Tuesday, July 10, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானார்

உடல்நிலை சரியில்லாமல் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானார்

1960 களில் நேரு பிரதமராக இருந்த போது காங்கிரஸில் சோசலிஸ்டு பேரவை தொடங்கி அதில் நேருவை பங்கேற்ற வைத்தவர்...
பின்னர் மோகன் தாரியா, கிருஷண காந்த இவர் மூவரும் சேர்ந்து... கூட்டாக பணியாற்றி இளம் துருக்கியர்கள் என அழைத்து கொண்டார்கள்... ஆனால் பத்திரிக்கைகள் இவர்களை ஜிஞ்ஞர் குருப் என அழைத்தது...
1969 இல் காங்கிரஸில் இருந்து நிஜலிங்கப்பா, காமராசர், மொராஜி தேசாய் போன்றவர்கள் இந்திரா நீக்கிய போது... இந்திராவுக்கு பலமாக இருந்தவர் சந்திரசேகர்... அடுத்த 6 மாததிற்குள்... இவரும் இந்திராவால் காங்கிரஸில் இருந்து நீக்க பட்டார்...
பின்னர் ஜனதா கட்சி தொடங்கிய போது அதில் முக்கிய தலைவராக இருந்தார்...
1977 இல் ஜனதா கட்சி வெற்றி பெற்ற போது... பிரதமராக முயற்சி செய்தார்... ஆனால் எம்.பி. கள் ஏற்று கொள்ள வில்லை...அதனால் மொராஜி தேசாய் பிரதமரர் ஆனார்...
1979 இல் சரன்சிங் பிரிந்து லோக் தளம் தொடங்கிய பின்னரும்... வாஜ்பாய் பிரிந்து பாரதீய ஜனதா தொடங்கிய பின்னரும்... மீதமிருந்த ஜனதா கட்சிக்கு தலைவராக ஏற்று நடத்தியவர்...
1983 இல் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை பாத யாத்திரை சென்று மக்களிடம் பணம் வசூல் செய்தார்... அந்த பணத்தில் கரியானா மாநிலத்தில் மாதிரி கிராமம் உருவாக்கினார்... பின்னர் அந்த மாதிரி கிராமத்தை சொந்தமாக்கி கொண்டார்...
1980 - 84 கால கட்டத்தில் இந்திரா காந்திக்கு சிம்ம சொப்னமாக இருந்தார்...1987 இல் சரன் சிங் இறந்த பின் லோக தளம் கட்சியை ஜனதாவுடன் இணைத்தார்... பின்னர் ஜனதா தளம் ஆனது...
1989 இல் தேசிய முன்னனி வெற்றி பெற்ற போதும்... பிரதமராக முயற்சி செய்தார்... ஆனால்... இவரது முயற்சி... ராமாராவ், தேவிலால், ராமகிருஷண கெக்டே ஆகியோரால் தடுக்க பட்டு... வி.பி.சிங் பிரதமர் ஆனார்...
1990 நவம்பர் மாதம்... ஜனதா தளத்திள் இருந்து சுப்பிரமணிய சாமி உதவியுடன் 54 எம்.பி.களுடன் பிரிந்து... காங்கிரஸ் - ஜெயலலிதா ஆதரவுடன் பிரதமர் ஆனார்...கிட்ட தட்ட 120 நாட்கள் பிரதமராக இருந்தார்... பின்னர் ராஜிவ் ஆதரவை விலக்கி கொண்ட போது பதவி விலகினார்...
இந்தியாவில் பிரமராக இருந்தவர்களில் செங்கோட்டையில் கொடி ஏற்ற வாய்ப்பு கிடைக்காமல் போனது இவருக்குதான்...
பின்னர் நீண்ட காலம் உ.பி. பலியா தொகுதியில் இருந்து எம்.பி. யாக இருந்தார்...
இந்தியாவில் இருந்த போராட்ட குணம் மிகுந்த... ஒரு நல்ல தலைவராக விளங்கியவர்...

1 comment:

ஜீவி said...

விவரமான பதிவிற்கும், நினைவுகூர்ந்ததற்கும் நன்றி. அவரது
அந்த இந்தியச் சுற்றுப் பயணத்தின்
போது, காஞ்சீபுரத்தில் அவரைச்
சந்தித்த நினைவைப் புதுப்பித்துக்
கொண்டேன்.