Thursday, March 1, 2018

ஜெயேந்திரன் - நினைவு கூர்தல்...

1939இல் கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இடம் பெயர்ந்த சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திரன் இன்று காலை இறந்தார்...


பெரியவா எனவும் ஜெயேந்கிர சரஸ்வதி ஸ்வாமிகள் எனவும் பார்ப்பனர்களாலும், தினமலர், துக்ளக், கல்கி, விகடன், குமுதம் போன்ற பத்திரிக்கைகளாலும் அழைக்கப்பட்டவர்... இன்று இவரின் மரணத்திற்காக ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனர்களோடு திக தலைவர் கி.வீரமணி, திமுகவின் மு.க.ஸ்டாலின், காங்கிரசின் திருநாவுக்கரசர் போன்றவர்களும் அதிர்ச்சி அடைந்து வருந்தி இருக்கிறார்கள்...


திருவாரூர் மாவட்டம் கோட்டூர் இருள்நீக்கி சுப்ரமணியன் என்கிற சுப்புனி, 1954இல் மடத்திற்கு நேந்து விடப்பட்டு ஜெயேந்திரன் ஆக அவதாரம் எடுத்து மாடாதிபதியாக இருந்த சந்திரசேகரனுக்கு உதவியாக இருந்ததாக சொல்கிறார்கள்...


ஜெயேந்திரன் இறப்பிற்காக ஆல் இன் ஆல் ஆர்.எஸ்.எஸ். அம்பி ராம சுப்புனி போன்றவர்கள் கதறி கொண்டிருக்கும் போது, அந்த இந்திரனை நினைவு கூற வேண்டி இருக்கிறது...
பொய் பித்தலாட்டங்களால் பார்ப்பன புனிதத்தை காப்பாற்ற உருவாக்கப்பட்ட 80 வருட பழைமையான மடத்தில் இருந்த ஜெயேந்திரன் சில உண்மைகளை உலகிற்கு சொல்லி விட்டு சென்றுள்ளார்.


1924இல் தூத்துக்குடியில் நடந்த சைவ சமய மாநாட்டில் பேசிய திருவிக மடங்களை பற்றி வரையரை செய்திருப்பார்... எப்படி? மடங்கள் என்பவை கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, விபசாரம் செய்பவர்களின் கூடாரமாக இருக்கிறது...


1924இல் பேசிய திருவிகவின் கூற்றை உண்மையென உலகிற்கு அறிய வைத்த பெருமை ஜெயேந்திரனையே சேரும்...


கடந்த 70 ஆண்டுகளாக இந்திய பெருமுதலாளிகள், ஆளும் வர்க்கம், நீதித் துறை, ஊடகம் என அனைத்து ஓடுக்குமுறை அமைப்புகளிடமும் உறவு வைத்துக் கொண்டு இவர்களுக்கு புரோக்கர் வேலை செய்வதை தொழிலாக கொண்ட இந்த மடத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக, காங்கிரஸ், ஜெ கட்சிகள், உச்ச நீதி மன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள், கல்கி, விகடன் போன்ற பத்திரிக்கை முதலாளிகள், பழைய பார்ப்பன பண்ணையார்கள் முதல் இன்றைய டாடா குழும தலைவர் சந்திரசேகரன் வரை அனைவரும் பக்தர்கள்...


குறிப்பாக ஜெயேந்திரனின் உச்சபட்ச சாதனை என்றால்... கொலை குற்றத்திற்காக 2004 நவம்பரில் தைரியலஷ்மி கைது செய்து வேலூர் சிறையில் அடைத்ததாக பெருமைபடுகிறார்கள்... வாழை இலையில் மலம் கழிப்பதுதான் லோக குருவின் மரபு என சொல்லி தைரியலஷ்மியின் சிறைத் துறையை வாழை இலை கொண்டு வர செய்தது...
சங்கரராமனை யார் கொலை செய்திருப்பார்கள் என பத்திரிக்கையார் கேள்வி கேட்ட போது, தன் காலில் முள் குத்தினாலே ரத்தம் வடிக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள், இவன் கொடுத்த ஹிம்சையை பார்த்த தனது பக்தர் யாரோ போட்டிருக்கலாம் என பதில் வந்தது.
கொலை வழக்கை விசாரணை செய்து வந்த புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிபதி ராமசாமியிடம் தீர்ப்பிற்காக பேரம் பேசியது... போன்றவை ஜெயேந்திரனை பற்றி குறிப்ப்டும்படியான செய்திகள்...


வழக்கின் விசாரணையின் போது விசாரணை அதிகாரி கூடுதல் கண்காணிப்பாளர் சக்திவேல் முதல் 100க்கும் அதிகமானவர்களின் பிறழ் சாட்சி அளித்தமையால் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போய் விட்டது, மற்றபடி விஷ்ணு காஞ்சி பெருமாள் கோயிலில் சங்கரராமன் வெட்டப்பட்ட பின்னர் அலைபேசியில் அசிரிரி மூலம் வெட்டி முடிக்கபட்டது செய்தி வந்தது, மடத்து ஐசிஐசிஐ வங்கி வங்கி கணக்கில் இருந்து வெட்டிவர்களுக்கு கடவுள்களில் சங்கரனோ, சுப்ரமணியனோ, இந்திரனோ பணத்தை அனுப்பி இருக்கிறார்கள்... இப்படியாக கடவுளர்களை விட மேன்மையானவர் என தெரியபடுத்தியவர் ஜெயேந்திரன்...


2002 பிப்ரவரில் குஜராத்தில் அரசால் நடத்தபட்ட நரவேட்டைக்கு சில நாட் களுக்கு முன்னர் அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதி இருந்த பிரச்சனைக்குரிய இடத்தை விஷ்வ இந்து பரிஷதிடம் பிடுங்கி கொடுக்க பஞ்சயத்து செய்ய சென்றவர் இந்த ஜெயேந்திரன்... இதுதான் பின்னாள் நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு தொடக்கபுள்ளி...


சாமியார்கள் அரசியலில் தலையிடலாமா என கேட்ட போது, தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறினால் பட்டியல் சாதி இடஒதுக்கீடு கொடுக்க கூடாது நேருவிடம் சொல்லி மாற்றிவர் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரன், அதன் வழியில் தானும் அரசிற்கு ஆணையிட முடியும் என்றார் ஜெயேந்திரன்...


சேரி மக்கள் மதம் மாற கூடாது என சொல்லி சேரி மக்களுக்கு தரிசனம் காட்ட ஜெயேந்திரன் சென்ற போது, இவரிடம் நெருங்கும் சேரி மக்கள் சுத்தமாக இல்லை, அதனால் ஒழுங்காக அழுக்கு தேர்த்து குளிக்க ஆணையிட்டார், ஆனால் இவர் ஒழுங்காக பல் விளக்கினால் நன்றாக இருக்கும் என இவரிடம் நெருங்கி சென்ற மகளிர் சொன்னதாக ரவி சுப்பிரமணியன் எழுதி இருந்தார்...


ஜெயேந்திரனின் பொன் மொழிகள் என சொல்வதானால் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள், விதவைகள் களர் நிலம் என்பவை...


காஞ்சிபுரம் ஏகாமரம் கோயிலுக்கு சென்றால் ஏகாம்பரமும் மனைவி காமாட்சியும் தனி கோயில் என இல்லாமல் சிலைகளை ஒரே கல்லில் செதுக்கி இருப்பார்கள், அந்த ஏகாம்பரம் மனைவி காமாட்சியை பிரித்து தனியே வைத்து கொள்ளையடிக்கும் மாபியா தலைவர் ஜெயேந்திரன்...


