Thursday, July 26, 2007

இந்திய குடியரசு தலைவர்கள்...

இதுவரை இருந்த குடியரசு தலைவர்கள்...

இராஜேந்திர பிரசாத் (1952 - 62) - நல்ல முதல் குடியரசு தலைவர், சர்ச்சைகளில் சிக்காதவர், நேருவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தவர்...

டாக்டர் இராதகிருஷ்னன் (1962 - 67) - மிக சிறந்த கல்வியாளர், ரப்பர் ஸ்டாம்பாக செயல்படாதவர்...

ஜாகிர் உசேன் (1967 - 69) - நல்ல மனிதர், அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்... பதவிகாலத்தில் மறைந்தார்...

வி.வி.கிரி (1969 - 74) - முதன் முதலில் இவரால்தான் இப்பதவிக்கு அரசியல் புயல் அடித்தது... அதிகாரபூர்வ காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியை இந்திரா ஆதரவுடன் தோற்க்கடித்தார்... இந்திராவுக்கு ஆதரவாக செயல்பட்டார்...

பக்ருதீன் அலி (1974 - 76) - இவரால்தான் இப்பதவிக்கு ரப்பர் ஸ்டாம்ப் என பெயர் வந்தது என சொல்லாம்... இவர் காலத்தில்தான் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டது... பதவிகாலத்தில் மறைந்தார்...

நீலம் சஞ்சீவ ரெட்டி (1977 - 82) - ஜனதா ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்... சர்ச்சைகளுக்கு ஆளானவர்... 1977 இல் நிறைய காங்கிரஸ் மாநில அரசுகள் கலைக்க பட்டது... இவரைப் பற்றிய சென்னையில் நடந்த நகைச்சுவையான் செய்தி... 1979 இல் தமிழக ஆளுனராக இருந்த காந்தியவாதியான் பிரபுதாஸ் பட்வாரி ராஜ்பவனில் அசைவ உணவுகளுக்கு தடை விதித்து இருந்தார்... அப்போது சென்னை வந்த குடியரசு தலைவர் சஞ்சீவ ரெட்டியார் கோழிக் கறி கேட்ட போது ராஜ்பவனில் மறுக்கப் பட்டதாம்... உடனே ரெட்டியார் கோபித்துக் கொண்டு சென்னை தாஜ் விடுதியில் தங்கினாராம்...

ஜெயில் சிங் (1982 - 87) - நிறைய சர்ச்சைகளுக்கு ஆளானவர்... ராஜிவை நீக்கி அருன் நேருவை பிரதமராக்க முயற்சி செய்ததாக சொல்வார்கள்...

வெங்கெட்டராமன் (1987 - 92) - இந்த கேடு கெட்ட ராமனால்தான் இந்தப் பதவியே அசிங்கப் பட்டது... சிறந்த ஜால்ரா மன்னன், ஊழல் வாதி, துரோகி... எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதி வெறியன்... குடியரசு தலைவர் மாளிகையை கட்சி அலுவலகம் போல் நடத்தியவர்... இது போல் கேடு கெட்ட கேவலமான ஒன்று இந்த பதவிக்கு வரப் போவதில்லை...

டாக்டர் சங்கர் தயாள் சர்மா (1992 - 97) - பெரிய சர்ச்சைகளுக்கு ஆளாகமல் நாகரீகமாக இருந்தவர்... என்ன அடிக்கடி திருப்பதி கோயிலுக்கு வந்து... திருப்பதி கோயிலுக்கு வரும் மக்களுக்கு தொந்தரவு கொடுத்தார்...

கே.ஆர். நாராயணன் (1997 - 2002) - நீயாயமாக செயல் பட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்... ரப்பர் ஸ்டாம்ப் போல் நடந்து கொள்ளாதவர்... மரண தண்டனைக்கு எதிரான மனிதாபிமானி... நாகரீகமாக செயல்பட்டவர்...

2007 இல் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழர் டாக்டர் அப்துல் கலாம்... 1992 இல் ஓய்வு பெற்ற வெ.கெ.ராமன்...

இந்தியாவின் மிக உயரிய பதவியில் இருந்து... உலக தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தேடி தந்தவர் டாக்டர் அப்துல் கலாம்...

நேற்று சென்னை வந்த போது எந்த ஆடம்பரமுல் இல்லாமல்... அண்ணா பல்கலை கழக துனை வேந்தர்தான் வரவேற்று அழைத்து வந்தார்... பல்கலை கழகதிற்குதான் சென்றார்...னேற்று சென்னை வந்து... அண்ணா பல்கலை கழக விருந்தினர் மாளிகை தங்கியுள்ளார்... நேற்று இரவு முதல் நாளே... மின் வெட்டு காரணமாக இருட்டில் அவதி பட்டதாக செய்தி வந்துள்ளது... மிகவும் போற்றதக்க எளிமையான மனிதர்...

