிக அதிகமான மற்றும் குறைவான நீர் வரத்துள்ள ஆண்டுகளை கணக்கில் கொள்ளாமல், மற்ற ஆண்டுகளின் சராசரி நீர் வரத்தான 205 டிஎம்சி நீரை தமிழ் நாட்டிற்கு வழங்க நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

ஆனால் கர்நாடகா நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு பதிலடியாக அம்மாநில முதல்வர் பங்காரப்பா, அவருடைய சம்பந்தி நடிகர் ராஜ்குமார், கன்னட வெறியர் வாட்டல் நாகராஜ் மூவரும் கர்நாடகாவில் மாநிலம் தழுவிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை 6 மாதங்களுக்கு டிசம்பர் 1991 வரை கட்டவிழுத்து விட்டனர். மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான் காங்கிரஸ் அரசும் இந்த தமிழர்களுக்கு எதிரன வன்முறை வெறியாட்டங்களை மவுன சாட்சியாக ஆதரித்தது.

1992 ஆம் ஆண்டு மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் பல வகைகளில், டெல்லியில் அலுவலகம் கூட ஒதுக்காமல் அவமானப்படுத்தப்பட்ட காவிரி நடுவர் மன்ற தலைவர் நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி, நடுவர் மன்றத்தில் இருந்து விலகினார்.

1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு பிரதமர் தலைமையில் காவிரி நீர் ஆணையம் அமைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு முயற்சி செய்தது. சில ஆண்டுகள் பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் அதிமுக தலைவி ஜெயலலிதா அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரதமர் தலைமையிலான ஆணையத்தை ஏற்றுக் கொள்ள முடியாது அறிவித்தார்.

2001 இல் இவர் முதல்வர் ஆன பிறகு பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையத்தில் செயல்பாடு முடக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி 5 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் தமிழ் நாட்டிற்கு 419 டிஎம்சி, கர்நாடகவிற்கு 270 டிஎம்சி, புதுசேரிக்கு 6 டிஎம்சி நீரை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என ஆணையிட்டுள்ளது... மேலும் தமிழக எல்லையில் கண்கெடுக்க பட்டு கர்நாடகா 192 டிஎம்சி நீரை தமிழ் நாட்டிற்கு திறந்து விட வேண்டும் எனவும் ஆணையில் குறிபிட்டுள்ளது...

தமிழ் நாடு அரசு இந்த தீர்ப்பை ஏற்று கொள்வதாகவும் சில குறைகளை நீக்க உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது...

ஆனால் கர்நாடகா இந்த நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று கொள்ள முடியாது எனவும் தமிழகதிற்கு நீரை திறந்து விட முடியாது எனவும் அறிவித்துள்ளது...

இந்த நியாயமான தீர்ப்புக்கு... காராணமான முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் நீர்வள துறை அமைச்சர் மனுபாய் கொட்டாடியா... இருவரும் நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டியவர்கள்.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் எத்தனை ஆண்டுகள் ஊசலாடுமோ தெரிய வில்லை...

தமிழக காவிரி டெல்டாவின் நிலை:

20 ஆண்டுகளுக்கு முன் தமிழக டெல்டா விவசாயிகள் நெல் உற்பத்தியில் நாட்டிலேயே சிறந்து விளங்கினர். இப்போது டெல்டாவில் விவசாயதிற்கு போதிய நீர் இல்லை. விவசாய தொழிலாளர்கள் ஒரிரு வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில் உள்ளனர், வருவாய் தேடி நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.காவிரி மற்றும் துனை ஆறுகளில் சரியான நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீரும் குறைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையை வைத்துதான் விவசாயம் செய்ய வேன்டியுள்ளது.

தமிழ் நாட்டின் டெல்டா பகுதியில் விவசாய நில்பரப்பு குறைந்துள்ளது.கர்நாடகாவின் உண்மை நிலை:கர்நாடகாவில் உள்ள அணைகளில் ஆண்டு முழுவதும் 365 நாட்களும், அணைகளின் முழு கொள்ளவிற்கு தேவைக்கதிகமாக, அவசியமில்லாமல், பயன்படாமல் காவிரி நீர் தேக்கி வைக்கப்படுகிறது.தேக்கி வைக்கப்படும் நீரின் அளவிற்கு கர்நாடகாவில் நில்மும் இல்லை.காவிரியிலும் கர்நாடகாவில் காவிரி அணைகளிலும் வெள்ள அபாயம் வரும் போதுதான் உபரியான வெள்ள நீர் தமிழ் நாட்டிற்கு திறந்து விடப்படுகிறது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்ன?அரசியலும், அரசியல்வாதிகளும்தான்...

சுயநல அரசியவாதிகள் - தேவராஜ் உரூஸ், தேவகவுடா

ஏமாற்று பேர்வழிகள் & குறுக்கு புத்தி குணம் கொண்ட அரசியவாதிகள் - பங்காரப்பா, ஜெயலலிதா, நரசிம்மராவ்

நிர்வாக திறமையற்ற மக்களைப் பற்றிய கவலையற்ற அரசியவாதி - எம்.ஜி.ஆர்.

இது போன்ற சுகபோகங்களிலும், லஞ்சத்திலும் , பதவி வெறி பிடித்த நாற்காலி நாயகர்களிடம் தீர்வை எதிர்பார்க்க முடியுமா?தீர்வுதான் என்ன?

1. நாட்டில் உள்ள அனைத்து நதிகளும் தேசியமயகாக்கப்பட வேண்டும். குறைந்தது மாநிலங்களுகிடையே ஓடும் நதிகளாவது தேசிய மயமாக்கப்பட வேண்டும்.

2. மத்திய அரசு தேசிய நதி நீர் ஆணையம் அமைக்க வேண்டும். உச்ச நீதி மன்றம், தேர்தல் ஆணையம் போல் சுதந்திரமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

3. அணைகளில் நீர் கட்டுப்பாடு பணிகள், தேக்குவது மற்றும் திற்ந்து விடுவது மத்திய மாநில் அரசுகள் சார்பற்ற நதி நீர் ஆணையத்திடம் வழங்கப்பட வேண்டும்.

4. மத்திய மாநில் அரசுகள் இந்த ஆணைய பணிகளில் தலையிடக் கூடாது.

5. அணு மின் நிலையங்களுக்கு இணையான பாதுகாப்பு, அணைகளுக்கு வழங்க வேண்டும்.

இவற்றை செய்தால்தான்... குறுக்கு புத்தியுடைய கொடூரமான ஜெயலலிதா, பங்காரப்பா போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து நதிகளை காப்பற்ற முடியும்.