Wednesday, November 25, 2009

சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்



சமூக நீதி காவலர் திரு.விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களுக்கு முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் வெள்ளி (27-11-2009) அன்று மாலை 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பாவலர் அறிவுமதி மற்றும் வழக்கறிஞர் அருள்மொழி கலந்து கொண்டு உரை ஆற்றுவார்கள்.

1990 ஆம் ஆண்டு மே மாதம்... சென்னையில் பத்திரிக்கையாளர்கள் விடுதலை புலிகள் தீவிரவாதிகள் என விளித்து வி.பி.சிங் அவர்களிடம் கேள்வி கேட்ட போது... எவரையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது கோட் பாக்கெட்டில் இல்லை என பதில் அளித்து... தமிழீழ விடுதலை போராளிகளுகளை சரியான பார்வையில் கண்டவர்...

நவீன நீரோ மன்னன் சிங்கள பேரினவாததிற்கு ஆதரவாக... எம் இன மக்களை கொன்று குவிக்கவும், தமிழின சகோதரிகளை கற்பழிக்கவும் அனுப்பிய படைகளின் சேவை சிங்கள அரசிற்கு போதும் என திரும்ப அழைத்தவர் வி.பி.சிங்...

தமிழர்கள் மீது மட்டற்ற அன்பு கொண்ட அந்த தலைவர் மானமுள்ள தமிழர்கள்... மரியாதை செலுத்தும் மாவீரர்கள் நாளிலேயே மறைந்தார்...


சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் மறைவு... கடந்த ஆண்டு பாசிச ஊடங்களால் மறைக்கப்பட்டும், இந்தியா டுடே எனும் பத்திரிக்கையால் இழிவுபடுத்தப்பட்டது...

ஆதிக்க வர்க்கமும், பாசிசவாதமும்... இழிவுபடுத்திய சமூக நீதி காவலர்... பிற்ப்படுத்தப்பட்ட... ஒடுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்குரியவர்...

சமூக நீதியில் விருப்பமுடைய நண்பர்கள் அனைவரும் சமூக நீதிக் காவலரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்...