Sunday, April 13, 2008

சமஸ்கிருதம் கொண்ட தமிழ் புத்தாண்டு எனும் மோசடி ஒழிக்கப்பட்டது ஏன்?

தமிழுக்கும் தமிழருக்கும் தொடர்பில்லாத வடமொழியை கொண்டு தமிழ் புத்தாண்டு எனும் மோசடி, ஏமாற்று வேலை... அயோக்கியதனம்...

மானமுள்ள தமிழர்களால்... மானமுள்ள தமிழர்களுக்காக ஒழிக்கப்பட்டது ஏன்?

வடமொழி சொற்களை கொண்ட பிரபவ, பவ, வெகுதான்ய... போன்ற எதுவும் தமிழ் அல்ல... தனக்கு தொடர்பில்லாத ஒன்றை தமிழன் தூக்கி எறிவது சரியான முடிவே...

ஆதிக்க சக்திகளால் தமிழனுக்குள் புகுத்தப்பட்ட இந்த... சமஸ்கிருத அவமானத்தை துடைத்து எறிய... தமிழனுக்கு 90 ஆண்டுகள் ஆகியுள்ளது... இந்த புத்தாண்டு எனும் இழிவை... தூக்கி எறிய 1915 இல் இருந்தே... தமிழ் தென்றல் திரு.வி.க. மற்றும் தமிழ்மாமலை மறைமலை அடிகள் இருவரும் இறுதி காலம் வரை போரடி சென்றுள்ளனர்... கடந்த நூற்றாண்டில் திரு.வி.க. மற்றும் மறைமலை அடிகள் இருவரும் தமிழுக்கும்.. சைவ சமயதிற்கும் ஆற்றிய தொண்டு ஈடு இணையற்றது... இந்த ஆண்டு திமுக-கலைஞர் கருணாநிதி எனும் கருவியால் துடைக்கப்பட்டது... தமிழன் மீது திணிக்கப்பட்ட புத்தாண்டு எனும் சமஸ்கிருத இழிவு... இந்த செயல் தமிழுக்கும்... சைவதிற்கும்... திரு.வி.க.விற்கும்... மறைமலை அடிகளுக்கும்... தமிழன் கொடுக்கும் மரியாதை...

உழவர் திருநாளையும்... திருவள்ளுவர் நாளையும்... புத்தாண்டாக கொண்டாடுவதை... தமிழன் தை... தை... என குதிக்கிறானாம்... பேனாவில் மை நிரப்புவதற்கு பதில் அமிலத்தை நிரப்பி... ஆனந்த விகடனில் எழுதியுள்ளார்... ஒரு ஆதிக்க சக்திகளின் பிரதிநிதி... திருவெல்லிகேணியில் இருந்து கிளம்பிய மதனமானவர்... தமிழன் ஒன்றும் அந்த மதனமானவரின் வயிற்றில் தை... தை... என குதிக்க வில்லையே... அப்புறம் ஏன் அந்த மதனமானவருக்கு... தமிழன் மீதும்... தமிழன் கொண்டாடும் தை புத்தாண்டு திருநாள் மீதும் அவ்வளவு வயிற்று எரிச்சல்?

அந்த மதனமானவர்... சித்திரமாய் வரைந்து திரையிட்டு மறைத்து இருந்த... அவரது முகமுடி கிழிந்தது...தமிழனை கண்டு எரியும் அந்த மதமானவரின் கோர முகம்... வெளியே தெரிந்து விட்டது...

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியும் தெரிவிக்க வேண்டியுள்ளது...

தாரண ஆண்டு பஞ்சம்...

1883 இல் முதன் முதலில் தமிழ் நாட்டில் இரயில் இயக்கப்பட்டது... அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் 1884 இல் கடும் பஞ்சம் ஏற்ப்பட்டது... அந்த சமஸ்கிருத ஆண்டின் பெயர் தாரண ஆண்டாம்... இரயில் ஓடியதால்தான் தாரண ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது என பொய் மூட்டைகள் அவிழ்த்து விட்டன... ஆதிக்க சக்திகள்...