குடியரசு தலைவர், பிரதமர், முதல் அமைச்சர்கள், மத்திய அரசு, மாநில அரசு, உச்ச நீதி மன்றம் என அனைவருக்கும் ஆணையிடும் அதிகாரத்தை பார்ப்பன புனிதம் எனும் பிம்பத்தால் கட்டமைத்திருந்ததை தகர்த்து காஞ்சிபுரம் சங்கரமடம் என்பது கொலை, கொள்ளை, புரோக்கர் வேலை, விபசாரம் போன்ற குற்ற செயல்கள் செய்வதற்கு உரிமம் பெற்ற இடம் என உலகிற்கு புரிய வைத்த பெருமைகுரியவர் ஜெயேந்திரன்...


ஜெயேந்திரனின் ஆன்மீக பணி என எதுவும் இல்லையா என்றால் காமாட்சி அம்மன் கருவறைக்கு முன்னாள் ஜெயேந்திரன் அருளிய செளந்தர்ய லகரி என எழுதி சமஸ்கிருத வார்த்தைகளை தமிழ் எழுத்துக்களில் எழுதி இருப்பார்கள்... அதன் அர்த்தத்தை சமஸ்கிருதம் தெரிந்த ஆன்மீக அன்பர்கள் படித்து ஜெயேந்திரனின் மந்திர சக்தியை புகழ்ந்து எழுதலாம்...


இனி என்ன?
இந்த சங்கரமடத்திற்கான குற்ற செயல்களுக்கான கல்யாண குணங்களை ஜெயேந்திரனை விட கேவலமான கிரிமினல் விஜயேந்திரன் தலைமையேற்று தனது பெருமைகளை இன்னும் சிறப்பாக  உலகிற்கு புரிய வைக்க முடியும்...

Tuesday, May 22, 2012

மதுரை ஆதினம்... அருணகிரி... நித்யானந்தா...

கடந்த நான்கு வாரங்களாக செய்தி ஊடங்கள்... காட்சி ஊடங்கள்... இணையம் என நிறைய இடங்களில் விவாத பொருளாக இருப்பது மதுரை ஆதினம்... நித்யானந்தா...

சைவ சமய மடமான மதுரை ஆதினத்தின் புனிதம் கெட்டு விட்டது என்கிறார்கள்... தன்னை காங்கிரசு கட்சி என சொல்லி கொள்ளும் ஜெயலலிதா காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணன் தலைமையில் மதுரை ஆதின மீட்பு குழு போராட்டம் நடத்துகிறது...

ஹிந்து மதத்தின் புனிதம் கெட்டு விட்டது என ஹிந்து மக்கள் கட்சி... அர்ஜுன் சம்பத்ஜி தலைமையில் போராட்டம் நடத்துகிறது...

தர்மபுரம், திருப்பனந்தாள், திருவாடுதுறை ஆதினம் என இன்னொரு குழு வழக்கு போட்டு நடத்துகிறது...

சங்கராச்சாரி இருள் நீக்கி சுப்புணி வேறு கண்டித்து கொண்டிருக்கிறான்...

திருவண்ணாமலை ராஜசேகரன் டி.எம்.இ. பட்டயம் படித்து விட்டு... வேலை செய்து பிழைக்க துப்பில்லாமல் மக்களை ஏமாற்றி மோசடி செய்து மடாதிபதி ஆகி விட்டான்... அவனுக்கு அவன் சுயசாதிகாரர்களான ஆற்காடு முதலியார், துளுவ வேளாளர், அகமுடைய முதலியார் என சொல்லி கொள்ளும் வட மாவட்ட ஆதிக்க சாதியினரால் நிதி உதவி மட்டுமல்ல... பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் திட்டமிட்டே சாதி வெறியில் வளர்க்கபட்டவன்தான் நித்யானந்தா... இப்படி சாதி வெறியர்களால் வளர்க்கபட்டவன் நல்ல கேடி ஆகி கிரிமனல் ஆகி... நலிந்த அரசியல் எழுத்தாளரை கொண்டு விகடன் போன்ற பொறுக்கி பத்திரிக்கையில் நித்யானந்தா எனும் பெயரில் எழுத வைத்து... ஆண் விபசாரி சாரு நிவேதிதா போன்ற எச்சில் பொறுக்கிகளுக்கு கறி துண்டை எறிந்து வருடி எழுத வைத்தான் நித்தி...

இதற்கு எல்லாம் ஏது பணம்... இந்த கிரிமினல் நித்தி குறி வைத்தது யார் பணத்தை? ஐடி துறையை சீனியர் கிரிமினல் டபுள் ஸ்ரீ ஆக்கிரமித்து கொள்ளையடிக்கிறான்... என்ன செய்வது நித்தி தொழிலாளர்கள் நிறைந்து இருக்கும் ஓசூர், வேலூர் போன்ற ஊர்களையும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஊத்தங்கரை, பருகூர், கிருட்டிணகிரி, அரூர் போன்ற ஊர்களையும் ஆக்கிரமித்து மக்களை ஏமாற்றினான்...

மதுரை ஆதினமாக இருக்கும் அருணகிரி எப்படி? இவர் கொஞ்ச காலம் திராவிட அரசியல் தொடர்பில் இருந்ததாக சொல்கிறார்கள்... அருணகிரிக்கும் சங்கராச்சாரிகள் என்றால் ஆகவே ஆகாது...  அருணகிரி அடிக்கடி சங்கராச்சாரிகளை பற்றி உதிர்க்கும் கருத்து... பூசுவது திருநீறு... பேசுவது ஹரிநாமம்... என்னடான்னா சங்கராச்சாரி பயலுவ சைவ சமயம் பயன்படுத்தும் திருநீறை பூசி கொண்டு... நாமகாரன் ஹரி நாமம் பேசுறானுவ என அம்பலபடுத்திய ஆதினம்... 2004இல் கும்பகோணத்தில் நடந்த மகாமகத்தில் சங்கராச்சாரிதான் குளத்தில் முதலில் முங்க வேண்டும் எனும் ஆகம விதியை எதிர்த்து சங்கராச்சாரிக்கு முன்னரே குளத்தில் குதித்து முங்கியவர்... கடந்த 10 ஆண்டுகளாக ஆதினம் அருணகிரியின் சகவாசம் சசிகலா கணவர் ம.நடராசனுடன் திரிந்து கொண்டு இருப்பவர்... கடந்த 2004ஆம் ஆண்டில் சேலத்து பொடியன் ஒருவன் குட்டி சாமியார் எனும் பெயரில் கிளம்பிய போது அருணகிரி ஆதரித்தார்... (அந்த பொடியன் இப்போ எங்கே கேடியாக திரிகிறான் என தெரியவில்லை) அப்போது சேலத்து பொடியனின் பெற்றோரை சங்கரமடம் தொடர்பு கொண்டு நம்மளவா ஆதினம் எல்லாம் கூட சேர கூடாது ஆதினத்திற்கு ஆப்பு வைத்தான்கள் பெரிய/சின்ன சங்கராச்சாரிகள்...

நித்யானந்தா ஒரு நாளும் பார்ப்பனீயத்தை பகைத்து கொள்ளாமல் நவீன பாப்பான திரிந்து விபசாரம் செய்து வருபவன்... அருணகிரி இன்னொரு துருவத்தில் பார்ப்பன சங்கராச்சாரிகளை எதிர்த்து ஆதினமாக திரிபவர்...

இப்போது நித்யானந்தாவுக்கு முடி சூட்டி இருப்பத்தை எதிர்ப்பவர்கள் யார்? என்ன காரணம் சொல்கிறார்கள்?

