Sunday, April 13, 2008

சமஸ்கிருதம் கொண்ட தமிழ் புத்தாண்டு எனும் மோசடி ஒழிக்கப்பட்டது ஏன்?

தமிழுக்கும் தமிழருக்கும் தொடர்பில்லாத வடமொழியை கொண்டு தமிழ் புத்தாண்டு எனும் மோசடி, ஏமாற்று வேலை... அயோக்கியதனம்...

மானமுள்ள தமிழர்களால்... மானமுள்ள தமிழர்களுக்காக ஒழிக்கப்பட்டது ஏன்?

வடமொழி சொற்களை கொண்ட பிரபவ, பவ, வெகுதான்ய... போன்ற எதுவும் தமிழ் அல்ல... தனக்கு தொடர்பில்லாத ஒன்றை தமிழன் தூக்கி எறிவது சரியான முடிவே...

ஆதிக்க சக்திகளால் தமிழனுக்குள் புகுத்தப்பட்ட இந்த... சமஸ்கிருத அவமானத்தை துடைத்து எறிய... தமிழனுக்கு 90 ஆண்டுகள் ஆகியுள்ளது... இந்த புத்தாண்டு எனும் இழிவை... தூக்கி எறிய 1915 இல் இருந்தே... தமிழ் தென்றல் திரு.வி.க. மற்றும் தமிழ்மாமலை மறைமலை அடிகள் இருவரும் இறுதி காலம் வரை போரடி சென்றுள்ளனர்... கடந்த நூற்றாண்டில் திரு.வி.க. மற்றும் மறைமலை அடிகள் இருவரும் தமிழுக்கும்.. சைவ சமயதிற்கும் ஆற்றிய தொண்டு ஈடு இணையற்றது... இந்த ஆண்டு திமுக-கலைஞர் கருணாநிதி எனும் கருவியால் துடைக்கப்பட்டது... தமிழன் மீது திணிக்கப்பட்ட புத்தாண்டு எனும் சமஸ்கிருத இழிவு... இந்த செயல் தமிழுக்கும்... சைவதிற்கும்... திரு.வி.க.விற்கும்... மறைமலை அடிகளுக்கும்... தமிழன் கொடுக்கும் மரியாதை...

உழவர் திருநாளையும்... திருவள்ளுவர் நாளையும்... புத்தாண்டாக கொண்டாடுவதை... தமிழன் தை... தை... என குதிக்கிறானாம்... பேனாவில் மை நிரப்புவதற்கு பதில் அமிலத்தை நிரப்பி... ஆனந்த விகடனில் எழுதியுள்ளார்... ஒரு ஆதிக்க சக்திகளின் பிரதிநிதி... திருவெல்லிகேணியில் இருந்து கிளம்பிய மதனமானவர்... தமிழன் ஒன்றும் அந்த மதனமானவரின் வயிற்றில் தை... தை... என குதிக்க வில்லையே... அப்புறம் ஏன் அந்த மதனமானவருக்கு... தமிழன் மீதும்... தமிழன் கொண்டாடும் தை புத்தாண்டு திருநாள் மீதும் அவ்வளவு வயிற்று எரிச்சல்?

அந்த மதனமானவர்... சித்திரமாய் வரைந்து திரையிட்டு மறைத்து இருந்த... அவரது முகமுடி கிழிந்தது...தமிழனை கண்டு எரியும் அந்த மதமானவரின் கோர முகம்... வெளியே தெரிந்து விட்டது...

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியும் தெரிவிக்க வேண்டியுள்ளது...

தாரண ஆண்டு பஞ்சம்...

1883 இல் முதன் முதலில் தமிழ் நாட்டில் இரயில் இயக்கப்பட்டது... அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் 1884 இல் கடும் பஞ்சம் ஏற்ப்பட்டது... அந்த சமஸ்கிருத ஆண்டின் பெயர் தாரண ஆண்டாம்... இரயில் ஓடியதால்தான் தாரண ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது என பொய் மூட்டைகள் அவிழ்த்து விட்டன... ஆதிக்க சக்திகள்...

இங்கிலாந்த முதலில் ஜார்ஜ் ஸ்டிபன்சன் என்பரால் இரயில் ஓட்டப்பட்ட போது... எப்படி பிற்போக்குவாதிகள்... கோழிகள் முட்டியிடாது... மாடுகள் கன்று போடாது... என பொய் பரப்பினார்களோ அது போல... தமிழகத்தில் ஆதிக்க சக்திகள்.. இரயில் ஓடினால் பஞ்சம் ஏற்படும் என பொய் பரப்பப்பட்டது...