இங்கிலாந்த முதலில் ஜார்ஜ் ஸ்டிபன்சன் என்பரால் இரயில் ஓட்டப்பட்ட போது... எப்படி பிற்போக்குவாதிகள்... கோழிகள் முட்டியிடாது... மாடுகள் கன்று போடாது... என பொய் பரப்பினார்களோ அது போல... தமிழகத்தில் ஆதிக்க சக்திகள்.. இரயில் ஓடினால் பஞ்சம் ஏற்படும் என பொய் பரப்பப்பட்டது...

இங்கே உள்ள ஆதிக்க சக்திகளுக்கு இரயில் மீது ஏன் வன்மம்...

அந்த காலத்தில் வெள்ளைகாரர்களால் இயக்கபப்ட்ட இரயில் பயண கட்டணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும்... ஆனால் ஆதிக்க சக்திகளால் இயக்கப்பட்ட பேருந்துகளில்... உயர் சாதியினர் மட்டும்தான் பயணம் செய்ய முடியும்... தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இரயில் வந்தால் பயணம் செய்து விடுவார்கள்... அதனால் இரயில் திட்டங்கள் வளர கூடாது என்பதற்கு ஆதிக்கசக்திகள் எடுத்த ஆயுதம் தாரண ஆண்டு பஞ்சம்...

இப்படி சமுதாயத்தை அடிமைபடுத்த... அடக்கி வைக்க... ஆதிக்க சக்திகள் எடுத்த ஒரு ஆயுதம்... சமஸ்கிருதததை கொண்டு புகுத்திய புத்தாண்டு எனும் புனையல்... இந்த இழிவான சமஸ்கிருத புத்தாண்டு எனும் புனையலை... இன்று தமிழன்... கலைஞர் எனும் கருவியால் துடைத்து கீழே போட்டு விட்டான்...

பொறுத்து இருப்போம்... இன்னும் 9 மாதங்கள்...

தமிழன்...

உழவர் திருநாளை... திருவள்ளுவர் திருநாளை... தமிழ் புத்தாண்டாக கொண்டாடி... கீழே கிடக்கும் சமஸ்கிருத இழிவின் மேல் ஏறி... தை... தை... என ஆடுவான்...

அப்படி தமிழன் தனது திருநாளை கொண்டாடி மகிழ்வதை... கண்டு... ஆதிக்க சக்திகள்... அவர்கள் வயிற்றின் மீது தை... தை... என ஆடிகிறார்கள்... என கற்பனை செய்து அஞ்சினால்... அவர்களுக்கு தேவை... அவர்களின் மனநோய்கான சிகிச்சைதான்...

Saturday, April 5, 2008

பொருளாதார மேதை... அதியமானுக்கு பதில்...

K.R.அதியமான். 13230870032840655763 said...
உல்கம‌யமாக்கல் என்றால் என்ன என்று சரியாக புரியாமலே அதை 'எதிர்பதாக' பலரும்
கருதுவது ஒரு நகைமுரண். என்னுடன் அன்று நீண்ட நேரம் வாதம் செய்த நண்பர் பாரி ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனதில் 'ந‌ல்ல' வேலையில் உள்ளார் ! அந்த வேலை வாய்ப்பு, இந்த இலவச பிளாகர், (ஜி மெயில் நிறுவனத்தின் பரிசு), மலிவான இன்டெர்னெட், கனனிகள், பல லச்சம் புதிய வேலை வாய்ப்புகள், பொருட்க்கள், அரசுக்கு வரிகள் மூலம் பல லச்சம் கோடி புதிய வருமானம்...
இவை அனைத்தும் உலகமயமாக்கல் மூலம்தான் சாத்தியமாயிற்று..

