Saturday, November 12, 2011

க.சுப்பு... அவர்களுக்கு அஞ்சலி...



நான் அரசியலை பற்றி தெரிந்து கொண்ட சிறு வயது நிகழ்வுகளில் க.சுப்புவும் ஒருவர்... 1979 என நினைவு.... துக்ளக் பத்திரிக்கையில் அட்டையில் கேலி படத்தில் மூன்று பேர்... மேசை மீது நிற்பதாகவும் அவர்களில் ஒருவர் வேட்டி உருவபட்டு ஜட்டியோடு நிற்பதாக படம்... அந்த மூன்று பேரின் பெயர்கள் துரைமுருகன், ரகுமான்கான், மற்றும் க.சுப்பு... அதில் வேட்டி இல்லாதவரின் பெயர்தான் க.சுப்பு... அப்போது நான் மூன்றாவது படித்து கொண்டு இருந்தேன்... என் அண்ணன் நான்காவது படித்து கொண்டு இருந்தார்... அவர்தான் விளக்கினார்... இந்த மூன்று பேரும் திமுகவினர், இவர்கள் நிறைய கேள்வி கேட்கிறார்கள்... இவர்களுக்கு பதில் சொல்ல முடியாத எம்ஜிஆர் கட்சிகாரர்கள் இவர்கள் விரட்டுக்கிறார்கள்... க.சுப்புவின் வேட்டியை அவிழ்த்து விட்டார்கள் என்றார்... அதன் பிறகு மூன்றாவதில் இருந்து துக்ளக் படிக்க பழகினோம்... நிறைய அரசியல் செய்திகளை படித்தோம்... எனது அரசியல் ஆர்வதிற்கு க.சுப்புவின் வேட்டி அவிழ்ப்பு நிகழ்வும் ஒரு காரணாமாக இருந்தது... அதனால்தான் இந்த பதிவை எழுதி க.சுப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்...

க.சுப்பு... இராசபாளையத்தை சேர்ந்தவர்... இளங்கலை பட்டம் படித்தவர்... பின்னர் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் பயிற்சி பெறாத... பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர்... கூடவே இந்திய பொதுவுடமை கட்சியில் இணைத்து கொண்டார்... தொழிற்சங்க தலைவரானார். 1971 தேர்தலில் இராசபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அந்த பகுதியில் இருந்த முதலாளிகளுக்கு பிரச்சனையாக இருந்தார்... அந்த முதலாளிகள் இவரை சென்னை பெயர்த்த பின்... திமுகவில் இணைத்து கொண்டார்... இவர் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் என்பதால் தொழிலாளர்கள் நிறைந்த வில்லிவாக்கம் தொகுதியில் 1977இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்... அப்போது 1977,78,79 ஆண்டுகளில் தமிழ் நாடு சட்டமன்றத்தில் எம்ஜிஆர் கட்சிக்கு பெரும் பிரச்சனையாக இருந்தார்... அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை மழையாக பொழிவதாக திமுக தலைவர் புகழ்ந்தார்... 1980 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தோல்வி அடைந்தார்...

1982இல் திருசெந்தூர் கோயில் வேலை திருடி விட்டார்கள் என மதுரையில் இருந்து கருணாநிதி பாத யாத்திரை போராட்டம் நடத்திய போது அந்த போராட்டத்தில் கருணாநிதியோடு தீவிரமாக கலந்து கொண்டார்... பின்னர் ஜெ. கட்சியில் இருந்த போது கால்கள் அகற்றபட்ட போது கருணாநிதிக்காக இந்த கால்கள் நடந்தது... இப்போது கால்கள் இல்லாமல் போய் விட்டது என வருந்தி பத்திரிக்கையில் பேட்டியும் கொடுத்தார்...

1983இல் க.சுப்பு எம்ஜிஆர் கட்சியில் சேர்ந்தார்... 1984 தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் நாஞ்சில் மனோகரனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்...

எம்ஜிஆர் இறந்த பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்... அந்த நாதாரி பயல் ஒழிந்த பின் நடந்த 1991 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் 900 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோல்வி அடைந்தார்...

ஒரு மனித உரிமை அமைப்பை தொடங்கினார்... கூடவே ஆர்.ஆர்.கோபாலுடன் சேர்ந்து தொடங்கிய பத்திரிக்கை நக்கீரனை பின்னர் கோபால் முழு பங்கையும் எடுத்து கொண்டார்... பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதா... அதிகாரத்திற்கு வந்த பின் முதன் முதலில் அஞ்சாமல்... 1991 சூலை மாதம்... இங்கேயும் ஒரு ஹிட்லர் என தொடர் எழுதினார்... இதனால் ஜெவின் அல்லகையாக இருந்த வாழபாடி ராமமூர்த்தி காங்கிரஸை விட்டு நீக்கினார்... அதற்கும் பதிலாக வாழபாடி ஒரு நியமன தலைவர்... தானும் ஒரு நியமனம்... ஒரு நியமனம் எப்படி இன்னொரு நியமனத்தை நீக்க முடியும் என பஞ்ச் கொடுத்தார்... இதன் பின் க.சுப்பு பரபரப்பு அரசியலில் இருந்து அப்புறபடுத்தபட்டார்...

1996இல் மூப்ஸ் தமாக தொடங்கிய போது அதில் சேர்ந்து இருந்து விட்டு... 2001இல் ஜெ... கட்சியில் சேர்ந்தார்... பின்னர் நீரழிவு நோயினால் அவரது கால்கள் அகற்றபட்டன... கால்கள் அகற்றபட்ட போதும் ஆர்வமுடன் ஜெடிவியில் அரசியல் விவாதகளில் கலந்து கொண்டு கொஞ்சம் நாகரீகமாக பேசுவார்... மற்றபடி நாகரீகத்திற்கும் ஜெவுக்கோ அவர் டிவிக்கோ தொடர்பு இல்லையே? 2006 தேர்தலில் ஜெ... கட்சி தோல்வி அடைந்த போது ஜெடிவியில் தனி ஆளாக அரசியல் விவாதம் செய்தார்... 2006இல் ஜெ. கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகள் பற்றி வகுப்பு நடத்தினார்...

2007இல் கருணாநிதிக்கு நடந்த சட்டமன்ற பொன்விழாவிற்க்கு வாழ்த்து செய்தி வழங்கியதால்... ஜெ. கட்சியில் இருந்து விரட்டபட்டு... திமுகவில் சேர்ந்தார்... இறுதி வரை திமுகவில் இருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மறைந்தார்...

தமிழ் பேச்சை கொண்டு அரசியல் விபசாரியாக திரியும் நெல்லை கண்ணன் போன்ற பொறுக்கிகளை போல் அல்லாமல்... பல கட்சிகளில் இருந்தாலும் நாகரீகமாகவே செயல்பட்டார்...

க.சுப்பு பல கட்சிகளில் இருந்தாலும் அவருக்கு மரியாதை தந்தது பேச்சாற்றலும், பொதுவுடமை கொள்கை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள்... தொடக்கத்தில் நக்கல்பாரிகள் இயக்க தலைவர் ஏ.எம்.கோதண்டராமனுடன் தொடர்பு வைத்திருந்தார்... அந்த நட்பிற்காக நக்கல்பாரிகள் மீதான போலி என்கவுண்டர் கொலைகளை எதிர்க்க மனித உரிமை அமைப்பை தொடங்கினாராம்...

க.சுப்புவிற்கு ஆழ்ந்த அஞ்சலி...