Monday, November 22, 2010

தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?

2ஆம் தலைமுறை அலைகற்றை ஒதுக்கீடு முறைப்படி நடைபெற வில்லை எனவும் இதனால் ஹிந்திய அரசுக்கு 1.76 இலட்சம் கோடி பணம் இழப்பு என்பதாக ஹிந்திய தணிக்கை துறை எழுதி இருப்பதால் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா பதவி விலக்கப்பட்டுள்ளார்.

இந்த ஒதுக்கீடு முறைகேட்டை விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க வேண்டும் பாஜக, இடது சாரிகள் கோரி வருகின்றனர், ஜெயலலிதா ஆ.இராசா மற்றும் திமுக தலைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையிட்டு வருகிறார்.

இந்த செய்தியை ஊடங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆ.இராசா மற்றும் கூட்டணி கட்சியான திமுகவிற்கு எதிராக செயல்பட்டு, திமுக மிதித்து விட வேண்டும் என வேலை செய்து கொண்டுள்ளது. திமுகவும், ஆ.இராசாவும் எல்லா முறைப்படி நடந்ததாகவும், தலைமை அமைச்சர் மன்மோகனுக்கு தெரிந்தே நடந்தததாகவும் தெரிவிக்கின்றனர்.

ஊடகங்கள் இதுதான் மிக பெரிய ஊழல் என சொல்லி பரபரப்பாக தொழிலை செய்து கொண்டுள்ளன.

தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்றத்தில் சுனா சாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை அனுப்புவதாக சொல்கிறார்.

கடந்த மாதம் மத்திய அரசு பதபடுத்த வேண்டிய கோதுமை, அரிசி போன்ற உணவு பொருட்களை, இடம் இல்லை என சொல்லி குப்பையில் கொட்டிய போது உறங்கிய ஊடங்கள் இப்போது ஆடுவது யாருக்காக?

பதப்படுத்த முடியாத உணவு பொருட்களை உடனடியாக இலவசமாகவோ, குறைந்த விலையிலோ ஏழைகளுக்கு வழங்கலாம் என உச்ச நீதி மன்றம் சொன்ன போது, அரசு இயந்திரத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என பொங்கி எழுந்த மன்மோகன் இப்போது சுனா சாமிக்கு பயபக்தியோடு பதில் சொல்ல கிளம்புவது ஏனோ?

இந்த அலைகற்றை ஒதுக்கீடு பற்றி அலறும் ஊடங்கள், ஹிந்திய பாசிசத்திடம் இருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களிடமோ, வட கிழக்கு மாநிலங்களின் மக்களிடமோ எப்போதாவது அக்கறை காட்டியது உண்டா?

இந்த பிரச்சனை பற்றி தமிழன் எதற்காகவாவது சிந்திக்க வேண்டுமா?

அறவே தேவையில்லை.

ஈழ தமிழ் மக்களை சிங்கள பேரிவாதத்தோடு சேர்ந்து படுகொலை நடத்திய காங்கிரஸ் ஹிந்திய அரசு, அந்த படுகொலை பழியின் பங்கை இலவசமாக, அதிகாரத்தை பங்கிட்ட திமுகவிற்கு கொடுத்தது, அந்த தமிழர்களை கொலை செய்த பழியை கூட எளிதாக எடுத்து கொண்ட திமுக இந்த அலைகற்றை பிரச்சனைகளுக்கு வருத்தப்பட தேவையே இல்லை.

காஷ்மீர் மக்கள், அசாம் மக்கள் எப்படி ஹிந்திய பாசிசத்தை எதிர்த்து விடுதலைக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்களோ, அது போல் தமிழர்களாகிய நாமும் ஹிந்திய பாசிசத்திடம் இருந்து விடுதலை பெற வேலையை தொடங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.

7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மிதித்து விட்டே ஹிந்திய பாசிசம், சிங்கள பேரினவாதத்தை தனது படுகொலை பங்காளியாக வைத்துள்ளது. நம் தமிழ் சொந்த ரத்தங்களின் உயிர்களை ஹிந்திய பாசிசம், சிங்கள பேரினவாததோடு சேர்ந்து கொலை செய்துள்ளது.

நம் மயிறை விட இழிவான ஹிந்திய பணத்திற்காக இப்போது ஊளையிடுபவர்கள் எல்லாம், நம் சொந்த ரத்த உறவுகள் அழிக்கப்பட்ட கூத்தாடி மகிழ்ந்த நிகழ்வு மறக்க கூடாத ஒன்று.

மானமுள்ள, உணர்வுள்ள தமிழர்கள் யாரும் ஹிந்திய பாசிச அரசு தொடர்பான அலைகற்றை பிரச்சனையில் கவனத்தை செலுத்தி நேரத்தை வீணாக்க தேவையில்லை.

தமிழின எதிரியான பாசிச ஹிந்தியா என்ன கேடு ஆனால் நமகென்ன?