1. இந்து மக்கள் கட்சி
2. ஜெகத் குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
3. ஆதினங்கள்
4. ஆதின மீட்பு குழு - ஜிப்பா சட்டை போட்ட ஜெயலலிதா காங்கிரசு நெல்லை கண்ணன்

இந்து மக்கள் கட்சி... இந்து முன்னணி வீர துறவி என சொல்லி கொள்ளும் பேடி பயல் ராம கோபாலனிடம் டூ விட்டு தனி கட்சி தொடங்கி கோவையில் செட்டில் ஆன கேடி தயானந்த சரசுவதி ஆசி பெற்ற அர்ஜுன் சம்பத்... 2007இல் திருவரங்கத்தில் பெரியாரை சிலையை உடைந்த கிரிமினல்... இந்த இந்து மக்கள் கட்சி 2004-05இல் சங்கராச்சாரில் கொலை கேசில் மாட்டிய போது... சங்கராச்சாரிகள் ஆண் விபசாரம் செய்து அம்பலபட்ட போது... கிருத்துவர்களும், இஸ்லாமியர்கள் தூண்டி விட்டு ஹிந்து மத புனிதத்தை கெடுக்கிறார்கள் என போராட்டம் செய்த கும்பல்... 2010 அதே ஆண் விபசாரம் செய்த நித்யானந்தா மாட்டிய போது நித்தி மடத்தை உடைத்தவர்கள்தான் இந்து மக்கள் கட்சி... இவர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பாருங்கள்... பார்ப்பன சங்கராச்சாரிகள் கொலை மற்றும் ஆண் விபசாரம் செய்தால் புனிதம்... அகமுடைய ஆற்காடு முதலியார் நித்தி ஆண் விபசாரம் செய்தால் இந்து மதத்திற்கு இழிவாம்...

ஜெகத் குருக்கள் யார்? சின்ன சங்கராச்சாரி முக்கிய நடிகை ஒருவரை வைப்பாட்டியாக வைத்திருக்கிறான்... திருத்தணி அருகில் இருக்கும் விருந்தினர் விடுதியில் விபசாரம் செய்கிறான்... பெரிய சங்கராச்சாரி கொலை கேசில் குற்றவாளி-1 ஆக உள்ளே போன போது... தமிழ் நாட்டில் வராமல் ஆந்திராவில் பதுங்கி இருந்து விட்டு... பேடி மாதிரி வந்த போது தமிழக எல்லையில் வரவேற்று திருத்தணி விருந்தினர் விடுதிக்கு கூட்டி கொண்டு போய் மாமா வேலை செய்தவன் ஹிந்து ராம்... பின்னர் 2004 டிசம்பர் சுனாமிக்கு பிறகு கொலை கேசில் குற்றவாளி-2 சின்ன சங்கராச்சாரி பிடிக்கபட்டு சென்னை மத்திய சிறைக்கு வந்த போது தேனில் ஊற வைத்த பாதாம், பிஸ்தா போன்ற பல வாளி பொருட்களோடு உள்ளே போனவன்... பெரிய சங்கராச்சாரி பொறுக்கிதனம் தெரிந்த செய்திதானே? கணவர் இல்லாத பெண்களை வறட்டு நிலம் என்றவன்... 1986இல் மடத்தில் தண்டத்தை போட்டு விட்டு பெண்ணை ஏமாற்றி கூட்டி கொண்டு தலை காவிரிக்கு ஓடியவன்... இந்த ரெண்டு பயலுவதான் பொறுக்கி பயலுவ... கொலைகார பயலுவ என்றால்... மகா பெரியவா மாதிரி வராது எனவும் சொல்வார்கள்... இந்த கேடி பயலுவ சுப்புணி ஜெயேந்திரன்... சங்கரன் விஜயேந்திரன்... இவனுவல விட கேடு கெட்ட பஞ்சை அயோக்கியன் செத்து போன சங்கராச்சாரி சந்திரசேகரன்... 1950இல் ஒடுக்கபட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது நேருவிடம் அரசியல் செய்த அயோக்கியன்... விதவையான பிரதமரை ஒளிந்து கொண்டு ஜன்னல் வழியாக கை நீட்டி ஆசிர்வாதம் செய்தவன்... தமிழை நீச பாஷை என சொல்லி... தமிழில் பேசினால் தீட்டு என குளித்தவன்...

ஆதினங்களின் அசிங்கம் வெளியே தெரியாத ஒன்றா? திருபனந்தாள் ஆதினத்தின் பதவி சண்டையில் முத்துகுமார சாமி தம்பிரான் சுவாமிகள் அங்கிருந்து இருந்து விரட்டபட்டு மயிலாப்பூரில் வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறாரே? 2002இல் திருவாடுதுறை ஆதின பதவி சண்டையில் பெரிய ஆதினத்தை விஷம் கொடுத்த சின்ன ஆதினம் கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யபட்டு விரட்டபட்ட கதை தெரிந்த ஒன்றுதானே... அந்த சின்ன ஆதினம் பல நடிகைகளை கூப்பிட்டு விபசாரம் செய்ததாக சொன்ன போது பெரிய ஆதினத்திற்கு சிறுவர்களுடன் ஓரின சேர்க்கை இருக்கிறது என குற்றம் சாட்டபட்டதே? திருவாடுதுறை பெரிய ஆதினத்திற்கு தீய பழக்கங்கள் உண்டு என பத்திரிக்கையில் சிற்பி மணி நாகப்பா எழுதிய போது ஏனப்பா ஆதினம் பொங்க வில்லை? இந்த ஆதினங்கள் மதுரை ஆதினத்திடம் என்ன பிரச்சனை? ஏற்கெனவே இவர்கள் மதுரை ஆதினம் பிச்சைகார ஆதினம் என மதிக்கவே மாட்டார்களே? மதுரை ஆதினத்திற்கு ஒரு ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டும்தானே சொந்தம்... ஆனால் திருபனந்தாள், திருவாடுதுறை, தர்ம்புரம் ஆதினங்களுக்கு பத்து ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நிலம் சொந்தம் ஆயிற்றே... இன்னொரு பிரச்சனை ஆதின சொத்துக்களை சைவ பிள்ளைமார் சாதியினர் மட்டுமே அனுபவிக்க வேண்டும்... கீழ் சாதி தொண்டை மண்டல் ஆற்காடு முதலியார் எப்படி அனுபவிக்கலாம்? அறியபடும் நீதி ஆதினங்களில் சைவ பிள்ளைமார்கள் விபசாரம் முதல் என்ன கேவலமும் செய்ய உரிமம் உண்டு...

ஜிப்பாகாரன் நெல்லை கண்ணன்... இவனை தமிழ் கடல் என்கிறார்கள்... காரணம் பார்ப்பனர்களின் மூத்திரத்தை குடித்து உடல் எல்லாம் உப்பு நீராகி விட்டத்தால் கடல் என்கிறார்களோ... தமிழை பேசி கொண்டு விபசாரம் செய்து திரிபவன்... காங்கிரசு கட்சியில் ஜெயலலிதா கோஷ்டியை சேர்ந்தவன்... இவனுக்கும் ஆதினத்திற்கும் என்ன பிரச்சனை என தெரியவில்லை...