1992 இல் அதே பதவியில் இருந்து ஒரு ஊழலில் திளைத்து வந்த... கேடு கெட்ட... வெங்கெட்டராமனை பார்த்தீர்களேயானால்... 1992 இல் பதவியில் வந்த போது... ஜெ கூட்டம் கெட்டராமனுக்கு மிக பெரிய வரவேற்பு அளித்து... ராஜ்பவனில் கொட்டமடித்தது... ஜெ - கெட்டராமன் கூட்டம்... பின்னர் அந்த கேடு கெட்ட ராமனுக்கு... ஜெவின் கொள்ளை கூட்டம்... அரசு சார்பில் ஒரு பெரிய பங்களா வழங்கியது... சென்னையில் அந்த கேடு கெட்ட ராமனுக்கு இரண்டு வீடுகள் இருந்தும்... ஜெ கொள்ளை கூட்டம் கொடுத்த பங்களாவை வெட்டமில்லாமல் வாங்கி கொண்டு கூத்தடித்தது... கேடு கெட்ட ராமன் கூட்டம்... பின்னர் 1996 இல் திமுக அரசு வந்த பின் ஜெ கொள்ளை கூட்டம்... கெட்ட ராமனுக்கு சட்ட விரோதமாக தாரை வார்த்த பங்களாவை திருப்பி வாங்கியது... எதற்கும் வெட்கம் இல்லாத கேவலமான ஒரு பிறவிதான் கேடு கெட்ட வெங்கெட்டராமன்... (வெங்கெட்டராமன் பெயரை அருளியது சோ)...

மிக உயரிய பதவியில் இருந்து தமிழர்களுக்கு பெருமை தேடி தந்தவர் டாக்டர் அப்துல்கலாம்...

அதே உயரிய பதவியில் இருந்து தமிழ் நாட்டின் மானத்தை வாங்கியது கேடு கெட்ட வெங்கெட்டராமன்

Tuesday, July 10, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானார்

உடல்நிலை சரியில்லாமல் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானார்

1960 களில் நேரு பிரதமராக இருந்த போது காங்கிரஸில் சோசலிஸ்டு பேரவை தொடங்கி அதில் நேருவை பங்கேற்ற வைத்தவர்...
பின்னர் மோகன் தாரியா, கிருஷண காந்த இவர் மூவரும் சேர்ந்து... கூட்டாக பணியாற்றி இளம் துருக்கியர்கள் என அழைத்து கொண்டார்கள்... ஆனால் பத்திரிக்கைகள் இவர்களை ஜிஞ்ஞர் குருப் என அழைத்தது...
1969 இல் காங்கிரஸில் இருந்து நிஜலிங்கப்பா, காமராசர், மொராஜி தேசாய் போன்றவர்கள் இந்திரா நீக்கிய போது... இந்திராவுக்கு பலமாக இருந்தவர் சந்திரசேகர்... அடுத்த 6 மாததிற்குள்... இவரும் இந்திராவால் காங்கிரஸில் இருந்து நீக்க பட்டார்...
பின்னர் ஜனதா கட்சி தொடங்கிய போது அதில் முக்கிய தலைவராக இருந்தார்...
1977 இல் ஜனதா கட்சி வெற்றி பெற்ற போது... பிரதமராக முயற்சி செய்தார்... ஆனால் எம்.பி. கள் ஏற்று கொள்ள வில்லை...அதனால் மொராஜி தேசாய் பிரதமரர் ஆனார்...
1979 இல் சரன்சிங் பிரிந்து லோக் தளம் தொடங்கிய பின்னரும்... வாஜ்பாய் பிரிந்து பாரதீய ஜனதா தொடங்கிய பின்னரும்... மீதமிருந்த ஜனதா கட்சிக்கு தலைவராக ஏற்று நடத்தியவர்...
1983 இல் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை பாத யாத்திரை சென்று மக்களிடம் பணம் வசூல் செய்தார்... அந்த பணத்தில் கரியானா மாநிலத்தில் மாதிரி கிராமம் உருவாக்கினார்... பின்னர் அந்த மாதிரி கிராமத்தை சொந்தமாக்கி கொண்டார்...
1980 - 84 கால கட்டத்தில் இந்திரா காந்திக்கு சிம்ம சொப்னமாக இருந்தார்...1987 இல் சரன் சிங் இறந்த பின் லோக தளம் கட்சியை ஜனதாவுடன் இணைத்தார்... பின்னர் ஜனதா தளம் ஆனது...
1989 இல் தேசிய முன்னனி வெற்றி பெற்ற போதும்... பிரதமராக முயற்சி செய்தார்... ஆனால்... இவரது முயற்சி... ராமாராவ், தேவிலால், ராமகிருஷண கெக்டே ஆகியோரால் தடுக்க பட்டு... வி.பி.சிங் பிரதமர் ஆனார்...
1990 நவம்பர் மாதம்... ஜனதா தளத்திள் இருந்து சுப்பிரமணிய சாமி உதவியுடன் 54 எம்.பி.களுடன் பிரிந்து... காங்கிரஸ் - ஜெயலலிதா ஆதரவுடன் பிரதமர் ஆனார்...கிட்ட தட்ட 120 நாட்கள் பிரதமராக இருந்தார்... பின்னர் ராஜிவ் ஆதரவை விலக்கி கொண்ட போது பதவி விலகினார்...
இந்தியாவில் பிரமராக இருந்தவர்களில் செங்கோட்டையில் கொடி ஏற்ற வாய்ப்பு கிடைக்காமல் போனது இவருக்குதான்...
பின்னர் நீண்ட காலம் உ.பி. பலியா தொகுதியில் இருந்து எம்.பி. யாக இருந்தார்...
இந்தியாவில் இருந்த போராட்ட குணம் மிகுந்த... ஒரு நல்ல தலைவராக விளங்கியவர்...