இங்கே உள்ள ஆதிக்க சக்திகளுக்கு இரயில் மீது ஏன் வன்மம்...

அந்த காலத்தில் வெள்ளைகாரர்களால் இயக்கபப்ட்ட இரயில் பயண கட்டணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும்... ஆனால் ஆதிக்க சக்திகளால் இயக்கப்பட்ட பேருந்துகளில்... உயர் சாதியினர் மட்டும்தான் பயணம் செய்ய முடியும்... தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இரயில் வந்தால் பயணம் செய்து விடுவார்கள்... அதனால் இரயில் திட்டங்கள் வளர கூடாது என்பதற்கு ஆதிக்கசக்திகள் எடுத்த ஆயுதம் தாரண ஆண்டு பஞ்சம்...

இப்படி சமுதாயத்தை அடிமைபடுத்த... அடக்கி வைக்க... ஆதிக்க சக்திகள் எடுத்த ஒரு ஆயுதம்... சமஸ்கிருதததை கொண்டு புகுத்திய புத்தாண்டு எனும் புனையல்... இந்த இழிவான சமஸ்கிருத புத்தாண்டு எனும் புனையலை... இன்று தமிழன்... கலைஞர் எனும் கருவியால் துடைத்து கீழே போட்டு விட்டான்...

பொறுத்து இருப்போம்... இன்னும் 9 மாதங்கள்...

தமிழன்...

உழவர் திருநாளை... திருவள்ளுவர் திருநாளை... தமிழ் புத்தாண்டாக கொண்டாடி... கீழே கிடக்கும் சமஸ்கிருத இழிவின் மேல் ஏறி... தை... தை... என ஆடுவான்...

அப்படி தமிழன் தனது திருநாளை கொண்டாடி மகிழ்வதை... கண்டு... ஆதிக்க சக்திகள்... அவர்கள் வயிற்றின் மீது தை... தை... என ஆடிகிறார்கள்... என கற்பனை செய்து அஞ்சினால்... அவர்களுக்கு தேவை... அவர்களின் மனநோய்கான சிகிச்சைதான்...

9 comments:

Anonymous said...

தாங்கள்தான் அந்த 60 வருடங்களுக்கும் தமிழ் பெயர் வையுங்களேன்

Anonymous said...

கருனாநிதி செய்த முட்டாள்த்தனம். இது இந்துக்களின் புதுவருடம்.தமிழ்நாட்டில் உள்ள தமிழ் கிறிஸ்த்தவன் ஜனவரி முதலாம் திகதி கொண்டாடுகின்றான்.
தமிழ் முஸ்லீம் இஸ்லாமிய ஆண்டுப் பிறப்பைக் கொண்டாடுகின்றான்

இவர்களை எல்லாம் கருனாநிதியால் தடுக்க முடியுமா?

தைத் திருனாள் ஜனவரி 14ம் திகதி வருகிறது. அது எவ்வாறு யாரல் கணிக்கப்பட்டது?
அந்த விபரம் தெரியுமா?

தமிழன் பல மதங்களில் இருக்கின்றான்.
உலகில் ஒரு இனத்துக்கு புது வருடம் என ஒன்று இல்லை. மத அடிப்படையில் தான் கொண்டாடுகின்றார்கள்.


மத நம்பிக்கையில்லாதவர்கள் மத நம்பிக்கை உள்ளவர்கள் விடயத்தில் ஏன் தலையிட வேண்டும்?

புள்ளிராஜா

Anonymous said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.... நன்றி.

தமிழ் குரல் said...

//*
கூடுதுறை said...
தாங்கள்தான் அந்த 60 வருடங்களுக்கும் தமிழ் பெயர் வையுங்களேன்
*//

60 பெயர்கள் எல்லாம் தேவையில்லை...

திருவள்ளுவர் ஆண்டு என்பது ஆண்டுகளை வரிசையாக, தொடர்ச்சியாக குறிக்க எழுந்த காலம் காட்டும் முறை. இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். 2008 ஆண்டு என்று கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவதை 2039 ஆம் ஆண்டு என்று திருவள்ளுவர் ஆண்டு முறையில் குறிப்பிடப்படும்.

தமிழக அரசு 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. 1972 ஆண்டு அரசிதழிலும் (Gazette) வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.

தமிழ் குரல் said...
This comment has been removed by the author.
தமிழ் குரல் said...
This comment has been removed by the author.
தமிழ் குரல் said...