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியில் இருந்து என்னிடம் நிறைய பேர் மதுரை ஆதினம் பற்றி கேட்கிறார்கள்... மதுரை ஆதினத்திற்காக வருந்துகிறார்கள்... அவர்களிடம் நான் சொன்ன செய்தி... கடவுளின் பெயரால் நடப்பவை அனைத்துமே அநியாயம், அயோக்கிதனங்களே... கடவுள் யார் பக்கம்... ஹிந்து மதத்தின் திருப்பதி வெங்கடன் யாருக்கு பங்காளியாக இருக்கிறான்... ஏழை மக்களுக்கா? இல்லையே? மக்களை சுரண்டும் கொள்ளைகாரர்கள் அம்பானியும், இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ஹிந்தியா சிமெண்ட் ஸ்ரீநிவாசன் போன்றவர்களும் கொலைகார பாசிஸ்டுகள் ராஜபக்சே, மோடி, ஜெயலலிதா போன்றவர்கள்தானே? இது போன்ற மடங்கள் எல்லாமே கொலைகாரர்களின் கூடாரமாகவும், விபசார நிலையமாகவும் மட்டுமே இருக்கிறது... இந்த மடங்களை பற்றி நான் சொல்லவில்லை... 1923இல் தூத்துகுடியில் நடந்த சைவ சமய மாநாட்டில் பேசிய திரு.வி.க. மடங்கள் எல்லாம் கொலை, கொள்ளை நடத்தும் சதி செய்யும் இடங்கள் எனவும், ஆண் விபசார நிலையங்கள் என பேசி இருக்கிறார்... அதனால் மடங்கள் பொறுக்கிகளின் ஆட்டமும், விபசராமும் இயற்கையானதே... அதற்கு நித்யானந்தா சரியானவந்தானே கேட்ட போது மக்கள் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்...

இவர்கள் இன்னும் தெளிவாக அம்பலமாக வேண்டுமானல் கொலகார சங்கராச்சாரிகளுக்கு கொலை வழக்கில் தண்டனை கிடைக்க வேண்டும்... 2007இல் பண மோசடி, பெண்களிடம் பாலியல் குற்றங்கள் செய்த குண்டர் சட்டத்தில் உள்ளே போய் வந்த ஸ்ரீரங்கத்து கிரிமினல்... ஸ்ரீரங்கம் ஜீயர் ஆக வேண்டும்...

முற்போக்கானவர்கள் கூட இப்போது நித்யானந்தா பார்ப்பன ஹிந்து மதத்தை அழிக்க வந்தவர் போல பேசுகிறார்கள்... ஆனால் நித்தி ஒரு போதும் பார்ப்பனர்களுடன் முரணை ஏற்படுத்தி கொண்டதே இல்லை... நமது வேலை திரு.வி.க., பெரியார் என மக்கள் தலைவர்கள் சொன்ன மடங்கள் எல்லாம் மக்களுக்கானது இல்லை... கொலைக்கும், கொள்ளைக்கும், ஆண் விபசாரத்திற்கும் பயன்படுவதே மடங்கள் என மக்களிடம் அம்பலபடுத்துவதே நமது வேலையாக இருக்கிறது...

பார்ப்பன ஹிந்து மதம் அதன் புனித நூலிலோ, மத தலைமை என எதிலுமே இல்லையே? பார்ப்பன ஹிந்து மதம் என்பது செத்து போன ஒன்றுதானே? அந்த பிண துர்நாற்றம்தான் இந்து மதம்... 1991 மே 21இல் பிண்டமான முண்டத்தின் பிண துர்நாற்றத்தில் அரசியல் செய்து வரும் சென்னை மாகாண காங்கிரசுகார பிணங்களுக்கு சமமானவர்களே... ஹிந்து மத மடாதிபதிகள்...

பார்ப்பன ஹிந்து மதம் எங்கிருக்கிறது? ஹிந்து மதம் இருப்பது அப்பாவி மக்களின் அறியாமையில்தானே? குறுக்கு புத்திகாரர்கள் தேடும் சுருக்கு பாதையில்தானே? சுய நலகாரர்களின் அழுக்கு மனங்களில்தானே? இந்த கேடுகளை எதிர் போராடுவதுதான் பகுத்தறிவாளர்களின் வேலை... இந்த வேலையை ஒரு நாளும் நித்தி போன்ற சாக்கடை பன்றிகள் செய்ய முடியாது...

Saturday, November 12, 2011

க.சுப்பு... அவர்களுக்கு அஞ்சலி...நான் அரசியலை பற்றி தெரிந்து கொண்ட சிறு வயது நிகழ்வுகளில் க.சுப்புவும் ஒருவர்... 1979 என நினைவு.... துக்ளக் பத்திரிக்கையில் அட்டையில் கேலி படத்தில் மூன்று பேர்... மேசை மீது நிற்பதாகவும் அவர்களில் ஒருவர் வேட்டி உருவபட்டு ஜட்டியோடு நிற்பதாக படம்... அந்த மூன்று பேரின் பெயர்கள் துரைமுருகன், ரகுமான்கான், மற்றும் க.சுப்பு... அதில் வேட்டி இல்லாதவரின் பெயர்தான் க.சுப்பு... அப்போது நான் மூன்றாவது படித்து கொண்டு இருந்தேன்... என் அண்ணன் நான்காவது படித்து கொண்டு இருந்தார்... அவர்தான் விளக்கினார்... இந்த மூன்று பேரும் திமுகவினர், இவர்கள் நிறைய கேள்வி கேட்கிறார்கள்... இவர்களுக்கு பதில் சொல்ல முடியாத எம்ஜிஆர் கட்சிகாரர்கள் இவர்கள் விரட்டுக்கிறார்கள்... க.சுப்புவின் வேட்டியை அவிழ்த்து விட்டார்கள் என்றார்... அதன் பிறகு மூன்றாவதில் இருந்து துக்ளக் படிக்க பழகினோம்... நிறைய அரசியல் செய்திகளை படித்தோம்... எனது அரசியல் ஆர்வதிற்கு க.சுப்புவின் வேட்டி அவிழ்ப்பு நிகழ்வும் ஒரு காரணாமாக இருந்தது... அதனால்தான் இந்த பதிவை எழுதி க.சுப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்...

க.சுப்பு... இராசபாளையத்தை சேர்ந்தவர்... இளங்கலை பட்டம் படித்தவர்... பின்னர் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் பயிற்சி பெறாத... பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர்... கூடவே இந்திய பொதுவுடமை கட்சியில் இணைத்து கொண்டார்... தொழிற்சங்க தலைவரானார். 1971 தேர்தலில் இராசபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அந்த பகுதியில் இருந்த முதலாளிகளுக்கு பிரச்சனையாக இருந்தார்... அந்த முதலாளிகள் இவரை சென்னை பெயர்த்த பின்... திமுகவில் இணைத்து கொண்டார்... இவர் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் என்பதால் தொழிலாளர்கள் நிறைந்த வில்லிவாக்கம் தொகுதியில் 1977இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்... அப்போது 1977,78,79 ஆண்டுகளில் தமிழ் நாடு சட்டமன்றத்தில் எம்ஜிஆர் கட்சிக்கு பெரும் பிரச்சனையாக இருந்தார்... அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை மழையாக பொழிவதாக திமுக தலைவர் புகழ்ந்தார்... 1980 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தோல்வி அடைந்தார்...

1982இல் திருசெந்தூர் கோயில் வேலை திருடி விட்டார்கள் என மதுரையில் இருந்து கருணாநிதி பாத யாத்திரை போராட்டம் நடத்திய போது அந்த போராட்டத்தில் கருணாநிதியோடு தீவிரமாக கலந்து கொண்டார்... பின்னர் ஜெ. கட்சியில் இருந்த போது கால்கள் அகற்றபட்ட போது கருணாநிதிக்காக இந்த கால்கள் நடந்தது... இப்போது கால்கள் இல்லாமல் போய் விட்டது என வருந்தி பத்திரிக்கையில் பேட்டியும் கொடுத்தார்...

1983இல் க.சுப்பு எம்ஜிஆர் கட்சியில் சேர்ந்தார்... 1984 தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் நாஞ்சில் மனோகரனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்...

எம்ஜிஆர் இறந்த பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்... அந்த நாதாரி பயல் ஒழிந்த பின் நடந்த 1991 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் 900 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோல்வி அடைந்தார்...