1980வாக்கில் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் கமல் வேலை கிடைக்காமல் சிங்கள் டீக்கு லோல்பட்டது போனற் நிலைமை இன்றைய இளைஞ‌ர்களுக்கு இல்லை. அப்பெல்லாம் இருந்த வறுமையின் அளவு, வேலை வாய்ப்புகள் பற்றி சொன்னாலும் புரியாது.
உலகமயமாக்கல் பற்றி வலைபதிவர் சந்திப்பில் விவாதம் செய்த போது... நிறைய செய்திகள் விவாதிக்கப்பட்டது... அப்படி விவாதிக்கப்பட்ட அனைத்தையும் பதிவு செய்து இருக்கலாம்... அதை விட்டு... உலகமயமாக்கலை எதிர்த்த பதிவர்களை அரைகுறைகளாகவும்... அவரும்... மாமா டோண்டுவும் பெரிய பொருளாதர மேதைகள் போலவும் எழுதி இருக்கிறார்... கே.ஆர்.அதியமான்...

இப்பொது அவர் பதிவு செய்துள்ள கருத்துகளை பார்க்கலாம்...

எனக்கு வேலை கிடைத்தற்கு காரணம்... உலகமயமாக்கல் என எழுதியுள்ளார்... உண்மையில் இது காரணம் இல்லை... நான் படித்த தொழில் சார்ந்த படிப்புதான் காரணம்...

மேலும் இணையமும் கூகில் போன்றவைகள்தான் வேலை வாய்ப்பிற்கு காரணம் எனவும் எழுதியுள்ளார்..

ஆனால் அதியமானுக்கும் கணினி துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என நம்புகிறேன்...

இந்தியாவில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் பற்றிய செய்திகள் கீழே...

1. டிசிஎஸ் என அழைக்கபடும் டாடா நிறுவனம் தொடங்கப்பட்டது... 1969 இல்
2 பட்னி நிறுவனம் தொடங்கப்பட்டது 1970களின் இறுதியில்
3. இன்போசிஸ் தொடங்கப்பட்டது 1982 இல்
4. விப்ரோ தொடங்ப்பட்டது 1970களின் இறுதியில்
5. சத்யம் தொடங்கப்பட்டது 1986 இல்


டிசிஎஸ் 1985 ஆம் ஆண்டே தனது அமெரிக்கா நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது...

சத்யம் 1991 ஆம் ஆண்டே அமெரிக்கா நிறுவனத்துடன் இந்தியாவில் இருந்து பணி சேவை (Offshore) செய்யும் ஒப்பந்தம் செய்து கொண்டது...

இதெல்லாம் உலகமயமாக்கலால் வந்தது அல்ல...

மேலும் இங்குள்ள நிறுவனங்கள் கூகில் போன்ற இலவச சேவைகளை கொண்டு தொழில் செய்வதில்லை... இது பொய்யான தகவல்...

அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நிறுவனங்கள் பெரிய அளவில் இந்தியாவுடன் மென்பொருள் சேவை ஒப்பந்தம் தொடங்கிய 1995 - 96 ஆம் ஆண்டுகளின் போது... அப்பொது பிரச்சனையாக இருந்து Y2K பிரச்சனைக்கு எளிதான தீர்வை... இந்திய நிறுவனங்கள் அளித்தன... அதன் பிறகுதான் உலக நிறுவனங்கள் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைத்து... நிறைய மென்பொருள் சேவை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கொண்டன... இதற்கும் உலகமயமாக்கலுக்கும் எந்த தொடர்பும் இல்லை...

ஐபிஎம் போன்ற அமெரிக்க நிறுவங்கள்... 1 மணி நேரதிற்கு வாங்கும் 200 டாலரான சேவை கட்டணத்தை... இந்திய மென்பொருள் நிறுவனங்கள் 15- 25 டாலருக்கு செய்து கொடுக்கின்றன...