//*
pulliraajaa said...
கருனாநிதி செய்த முட்டாள்த்தனம். இது இந்துக்களின் புதுவருடம்.தமிழ்நாட்டில் உள்ள தமிழ் கிறிஸ்த்தவன் ஜனவரி முதலாம் திகதி கொண்டாடுகின்றான்.
தமிழ் முஸ்லீம் இஸ்லாமிய ஆண்டுப் பிறப்பைக் கொண்டாடுகின்றான்

இவர்களை எல்லாம் கருனாநிதியால் தடுக்க முடியுமா?

தைத் திருனாள் ஜனவரி 14ம் திகதி வருகிறது. அது எவ்வாறு யாரல் கணிக்கப்பட்டது?
அந்த விபரம் தெரியுமா?

தமிழன் பல மதங்களில் இருக்கின்றான்.
உலகில் ஒரு இனத்துக்கு புது வருடம் என ஒன்று இல்லை. மத அடிப்படையில் தான் கொண்டாடுகின்றார்கள்.


மத நம்பிக்கையில்லாதவர்கள் மத நம்பிக்கை உள்ளவர்கள் விடயத்தில் ஏன் தலையிட வேண்டும்?

*//

புள்ளிராஜா,

இந்து... பொந்து என்பதே ஒரு ஏமாற்று வேலை...

மலையாளர்கள் விஷு எனவும்... மராட்டியர் குடிபாடுவா எனவும், தெலுங்கரும், கன்னடரும் யுகாதி எனவும்... அவரவர் விருப்படி தனியாக புத்தாண்டு கொண்டாடுகின்றனர்... அப்படி கொண்டாடுபவர்களும் இந்து... பொந்துதான்...

தமிழன் தனியாக மானத்தோடு புத்தாண்டு கொண்டாடுவது உங்களுக்கு எங்கே வலிக்கிறது...

உழவர் திருநாளையும், திருவள்ளுவர் திருநாளை... தமிழ் புத்தாண்டாக கொண்டாடினால்... சைவ சமயத்தினர்... இஸ்லாமியர்கள்... கிருத்துவர்கள் அனைவரும்... தமிழராக கொண்டாடுவர்...

இந்து... பொந்து என ஊளையிடும்... தமிழினதிற்கு எதிரான ஆதிக்க சக்திகளை... தமிழர்களாகிய நாங்கள் இப்போது அளையாளம் கண்டு கொண்டோம்... கண்டு கொண்டோம்...

வசந்தத்தின் தூதுவன் said...

நல்ல பதிவு. இன்றைய நாளில் மிகவும் தேவையான அருமையான பதிவு. சித்திரை ஒன்றை கொண்டாடியே தீருவேன் என்பவர்கள் சித்திரை திருநாள் என்ற பெயரில் கொண்டாடி விட்டு போங்களேன். அதற்காக ஏன் தையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவதை எதிர்க்க வேண்டும். உண்மையான தமிழர்கள் ஏற்கனவே சித்திரையில் அல்லாமல் தை ஒன்றிலேதான் தமிழ் புத்தாண்டு கொண்டாடி வருகிறோம். தற்போது வந்துள்ள தமிழக அரசின் அறிவிப்பு சமஸ்க்ரித, ஆரிய மாயையில் இருக்கும் தமிழர்களையும் நேர்வழிப் படுத்தவும் நெறி படுத்தவும் மட்டுமே. இந்த செயலில் சிறுபான்மை இனத்தவரான பார்ப்பனர், முஸ்லீம், கிறித்தவர் ஆகியோர் சற்று பொறுமையுடன் இருப்பீர்களாக. நீங்களும் தமிழர் போல் தமிழர் புத்தாண்டை தை முதல் நாளில் கொண்டாட வரவேற்கப் படுகிறீர்கள். தமிழின ஆர்வலர்கள் பார்ப்பனர் முஸ்லீம் மற்றும் கிறித்தவர் மூவரையும் ஒரே தட்டில் வைத்து எடை போட வேண்டும். மூன்று இனத்தவரும் தமிழர் பண்பாட்டை மதத்தின் பெயரால் அழித்து வருகின்றனர். ஆகவே தான் புள்ளி ராஜா போன்றோர் பள்ளிக்கூட சிறுவன் போல முஸ்லீம் செய்யுறன் நானும் செய்யுறேன். கிறித்தவன் செய்யுறான் நானும் செய்யுறேன் அப்பிடின்னு சொல்றாங்க. இனிமேல் திட்டும் போது பாரபட்சம் இல்லாமல் திட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் குரல் said...

தமிழ் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...