ஒரு மனித உரிமை அமைப்பை தொடங்கினார்... கூடவே ஆர்.ஆர்.கோபாலுடன் சேர்ந்து தொடங்கிய பத்திரிக்கை நக்கீரனை பின்னர் கோபால் முழு பங்கையும் எடுத்து கொண்டார்... பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதா... அதிகாரத்திற்கு வந்த பின் முதன் முதலில் அஞ்சாமல்... 1991 சூலை மாதம்... இங்கேயும் ஒரு ஹிட்லர் என தொடர் எழுதினார்... இதனால் ஜெவின் அல்லகையாக இருந்த வாழபாடி ராமமூர்த்தி காங்கிரஸை விட்டு நீக்கினார்... அதற்கும் பதிலாக வாழபாடி ஒரு நியமன தலைவர்... தானும் ஒரு நியமனம்... ஒரு நியமனம் எப்படி இன்னொரு நியமனத்தை நீக்க முடியும் என பஞ்ச் கொடுத்தார்... இதன் பின் க.சுப்பு பரபரப்பு அரசியலில் இருந்து அப்புறபடுத்தபட்டார்...

1996இல் மூப்ஸ் தமாக தொடங்கிய போது அதில் சேர்ந்து இருந்து விட்டு... 2001இல் ஜெ... கட்சியில் சேர்ந்தார்... பின்னர் நீரழிவு நோயினால் அவரது கால்கள் அகற்றபட்டன... கால்கள் அகற்றபட்ட போதும் ஆர்வமுடன் ஜெடிவியில் அரசியல் விவாதகளில் கலந்து கொண்டு கொஞ்சம் நாகரீகமாக பேசுவார்... மற்றபடி நாகரீகத்திற்கும் ஜெவுக்கோ அவர் டிவிக்கோ தொடர்பு இல்லையே? 2006 தேர்தலில் ஜெ... கட்சி தோல்வி அடைந்த போது ஜெடிவியில் தனி ஆளாக அரசியல் விவாதம் செய்தார்... 2006இல் ஜெ. கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகள் பற்றி வகுப்பு நடத்தினார்...

2007இல் கருணாநிதிக்கு நடந்த சட்டமன்ற பொன்விழாவிற்க்கு வாழ்த்து செய்தி வழங்கியதால்... ஜெ. கட்சியில் இருந்து விரட்டபட்டு... திமுகவில் சேர்ந்தார்... இறுதி வரை திமுகவில் இருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மறைந்தார்...

தமிழ் பேச்சை கொண்டு அரசியல் விபசாரியாக திரியும் நெல்லை கண்ணன் போன்ற பொறுக்கிகளை போல் அல்லாமல்... பல கட்சிகளில் இருந்தாலும் நாகரீகமாகவே செயல்பட்டார்...

க.சுப்பு பல கட்சிகளில் இருந்தாலும் அவருக்கு மரியாதை தந்தது பேச்சாற்றலும், பொதுவுடமை கொள்கை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள்... தொடக்கத்தில் நக்கல்பாரிகள் இயக்க தலைவர் ஏ.எம்.கோதண்டராமனுடன் தொடர்பு வைத்திருந்தார்... அந்த நட்பிற்காக நக்கல்பாரிகள் மீதான போலி என்கவுண்டர் கொலைகளை எதிர்க்க மனித உரிமை அமைப்பை தொடங்கினாராம்...

க.சுப்புவிற்கு ஆழ்ந்த அஞ்சலி...

Wednesday, August 31, 2011

கருணாநிதி... இந்த மானங்கெட்ட பொழப்புக்க்கு...

இதே கருணாநிதி 1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை ஈழத்திற்கு அனுப்பிய போது... அந்த சிங்கள பேரினவாதத்திற்கு ஏவல் செய்ய போகிறது என அம்ப்லபடுத்தி... நெடுமாறன், வீரமணி போன்றவர்களுடன் சேர்ந்து மனித சங்கிலி நடத்தினார்... அந்த கற்பழிப்பு படையில் ஆக்கிரமிப்பை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைக்க கேட்டவர்... 1990இல் ராஜிவ் அனுப்பிய படை கொலை... கற்பழிப்பு செய்தது என சொல்லி சென்னை துறைமுகத்திற்கு செல்ல மாட்டேன் என்றவர்... ராஜிவ் செத்த போது இவரைதான் கொலையாளி என ஜெயலலிதாவும், வாழபாடி ராமமூர்த்தியும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டனர்... இவரது கட்சிகாரர்கள் தெருவில் இழுத்து உதைக்கபட்டனர்... ஜெ... கட்சி மற்றும் காங்கிரஸ் ரவுடிகளால்... நளினியின் மரண தண்டனையை குறைத்த போது... குறைக்க கூடாது என்றவர் ஜெயலலிதா... 2006 தேர்தலில் ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணாநிதி கண்ணாம்மா எனும் படம் எடுத்து உதவி செய்தார் எனவும் பிரச்சாரம் செய்தார்... சுப.தமிழ் செல்வன் மறைவுக்கு கவிதை எழுதிய போது ஜெயலலிதா இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றார்...

இவ்வளவு நடந்த பின்னும்... குடும்பத்திற்காகவும்... குடும்பத்தினரின் சொத்து பணத்திற்காகவும்... கட்சியை காங்கிரஸ் பொறுக்கிகளுக்கு அடகு வைத்து இருக்கும் கருணாநிதி... இப்போது சோனியாவின் காலை மன்றாடி விடும் அறிக்கைகளை சோனியாவின் அல்லக்கைகள் கூட கண்டு கொள்ளமாட்டார்கள்...

ராஜாஜி, காமராசர், பெரியார், ஜெயபிரகாஷ் நாராயன், வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், கிருஷ்ணாகாந்த் போன்றவர்களுடன் அரசியல் செய்தவர் என பெருமையாக சொல்லி கொள்ளும் கருணாநிதிக்கு... பல நாடுகளுக்கு சென்று எதையும் ஒழுங்காக படிக்காத மடையன்... உலக பொறுக்கி ராகுலுடன் அரசியல் செய்வது இழிவாக தெரியாது... பணமும், பதவியும் படுத்தும் பாடு...

குடியரசு தினத்தில் அண்ணாவின் ஆணைகினங்க 1965 கருப்பு கொடி ஏற்றிய கட்சிகாரர் கருணாநிதி... இழிவான ஹிந்திய கொடியை ஏற்றும் வெறியில் இந்த ஆண்டு அண்ணா அறிவாலயத்தில்... கேடு கெட்ட ஹிந்திய கொடியை ஏற்றி அண்ணாவையும் இழிவுபடுத்தியுள்ளார்...

இப்போது அப்பாவிகளை கொலை செய்ய போகும் சோனியா-ராகுல் அரசின் முடிவை பற்றி கருணை மனு எழுதும் போது ராஜிவ் ஆவியை கூப்பிட்டு இருக்கிறார்...

ராஜிவ் ஆவி கூட என்ன சொல்லும்...

பதவி ஏற்றவுடன் 8500 சீக்கியர்களை கொலை செய்த ரத்த வெறியை தொடங்கிய ராஜிவுக்கு... அடுத்த மாதம் போபாலில் 15000 மக்களை கொலை செய்த ஆண்டர்சனை தனி விமானத்தை அனுப்பி அந்த கொலையிலும் பங்கெடுத்து கொண்ட ரத்த வெறிக்கு... அசாமில் போடோக்களை தூண்டிய ரத்த வெறிக்கு... ஈழத்தில் ஆயிரகணக்கான கொலை கற்பழிப்பு செய்த ராஜிவின் ரத்த வெறிக்கு... மாலதீவிற்கு ராணுவத்தை அனுப்பி கற்பழிப்பு கொலை நடத்திய ரத்த வெறிக்கு... இந்த 3 உயிர்களும் வேண்டும் என கேட்கத்தான் செய்யும்...

