Wednesday, August 31, 2011

கருணாநிதி... இந்த மானங்கெட்ட பொழப்புக்க்கு...

இதே கருணாநிதி 1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை ஈழத்திற்கு அனுப்பிய போது... அந்த சிங்கள பேரினவாதத்திற்கு ஏவல் செய்ய போகிறது என அம்ப்லபடுத்தி... நெடுமாறன், வீரமணி போன்றவர்களுடன் சேர்ந்து மனித சங்கிலி நடத்தினார்... அந்த கற்பழிப்பு படையில் ஆக்கிரமிப்பை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைக்க கேட்டவர்... 1990இல் ராஜிவ் அனுப்பிய படை கொலை... கற்பழிப்பு செய்தது என சொல்லி சென்னை துறைமுகத்திற்கு செல்ல மாட்டேன் என்றவர்... ராஜிவ் செத்த போது இவரைதான் கொலையாளி என ஜெயலலிதாவும், வாழபாடி ராமமூர்த்தியும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டனர்... இவரது கட்சிகாரர்கள் தெருவில் இழுத்து உதைக்கபட்டனர்... ஜெ... கட்சி மற்றும் காங்கிரஸ் ரவுடிகளால்... நளினியின் மரண தண்டனையை குறைத்த போது... குறைக்க கூடாது என்றவர் ஜெயலலிதா... 2006 தேர்தலில் ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணாநிதி கண்ணாம்மா எனும் படம் எடுத்து உதவி செய்தார் எனவும் பிரச்சாரம் செய்தார்... சுப.தமிழ் செல்வன் மறைவுக்கு கவிதை எழுதிய போது ஜெயலலிதா இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றார்...

இவ்வளவு நடந்த பின்னும்... குடும்பத்திற்காகவும்... குடும்பத்தினரின் சொத்து பணத்திற்காகவும்... கட்சியை காங்கிரஸ் பொறுக்கிகளுக்கு அடகு வைத்து இருக்கும் கருணாநிதி... இப்போது சோனியாவின் காலை மன்றாடி விடும் அறிக்கைகளை சோனியாவின் அல்லக்கைகள் கூட கண்டு கொள்ளமாட்டார்கள்...

ராஜாஜி, காமராசர், பெரியார், ஜெயபிரகாஷ் நாராயன், வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், கிருஷ்ணாகாந்த் போன்றவர்களுடன் அரசியல் செய்தவர் என பெருமையாக சொல்லி கொள்ளும் கருணாநிதிக்கு... பல நாடுகளுக்கு சென்று எதையும் ஒழுங்காக படிக்காத மடையன்... உலக பொறுக்கி ராகுலுடன் அரசியல் செய்வது இழிவாக தெரியாது... பணமும், பதவியும் படுத்தும் பாடு...

குடியரசு தினத்தில் அண்ணாவின் ஆணைகினங்க 1965 கருப்பு கொடி ஏற்றிய கட்சிகாரர் கருணாநிதி... இழிவான ஹிந்திய கொடியை ஏற்றும் வெறியில் இந்த ஆண்டு அண்ணா அறிவாலயத்தில்... கேடு கெட்ட ஹிந்திய கொடியை ஏற்றி அண்ணாவையும் இழிவுபடுத்தியுள்ளார்...

இப்போது அப்பாவிகளை கொலை செய்ய போகும் சோனியா-ராகுல் அரசின் முடிவை பற்றி கருணை மனு எழுதும் போது ராஜிவ் ஆவியை கூப்பிட்டு இருக்கிறார்...

ராஜிவ் ஆவி கூட என்ன சொல்லும்...

பதவி ஏற்றவுடன் 8500 சீக்கியர்களை கொலை செய்த ரத்த வெறியை தொடங்கிய ராஜிவுக்கு... அடுத்த மாதம் போபாலில் 15000 மக்களை கொலை செய்த ஆண்டர்சனை தனி விமானத்தை அனுப்பி அந்த கொலையிலும் பங்கெடுத்து கொண்ட ரத்த வெறிக்கு... அசாமில் போடோக்களை தூண்டிய ரத்த வெறிக்கு... ஈழத்தில் ஆயிரகணக்கான கொலை கற்பழிப்பு செய்த ராஜிவின் ரத்த வெறிக்கு... மாலதீவிற்கு ராணுவத்தை அனுப்பி கற்பழிப்பு கொலை நடத்திய ரத்த வெறிக்கு... இந்த 3 உயிர்களும் வேண்டும் என கேட்கத்தான் செய்யும்...

ராஜிவ் காந்தி போன்ற ரத்த காட்டேறியை துணைக்கு கூப்பிட்டு கருணாநிதி தன்னை தானே இழிவுபடுத்தி கொண்ட கேவலத்தைதான்... 65 ஆண்டு அரசியல் வாழ்வில் கற்று கொண்டதோ?

அண்ணா... அன்பழகன், நாஞ்சில் மனோகரன், செழியன், இராசாராம் போன்றவர்களை டெல்லிக்கு அனுப்பினார்... அவர்கள் கட்சிகாக வேலை செய்தனர்...

அண்ணாவிற்கு பிறகு அன்பழகன், இராசாராம் இருவரும் மாநில மந்திரியான பின்... டெல்லிக்கு சென்ற நாஞ்சிலையும், இராசாராமையும் கட்சியை விட்டு அனுப்பி விட்டு... மருமகன் மாறனை டெல்லி தூதர் ஆக்கிய கருணாநிதி... மாறனுக்கு போட்டியாக வந்த டாக்டர் கலாநிதியை... வை.கோபாலசாமியை வளர்த்து ஒரம் கட்டி... வைகோ கைமீறி போன பின்... ஜெயலலிதா போலிசு கொடுத்த அறிக்கை கொண்டு வைகோவை கட்சியை விட்டு விரட்டி... மாறனுக்கு பிறகு தயாநிதியை டெல்லி அனுப்பிய... அந்த கேடி குடும்பத்திற்கும்... கட்சிக்கும் துரோகம் செய்தது கண்டு... கேடி தயாநிதியை கட்டம் கட்டி விட்டு... கனிமொழியை அனுப்பி... இப்போது ஆள் கிடைக்காமல் காங்கிரஸ் அயோக்கியர்கள் சிறை போட்ட பிறகு... சோனியாவின் பாதத்தை விடாமல் கட்டி கொண்டிருக்கும் கருணாநிதியின் மானங்கெட்ட பொழப்புக்கு...

மாறன் கருணாநிதிக்கு நேர்மையாக டெல்லியில் தூதர் வேலை பார்த்தார்... தயாநிதி சொந்த வியாபாரத்திற்கு கருணாநிதியை காட்டி கொடுத்த கேடி... கனிமொழி காங்கிரசிடம் மாட்டி கொண்ட கொண்ட பலி ஆடு... இப்போது காங்கிரசை கழட்டி விட்டால் கருணாநிதி குடும்பத்தை சோத்துக்கு வழியில்லால் யாரும் நிறுத்தி விட போவதில்லை... ஆனால் குடும்ப பாசமும், பதவி வெறியும்.. கருணாநிதியை காங்கிரசோடு சேர்த்து வைத்துள்ளது... இதுதான் கருணாநிதி 60 ஆண்டுகள் சேர்த்திருந்த மானமுள்ள தலைவர் எனும் நிலையை இடித்து விட்டது... தான் திருந்தவே மாட்டேன் என சொல்லி கொண்டு... மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் இறக்கும்... கருணாநிதி செய்யும்... இந்த மானங்கெட்ட பொழப்புக்கு...