தமிழ் உணர்வுக்கு 85 வயது

1965 ஆம் ஆண்டு அப்போது நான் புலவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். திருவையாறு அரசர் கல்லூரி. தமிழ், வடமொழி இரண்டும் கற்பித்த கல்லூரி. வடமொழி பயில பேராசிரியர்கள் பெருமுயற்சி எடுத்து மாணவர்களைக் கூட்டி வருவர். எப்போதுமில்லாத அளவுக்கு தமிழ் படிக்க சில ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் வந்தனர்.
என் வகுப்பில் சுமார் 55 மாணவர்கள். அப்போதிருந்த கல்லூரி முதல்வருக்கு அதுவே மனவருத்தம். தமிழ் மாணவர்களுக்கு எப்போதும் பயமுறுத்தல்; இழிவான பேச்சு; அதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்; 190 மாணவர்கள் மட்டுமே படித்த கல்லூரியில் 14 மாணவர்கள் வெள்யேற்றப்பட்டு சான்றிதழ்கள் பல்கலைக்கழக சிண்டிகேடுக்கு அனுப்பப்பட்டது.
தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தும் பலன் இல்லை. அப்போது தமிழ்நாடு முழுவதும் டெங்குசுரம் பரவி வந்தது, பேராசிரியர் க.அன்பழகனுக்கும் அந்தக் காய்ச்சல். அவரைச் சந்திக்க முடியவில்லை.நாகை தமிழ் புலவர் கோவை. இளஞ்சேரனும் நண்பர் வீர. கோவிந்தராசனும் பேராசிரியரைப் பார்க்க வருகின்றனர். சுரத்திலிருந்து மீண்டு அன்றுதான் தலை முழுகித் துவட்டிக் கொன்டிருந்தார். கோவை இளஞ்சேரன் 14 மாணவர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறார். அதைக் கேட்ட பேராசிரியர் உடனே எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு பேரறிஞர் அண்ணா அவர்களைச் சந்தித்து இச்செய்தியைக் கூறுகிறார். எப்படியும் அந்த மாணவர்களை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்று துடிதுடித்துக் கூறுகிறார்.அண்ணா அவர்கள் இரா. செழியன் அவர்களை அழைத்து துணைவேந்தரிடம் பேச அனுப்புகிறார். துணை வேந்தர் உடனடியாக அம்மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆணையிடுகிறார். பேராசிரியர் மாணவர்களுக்கு தகவல் தந்து தொடர்ந்து படிக்க உதவி செய்கிறார். 14 மாணவர்களையும் கரந்தைப் புலவர் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளச் சம்மதிக்கிறார் அக்கல்லூரி முதல்வர். மாணவர்கள் தொடர்ந்து படித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் தமிழாசிரியர்களாக பணியாற்றினர்.
அப்படிப் படித்து சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் நானும் ஒருவன். நண்பர் வீர. கோவிந்தராசன் மற்றும் மு. வெள்ளைச்சாமி மூவரும் தற்போது ஒய்வு பெற்று சென்னையில் வாழ்கிறோம்.எங்கோ பாதிப்புக்குள்ளான தமிழ் மாணவர்களுக்காக உடல் நலனையும் பொருட்படுத்தாது உடன் உதவி செத் தமிழ் உணர்வுக்கு உரியவர் பேராசியர் க. அன்பழகன். அவர் 85 வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அந்த இனமானக் காவலரின் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறோம்.
ஞானத்தேடல் சனவரி 2007 இதழில்... அதன் ஆசிரியர் நா.துர்க்காசெல்வம்.

Monday, July 9, 2007

தமிழ் வாழ்க...

தமிழ் வாழ்க...

Tuesday, July 3, 2007

தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்களுக்காக... திரு.வி,க.வின் படைப்புகளை பரப்புவதற்காக இந்த வலை பூ பயன்படும் என்ற நம்பிக்கையில்... இந்த எளியேன்... திரு.வி.க.வின் படைப்புகளை இனைய உலகத்தில் தெளிக்க தொடங்குகின்றேன்...