ராஜிவ் காந்தி போன்ற ரத்த காட்டேறியை துணைக்கு கூப்பிட்டு கருணாநிதி தன்னை தானே இழிவுபடுத்தி கொண்ட கேவலத்தைதான்... 65 ஆண்டு அரசியல் வாழ்வில் கற்று கொண்டதோ?

அண்ணா... அன்பழகன், நாஞ்சில் மனோகரன், செழியன், இராசாராம் போன்றவர்களை டெல்லிக்கு அனுப்பினார்... அவர்கள் கட்சிகாக வேலை செய்தனர்...

அண்ணாவிற்கு பிறகு அன்பழகன், இராசாராம் இருவரும் மாநில மந்திரியான பின்... டெல்லிக்கு சென்ற நாஞ்சிலையும், இராசாராமையும் கட்சியை விட்டு அனுப்பி விட்டு... மருமகன் மாறனை டெல்லி தூதர் ஆக்கிய கருணாநிதி... மாறனுக்கு போட்டியாக வந்த டாக்டர் கலாநிதியை... வை.கோபாலசாமியை வளர்த்து ஒரம் கட்டி... வைகோ கைமீறி போன பின்... ஜெயலலிதா போலிசு கொடுத்த அறிக்கை கொண்டு வைகோவை கட்சியை விட்டு விரட்டி... மாறனுக்கு பிறகு தயாநிதியை டெல்லி அனுப்பிய... அந்த கேடி குடும்பத்திற்கும்... கட்சிக்கும் துரோகம் செய்தது கண்டு... கேடி தயாநிதியை கட்டம் கட்டி விட்டு... கனிமொழியை அனுப்பி... இப்போது ஆள் கிடைக்காமல் காங்கிரஸ் அயோக்கியர்கள் சிறை போட்ட பிறகு... சோனியாவின் பாதத்தை விடாமல் கட்டி கொண்டிருக்கும் கருணாநிதியின் மானங்கெட்ட பொழப்புக்கு...

மாறன் கருணாநிதிக்கு நேர்மையாக டெல்லியில் தூதர் வேலை பார்த்தார்... தயாநிதி சொந்த வியாபாரத்திற்கு கருணாநிதியை காட்டி கொடுத்த கேடி... கனிமொழி காங்கிரசிடம் மாட்டி கொண்ட கொண்ட பலி ஆடு... இப்போது காங்கிரசை கழட்டி விட்டால் கருணாநிதி குடும்பத்தை சோத்துக்கு வழியில்லால் யாரும் நிறுத்தி விட போவதில்லை... ஆனால் குடும்ப பாசமும், பதவி வெறியும்.. கருணாநிதியை காங்கிரசோடு சேர்த்து வைத்துள்ளது... இதுதான் கருணாநிதி 60 ஆண்டுகள் சேர்த்திருந்த மானமுள்ள தலைவர் எனும் நிலையை இடித்து விட்டது... தான் திருந்தவே மாட்டேன் என சொல்லி கொண்டு... மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் இறக்கும்... கருணாநிதி செய்யும்... இந்த மானங்கெட்ட பொழப்புக்கு...

Tuesday, March 29, 2011

இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்களின் இம்சைகள்...

கடந்த ஞாயிறு அன்று சேவ்-தமிழ் அமைப்பின் மகளிர் தின நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற போது... அங்கே படிக்கப்ப்ட்ட ஒரு கட்டுரையை பற்றி தோழர் ஒருவரிடம் கேட்ட போது... என்னை அறிவு அற்றவனாக எண்ணி... கீற்றில் கட்டுரை உள்ளது... போய் படித்து பார்க்க சொன்னார்...

கட்டுரையும் படித்தாகி விட்ட்து...

முகம் மறைத்தவளும்... சுயம் தொலைத்தவர்களும் எனும் அந்த கட்டுரை... விடுதலை புலிகளின் தோல்வியை... ஜெர்மனிய நாஜி படை... ரஷ்ய படைகளிடம் தோல்வி கண்டதை ஒப்பிடுகிறது... ஜெர்மனி ஹிட்லர் ஆதிக்க வெறியோடு நடத்திய ஆக்கிரமிப்புகள்தான் போரை தொடங்க காரணமாக இருந்தது... ஜெர்ம்னியின் ஆதிக்க வெறிக்கு எதிராக போரிட்ட செஞ்சேனைகள்... சிங்கள படைகளுக்கு நிகராக ஒப்பிடபட்டுள்ளது... புல்லரிக்குது...

முதலாளிதுவ ஆதரவு... மேற்கத்திய கட்டுரையை பரப்பும் இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்... அமெரிக்க ஆதரவு முதலாளிதுவ ஊடங்கள்... தினமும் ஒளிபரப்பி வரும் செய்திகள்... பிடலும்-சேவும் மக்களை கொலை செய்தார்கள்... பிரபாகரன் மக்களை கொலை செய்தார் போன்ற செய்திகளையும் நம்பதான் வேண்டி இருக்கலாம்... இவர்களின் முதலாளிதுவ மேற்கத்திய மோகம் அப்படியும் செய்ய வைக்கும்...

இது போன்ற மேற்கத்திய ஆதரவு கட்டுரைகளை கொண்டுதான் ஈழத்தை முட்டு கொடுக்க வைக்க முடியும்... கட்டுரையாளாரான இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர் நினைப்பார் என்றால் பாவம் ஈழம்... இருக்கிறது இணையம்.. கிடைக்கிறது மேடை என்பதற்காக கொள்கையில்லாமல்... கோவணமில்லாம் கட்டுரைகள் அரகேற்றபட்டால்... இது போன்ற மேடைகள்... பார்ப்பனர்கள் இடைவேளையில் தயிர் வடை சாப்பிடும் மார்கழி மாத சபாக்கள் போலவும்... எஸ்.வி.சேகர்-கிரேசி மோகன் டிராமாக்கள் போல் ஆகி விடும்...

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றிய கட்டுரையை எழுத விரும்பியவர்... பாசிச ஹிட்லரின் ஜெர்மனிகாக அழுகிறார் பாவம்... ஈராகில் அமெரிக்க படைகள் நடத்தும் அக்கிரமங்களையும்... காஷ்மீரில் இந்திய படைகள் பெண்களுக்கு எதிராக நடத்தும் பாலியல் கொடுமைகளை காண முடியாமல்... கட்டுரையாளரின் கண்கள் குருடாகி விட்டதோ என்னவோ? முதலாளிதுவ ஆதரவு கண்கள் அப்படித்தான் இருக்குமோ?

இந்த கட்டுரையாளர் மற்றவர்களுக்கு 6 ஆலோசனை அல்லது 6 ஆணையிடுகிறார்... இந்த ஆறில் அவரது பங்களிப்பு என்னவோ? இப்படி தன்னை தலைவராக நினைத்து ஆலோசனை அல்லது ஆணை இட்டே... இவர் ஈழம் வாங்கி கொடுத்து விட முடியும் என நம்புகிறார் போலும்...

தமிழின அழிப்பு பற்றி இவரது இந்திய நிலை என்ன என்றோ இவரின் நிலை என்ன என்றோ சொல்லி விட்டு... உலகிற்கு ஆணையிடலாம்... கருணாநிதியை தோற்கடித்து விட்டு இவரை போன்ற இன்ஸ்டண்ட் ஈழ தாய் ஜெயலலிதா... அவரது அண்ணன் ராஜபக்சேவிடம் உரிமையோடு ஈழம் வாங்கி தருவார் என நம்புகிறாரோ?

சிங்கள அரசின் அவசர நிலை சட்டம் பற்றி பாடம் நடத்தும் போதே... ஹிந்திய அரசு காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகளை ஒடுக்கிறேன் என செய்யும் காட்டுமிராண்டிதனம் பற்றி கள்ள மவுனம் சாதிப்பாரோ?

