Thursday, July 26, 2007

இந்திய குடியரசு தலைவர்கள்...

இதுவரை இருந்த குடியரசு தலைவர்கள்...

இராஜேந்திர பிரசாத் (1952 - 62) - நல்ல முதல் குடியரசு தலைவர், சர்ச்சைகளில் சிக்காதவர், நேருவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தவர்...

டாக்டர் இராதகிருஷ்னன் (1962 - 67) - மிக சிறந்த கல்வியாளர், ரப்பர் ஸ்டாம்பாக செயல்படாதவர்...

ஜாகிர் உசேன் (1967 - 69) - நல்ல மனிதர், அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்... பதவிகாலத்தில் மறைந்தார்...

வி.வி.கிரி (1969 - 74) - முதன் முதலில் இவரால்தான் இப்பதவிக்கு அரசியல் புயல் அடித்தது... அதிகாரபூர்வ காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியை இந்திரா ஆதரவுடன் தோற்க்கடித்தார்... இந்திராவுக்கு ஆதரவாக செயல்பட்டார்...

பக்ருதீன் அலி (1974 - 76) - இவரால்தான் இப்பதவிக்கு ரப்பர் ஸ்டாம்ப் என பெயர் வந்தது என சொல்லாம்... இவர் காலத்தில்தான் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டது... பதவிகாலத்தில் மறைந்தார்...

நீலம் சஞ்சீவ ரெட்டி (1977 - 82) - ஜனதா ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்... சர்ச்சைகளுக்கு ஆளானவர்... 1977 இல் நிறைய காங்கிரஸ் மாநில அரசுகள் கலைக்க பட்டது... இவரைப் பற்றிய சென்னையில் நடந்த நகைச்சுவையான் செய்தி... 1979 இல் தமிழக ஆளுனராக இருந்த காந்தியவாதியான் பிரபுதாஸ் பட்வாரி ராஜ்பவனில் அசைவ உணவுகளுக்கு தடை விதித்து இருந்தார்... அப்போது சென்னை வந்த குடியரசு தலைவர் சஞ்சீவ ரெட்டியார் கோழிக் கறி கேட்ட போது ராஜ்பவனில் மறுக்கப் பட்டதாம்... உடனே ரெட்டியார் கோபித்துக் கொண்டு சென்னை தாஜ் விடுதியில் தங்கினாராம்...

ஜெயில் சிங் (1982 - 87) - நிறைய சர்ச்சைகளுக்கு ஆளானவர்... ராஜிவை நீக்கி அருன் நேருவை பிரதமராக்க முயற்சி செய்ததாக சொல்வார்கள்...

வெங்கெட்டராமன் (1987 - 92) - இந்த கேடு கெட்ட ராமனால்தான் இந்தப் பதவியே அசிங்கப் பட்டது... சிறந்த ஜால்ரா மன்னன், ஊழல் வாதி, துரோகி... எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதி வெறியன்... குடியரசு தலைவர் மாளிகையை கட்சி அலுவலகம் போல் நடத்தியவர்... இது போல் கேடு கெட்ட கேவலமான ஒன்று இந்த பதவிக்கு வரப் போவதில்லை...

டாக்டர் சங்கர் தயாள் சர்மா (1992 - 97) - பெரிய சர்ச்சைகளுக்கு ஆளாகமல் நாகரீகமாக இருந்தவர்... என்ன அடிக்கடி திருப்பதி கோயிலுக்கு வந்து... திருப்பதி கோயிலுக்கு வரும் மக்களுக்கு தொந்தரவு கொடுத்தார்...

கே.ஆர். நாராயணன் (1997 - 2002) - நீயாயமாக செயல் பட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்... ரப்பர் ஸ்டாம்ப் போல் நடந்து கொள்ளாதவர்... மரண தண்டனைக்கு எதிரான மனிதாபிமானி... நாகரீகமாக செயல்பட்டவர்...

1 comment:

மர்ம வீரன் said...

ஏதோ ஒன்னு குறையுதே!