இதுதான் இந்திய மென்பொருள் நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணம்... குறைந்த கட்டணத்திற்கான சேவை... இது உலகமயமாக்கலால் நடந்தது அல்ல...

அதியமான் என்ற பதிவர் அவருக்கு தெரிந்த கூகில், ஜி மெயில், பிளாகர் இலவச சேவை... இதுதான் கணிபொறி உலகம் என நினைக்கிறார்... உண்மையில் கணினி நிறுவனங்களில் அவர் குறிபிட்ட இலவச சேவைகள் எல்லாம் தடை செய்யப்பட்டவை...

தனக்கு தெரியாத துறை பற்றி பேசாமல் இருப்பது நல்லது...

1980 களில் வேலையில்லா திண்டாட்டம் இருந்ததாக வருந்தும் பதிவர் சொல்வது... பூனை கண்ணை மூடி கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பது போல் உள்ளது...

1980 களில் தொழில் துட்ப படிப்பு படித்த பொறியாளர்கள் (பட்டம் மற்றும் பட்டயம்) படித்த யாருக்கும் வேலை கிடைக்காமல் இல்லை... வறுமையில் நிறம் சிவப்பு படத்தில் காட்டி இருப்பது போல் போல் இப்போதும் பி.ஏ., எம்.ஏ. படித்தவர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் உண்டு...

அதியமான் போன்றவர்களுக்கு உறங்குவதும், எழுவதும், மலம் கழிப்பதும், சிறுநீர் கழிப்பதும், நடப்பதும், ஓடுவதும், படுப்பதும் போன்ற இயல்பான வேலைகள் கூட உலகமயமாக்கலால் நடக்கிறது என நினைத்து கொண்டுள்ளார்கள்...

கேட்டால் 1980 களில் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்ததாகவும்... உலகமயமாக்கலால் சரியானதாகவும் சொல்வார்...

ஒரு இடத்தில் நடந்த விவாதம் பற்றி எழுவது என்றால் முழுதாக எழுத வேண்டும்... இல்லா விட்டால் மூடி கொண்டு இருக்கலாம்... மாமா டோண்டு அப்படிதான் சரியாக மூடி கொண்டு இருந்தார்...

அதியமான் என்ற பதிவருக்கு பார்வை எல்லாமே சுயநல பார்வைதான்... 1970 களுக்கு முன் பிறந்தவர்களுக்கு வேலை கிடைக்க வில்லை... 70 களுக்கு பின் பிறந்தவர்களுக்கு எல்லோருக்கும் நல்ல வேலை கிடைத்து விட்டதாம்... உலகமயமாக்கலால்... 1970 களுக்கு முன் பிறந்த யாரும் உருபடவே இல்லையா? 70 களுக்கு பின் பிறந்த அனைவரும் கட்டு கட்டாக பிடுங்கி விட்டார்களா?

அதியமான்... ஜாதகம்... எண் கணிதம் போன்ற மூட நம்பிக்கைகளை பேசும்... தன் நன்பிக்கை இல்லாத ஒரு ஜென்மம்... மற்றவர்களுக்கு பாடம் சொல்ல கிளம்புகிறது...

அதியமான்... மற்றவர்கள் விவாதம் செய்த கருத்துகளையும் பதிவு செய்து விட்டு... உங்கள் விவாதத்தையும் பதிவு செய்வது நேர்மையான செயல்... அதை விட்டு... உங்கள் கருத்தை மட்டும் பதிவு செய்து... மற்றவர்களை முட்டாள் ஆக்கியது... இது உங்களை மட்டும் வீரர் என சொல்லி கொள்வது பொட்டைதனம்... ஆணமையில்லாதவர்கள் செய்வது...

உங்களது ஆண்மையற்ற... பொட்டைதனமான... பார்ப்பன அடிவருடிகளின் அயோக்கியதன்னத்தை... என்னை போன்றவர்களால் பொறுத்து கொள்ள முடியாது... நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...