சிங்கள அரசு தமிழர்களுக்கு உதவி செய்ய போராட வேண்டும் என்கிறார்... எங்கு சென்று?

இவர் ஆணையிட்டுதான் ஈழத்திற்கு சர்வதேச தொண்டு அமைப்புகள் செல்ல வேண்டும் நம்புகிறாரோ இந்த கட்டுரையாளர்... சர்வதேச அமைப்புகளை சிங்கள அரசுதான் வெளியேற்றியுள்ளது... அந்த அமைப்புகள் ஈழ பகுதிக்குள் அனுமதித்தாலே போதும்... இதற்கு கட்டுரையாளரின் ஹிந்திய அரசு எத்தனை ஆணிகளை பிடுங்கியது சொல்வாரா?

மனித உரிமை அமைப்புகளுக்கு ஈழத்திற்கு வழி தெரியாது போலும்... இனிமேல் கட்டுரையாளர்தான் மனித உரிமை அமைப்புகளுக்கு ஈழத்தின் வழிகாட்டி... ஷங்கரின் சிவாஜியில் ரஜினி பழகியது... பழக வைக்க போகிறார் போலும்...

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேவ்-தமிழ் நடத்திய நிகழ்வுகள் கலந்து கொண்ட வரையில்... இது போன்ற அரைகுறை கட்டுரையை கண்டதில்லை... இது போன்ற அரைகுறை அறிவிஜீவி கட்டுரைகள் சேவ்-தமிழ் அமைப்பின் நோக்கங்களை மாற்றி விடும்...

Friday, December 3, 2010

1987 முதல், பார்ப்பன ஹிந்தியத்தின் சூழ்ச்சியும், ஈழத்தின் வீழ்ச்சியும்


1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், 1987இல் அக்டோபரில் யாழ் மருத்துமனையில் இந்திய படைகள் காண்டுமிராண்டிதனம் செயத போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது யார்?

பின்னர் 1988, 1989 டிசம்பர் வரை ராஜிவின் படைகள் கட்டுகடங்காமல் ஈழத்தில் அட்டுழியம் செய்த போதும் தமிழ் நாட்டில் அதிகாரம் செய்தது, பி.சி.அலெக்சாண்டர் எனும் மலையாளி.

1989 தேர்தலில் மக்கள் ராஜிவ் எனும் பொறுக்கியை காறி உமிழ்ந்து விரட்டிய பின் கற்பழிப்பு படைகளை திரும்ப அழைத்தது யார்? வி.பி.சிங்.

இது வரை 1987 முதல் 1989 டிசம்பர் வரை தமிழ் நாட்டில் ஈழ மக்களை அகதிகளாக கூட அனுமதிக்காது ராஜிவ், அதற்கு எடுபிடி வேலை செய்தது எம்ஜிஆர்., பின்னர் பி.சி.அலெக்சாண்டர்.

1990 மே மாதம் இந்திய கற்பழிப்பு படையில் கடைசி குழு, சென்னை துறைமுகம் வந்த போது தமிழின பெண்களை கற்பழித்தவர்கள் வரவேற்க மாட்டேன் என கருணாநிதி சொல்ல முடிந்தது என்றால் காரணம் என்ன? வி.பி.சிங் என்பவர் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தமையால்.

1990 ஏப்ரல் மாதம் முதல் இந்திய படை சிங்கள அரசுக்கு ஏவல் வெறி நாய் வேலையில் இருந்து ஒழிந்த பின், வடக்கு கிழக்கு பகுதிகளை விடுதலை புலிகள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த போது, நேர்மையாக முடிவெடுத்தது யார்? வி.பி.சிங்.

1990 ஜுன் மாதம் சென்னை கோடம்பாக்கத்தில் பத்பநாபா உட்பட 9 பேரை கொலை செய்தவர்களை தாம்ப்ரம் செக்போஸ்ட் முதல் சீர்காழி செக்போஸ்ட் வரை கண்டு கொள்ளாமல் விட சொன்னது யார்?

அடுத்த நாள் தினமலம் பத்பநாபாவை கொலை செய்தவர்கள் கோடிய கரையில் கோழி கறி சமைத்து சாப்பிட்டு தப்பித்து சென்றார்கள் என எழுதியதை வைத்து பின் விகடன், துக்ளக் போன்றவை தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என சொன்ன போது, தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா, ராஜிவ், சு.சாமி, சோசாமி, பாஜக போன்றவர்கள் கேட்க தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என அறிக்கை அனுப்பிய பி.சி.அலெக்சாண்டரை வீட்டுக்கு அனுப்பி பர்னாலாவை தமிழக ஆளுனராக அனுப்பியவர் வி.பி.சிங்.

வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பின் விடுதலை புலிகளை காரணம் காட்டி தமிழ் நாடு அரசை கலைக்க அறிக்கை கொடுக்க முடியாது என சொன்ன பர்னாலாவின் நேர்மை எங்கே இருக்கிறது, விடுதலை புலிகளை காரணம் காட்டி தமிழ் நாடு அரசை கலைக்க கையெழுத்து போட்ட பட்டுகோட்டை பார்ப்பன பொறுக்கி சொரி நாய் வெங்கெட்டராமனை யோக்கியன் சொல்லுபவர்கள் இங்கே எத்தனை பேர் தெரியுமா?

1991 சனவரி 30ஆம் தேதி தமிழ் நாடு அரசு கலைக்கபடாமல் இருந்திருந்தால், ஒரு பொறுக்கி திருபெரும்புதூரில் பிணமாக பிண்டமாக ஆகி இருக்க வாய்ப்பில்லை.

இதன் மூலம் ஒரு பார்ப்பன விபசாரி மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. 1991இல் உலகிலேயே இரண்டாவதாக சிங்கள அரசிற்கு பின் ஜெயலலிதா விடுதலை புலிகளை தடை செய்ய முடிந்திருக்காது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவானின் கருத்திற்கு மாறாக பார்ப்பன சொரி நாய்களின் விருப்பதிற்கேற்ப, ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்காக 1992இல் இந்திய அரசு விடுதலை புலிகளை தடை செய்திருக்காது.

1994 முதல் சந்திரிக்காவுடன் கொஞ்சி குலாவியது யார்? ஜெயலலிதா, 1995இல் சந்திரிகா மிக பெரிய போரை தொடங்கி, மக்களை இடம் பெயர வைத்து விரட்டய போது தமிழ் நாட்டில் இருந்து புலிகளுக்கு டிசல், மருந்து போன்ற பொருட்கள் செல்லாமல் தடுத்தது யார்? ஜெயலலிதா.

1996-97 இல் காங்கிரஸ் அரசு ஒழிந்த பின் ஐ.மு. அரசில் காலத்தில் 1998 பிப்ரவரிக்குள் புலிகள் யாழ் கோட்டையை பிடிக்கும் அளவிற்கு பலம் பெற்றது எப்படி?

2000 பிப்ரவரியில் விடுதலைப் புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய போது ஆட்சியில் இருந்தது யார், இப்படி 2001 மத்தியில் காட்டுநாயக விமான தளத்தை அடித்து நொறுக்கும் வரையில் தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது யாரோ?

2002இல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றியது யார்? ஜெயலலிதா

2002 பிப்ரவரியில் அமைதி ஒப்பந்ததிற்கு முன் பிரபாகரனின் சர்வதேச ஊடகவியலாளர்களிடம் பேட்டி பற்றி விளக்க கூட்டம் போட்ட தமிழ் முழக்கம் சாகுல் ஹமீதை பொடாவில் உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா

2002 சூன் மாதம் விடுதலை புலிகளை ஆதரிப்பேன் என சொன்ன ஒரே காரணத்திற்காக பொடாவில் வைகோ உட்பட 7 பேரை உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா

2002 அக்டோபரில் சென்னை கடற்கரையில் ஈழ ஆதரவு கூட்டத்தில் பேசியதற்காக பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, புதுகோட்டை பாவாணன், மருத்துவர் தாயப்பன் போன்றவர்களை உள்ளே போட்டது யார்? ஜெயலலிதா

2003இல் சிங்கள தலைவர்கள் ரனில் போன்றவர்கள் எனது நண்பர்கள், இலங்கை பிரச்சனை தீர்த்து வைக்க போகிறேன் என சென்னையில் பேட்டி கொடுத்தது யார்? சிங்கள உளவாளி கயவாளி பொறுக்கி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.

பின்னர் 2004 மே மாதத்திற்கு பின் நடந்தவைகளை இப்போது நன்றாக எழுதுகிறார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி செய்தாலும், அது சிங்கள ஆட்சியாகவே இருக்கும் என்பது உண்மை.

ஆனால் கொடுமை என்னவென்றால் தமிழர்களின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் கருணாநிதி காங்கிரசோடு சேர்ந்து பொறுக்கி தின்ன இப்போது சிங்கள ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் என்பது உண்மை.

ஆனால் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன அடிவருடிகளும் ஏதோ ஜெயலலிதா ஈழம் வாங்கி கொடுத்து விடுவது போல் சொல்லி கொண்டு திரிகின்றனர்.

சிங்கள ஆட்சியை நேரடியாக நடத்தும் ஜெயலலிதாவையும், சிங்கள ஆட்சியை மறைமுகமாக நடத்தும் கருணாநிதியையும் மாறி மாறி அதிகாரம் செலுத்த வைப்பதால் தமிழர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்க போவதில்லை.

இப்போதைய தேவை மாற்று சிந்தனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழின விடுதலை.

இந்த தமிழர்களின் தேவையை அடைய செய்ய வேண்டியது.

நேரடியாக மக்களிடம் செல்ல வேண்டும், உண்மைகளை பரப்புரை செய்ய வேண்டும்.

ஊடகங்களை கைபற்ற வேண்டும், தமிழர்களுக்கு ஆதரவான உண்மையாக ஊடகத்தை நடத்த வேண்டும்.

இந்தியாவிடம் இருந்து தமிழ் நாடு விடுதலை பெற தீவிரமான மக்கள் இயக்கம் நடத்த வேண்டும்.

முக்கியமாக தமிழின விரோதிகள், துரோகிகள், சிங்களர்களின் பங்காளிகள், இந்தியாவின் அதிகார வர்க்கமான பார்ப்பனர்களை தமிழர்களிடத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், இல்லையென்றால் தமிழர்களின் எந்த போராட்டத்தையும் ஒழித்து இந்திய அடிமைகளாக, தங்களது அடிமைகளாக பார்ப்பனர்கள் தமிழர்களை ஆக்கி விடுவர்.

Monday, November 22, 2010

தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?

2ஆம் தலைமுறை அலைகற்றை ஒதுக்கீடு முறைப்படி நடைபெற வில்லை எனவும் இதனால் ஹிந்திய அரசுக்கு 1.76 இலட்சம் கோடி பணம் இழப்பு என்பதாக ஹிந்திய தணிக்கை துறை எழுதி இருப்பதால் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா பதவி விலக்கப்பட்டுள்ளார்.

இந்த ஒதுக்கீடு முறைகேட்டை விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க வேண்டும் பாஜக, இடது சாரிகள் கோரி வருகின்றனர், ஜெயலலிதா ஆ.இராசா மற்றும் திமுக தலைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையிட்டு வருகிறார்.

இந்த செய்தியை ஊடங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆ.இராசா மற்றும் கூட்டணி கட்சியான திமுகவிற்கு எதிராக செயல்பட்டு, திமுக மிதித்து விட வேண்டும் என வேலை செய்து கொண்டுள்ளது. திமுகவும், ஆ.இராசாவும் எல்லா முறைப்படி நடந்ததாகவும், தலைமை அமைச்சர் மன்மோகனுக்கு தெரிந்தே நடந்தததாகவும் தெரிவிக்கின்றனர்.

ஊடகங்கள் இதுதான் மிக பெரிய ஊழல் என சொல்லி பரபரப்பாக தொழிலை செய்து கொண்டுள்ளன.

தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்றத்தில் சுனா சாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை அனுப்புவதாக சொல்கிறார்.

கடந்த மாதம் மத்திய அரசு பதபடுத்த வேண்டிய கோதுமை, அரிசி போன்ற உணவு பொருட்களை, இடம் இல்லை என சொல்லி குப்பையில் கொட்டிய போது உறங்கிய ஊடங்கள் இப்போது ஆடுவது யாருக்காக?

பதப்படுத்த முடியாத உணவு பொருட்களை உடனடியாக இலவசமாகவோ, குறைந்த விலையிலோ ஏழைகளுக்கு வழங்கலாம் என உச்ச நீதி மன்றம் சொன்ன போது, அரசு இயந்திரத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என பொங்கி எழுந்த மன்மோகன் இப்போது சுனா சாமிக்கு பயபக்தியோடு பதில் சொல்ல கிளம்புவது ஏனோ?

இந்த அலைகற்றை ஒதுக்கீடு பற்றி அலறும் ஊடங்கள், ஹிந்திய பாசிசத்திடம் இருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களிடமோ, வட கிழக்கு மாநிலங்களின் மக்களிடமோ எப்போதாவது அக்கறை காட்டியது உண்டா?

இந்த பிரச்சனை பற்றி தமிழன் எதற்காகவாவது சிந்திக்க வேண்டுமா?

அறவே தேவையில்லை.

ஈழ தமிழ் மக்களை சிங்கள பேரிவாதத்தோடு சேர்ந்து படுகொலை நடத்திய காங்கிரஸ் ஹிந்திய அரசு, அந்த படுகொலை பழியின் பங்கை இலவசமாக, அதிகாரத்தை பங்கிட்ட திமுகவிற்கு கொடுத்தது, அந்த தமிழர்களை கொலை செய்த பழியை கூட எளிதாக எடுத்து கொண்ட திமுக இந்த அலைகற்றை பிரச்சனைகளுக்கு வருத்தப்பட தேவையே இல்லை.

காஷ்மீர் மக்கள், அசாம் மக்கள் எப்படி ஹிந்திய பாசிசத்தை எதிர்த்து விடுதலைக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்களோ, அது போல் தமிழர்களாகிய நாமும் ஹிந்திய பாசிசத்திடம் இருந்து விடுதலை பெற வேலையை தொடங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.

7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மிதித்து விட்டே ஹிந்திய பாசிசம், சிங்கள பேரினவாதத்தை தனது படுகொலை பங்காளியாக வைத்துள்ளது. நம் தமிழ் சொந்த ரத்தங்களின் உயிர்களை ஹிந்திய பாசிசம், சிங்கள பேரினவாததோடு சேர்ந்து கொலை செய்துள்ளது.

நம் மயிறை விட இழிவான ஹிந்திய பணத்திற்காக இப்போது ஊளையிடுபவர்கள் எல்லாம், நம் சொந்த ரத்த உறவுகள் அழிக்கப்பட்ட கூத்தாடி மகிழ்ந்த நிகழ்வு மறக்க கூடாத ஒன்று.

மானமுள்ள, உணர்வுள்ள தமிழர்கள் யாரும் ஹிந்திய பாசிச அரசு தொடர்பான அலைகற்றை பிரச்சனையில் கவனத்தை செலுத்தி நேரத்தை வீணாக்க தேவையில்லை.

தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?