தனிமனிதனை பற்றி நேர்மை இல்லாமல் தாக்கியவதற்கு பதில்தான் இது...
நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதில்லை...

Friday, April 4, 2008

தமிழர் - கன்னடர் பிரச்சனை - யாருக்கு லாபம்?

காவிரி நீர் பிரச்சனை...

இப்போது ஒக்கேனக்கல் பிரச்சனை...

இந்த இரண்டு பிரச்சனைகளும் தமிழர்களுக்கும் கன்னடர்கள் இடையே பெரும் பகையை உண்டாக்கியுள்ளன...

இப்போது ஒக்கேனக்கல் பிரச்சனையில் தமிழர்கள் அனைவரும்... சமூக விரோதிகள் போல் செயல்படும்... கன்னட வன்முறை அமைப்புகள்... பாஜக... வட்டள் நாகராஜ் குழு, நாராயண கௌடா குழு போன்ற குழுக்களை சாடுகின்றனர்...

ஆனால் தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் மட்டும் கருத்து கூறாமல் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன?

அந்த தலைவர் ஜெ...

காரணம்...

1. பிறப்பால் கன்னடர் எனபதலா?

2. வருமானதிற்கு அதிகமாக 72 லட்ச ரூபாய்க்கு சொத்து சேர்ந்த வழக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் தொங்கி கொண்டு இருப்பதாலா?

3. ஏற்கென்வே நடந்த ஊழல் வழக்குகளில் அத்வானி - முரளி மனோகர் ஜோஷி கும்பல் காப்பாற்றியது போல்... எடியூ... பொறுக்கியும்... பங்காரப்பாவும் காப்பாற்றுவார்கள் எனும் நம்பிக்கையா?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதிற்காக தன்னுடைய எலும்பை முறித்தாலும் நிறைவேற்றுவேன் என அறிவித்துள்ளார் கலைஞர்...

கன்னட சமூக விரோதிகள்... கலைஞரில் எலும்பை முறிக்க போகிறார்களா?

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? கிருஷ்ணகிரி... தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நீர் கிடைத்தால் என்ன? கிடைக்கா விட்டால் என்ன?

ஜெ... மௌனமாகவே இருப்பார்...

காரணம்...

1. 1 ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெ... 72 லட்சம் ரூபாய்க்கு எப்படி பொருள்கள் வாங்கினார்?

2. 7 லட்ச ரூபாய்க்கு எப்படி செருப்புகள் வாங்கினார்?

3. 15 லட்சம் ரூபாய்க்கு புடவைகள் எப்படி வாங்கினார்?

4. சில லட்சம் ரூபாய் சிறப்பு வசதியுடைய பேருந்து எப்படி வாங்கினார்?

5. சசிகலாவின் அக்கா மகன் தினகரன்... லண்டனில் 38 லட்சம் ரூபாய்க்கு ஹோட்டல் எப்படி வாங்கினார்?

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதிற்கு ஜெ மௌனமாக இருக்கும் போது... மேலே கேட்கப்பட்ட கேள்விகளும்... கர்நாடகா அரசு வழக்கறிஞராக கேட்கபடாமல் இருக்குமே?

இப்படி போராட்டம் நடத்துவதால்...

கர்நாடகா கட்சிகளுக்கு தேர்தலில் லாபமோ?

கிருஷ்ணகிரி... தர்மபுரி மக்களுக்கு குடிநீர் கிடைக்குமோ?

தெரியாது...

ஜெவுக்கு லாபம்... இவ்வளவு உணர்வு ரீதியாக போராடுபவர்களை விட...

மௌனமாக இருந்து ஜெ... லாபமடைய போகிறாரா? அது அவருடைய ரத்தம்... அவருடைய கன்னட ரத்தம்... பார்ப்பன ரத்தம்.. அவரை எப்படியும் காப்பாற்றி விடுமா?