Tuesday, March 29, 2011

இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்களின் இம்சைகள்...

கடந்த ஞாயிறு அன்று சேவ்-தமிழ் அமைப்பின் மகளிர் தின நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற போது... அங்கே படிக்கப்ப்ட்ட ஒரு கட்டுரையை பற்றி தோழர் ஒருவரிடம் கேட்ட போது... என்னை அறிவு அற்றவனாக எண்ணி... கீற்றில் கட்டுரை உள்ளது... போய் படித்து பார்க்க சொன்னார்...

கட்டுரையும் படித்தாகி விட்ட்து...

முகம் மறைத்தவளும்... சுயம் தொலைத்தவர்களும் எனும் அந்த கட்டுரை... விடுதலை புலிகளின் தோல்வியை... ஜெர்மனிய நாஜி படை... ரஷ்ய படைகளிடம் தோல்வி கண்டதை ஒப்பிடுகிறது... ஜெர்மனி ஹிட்லர் ஆதிக்க வெறியோடு நடத்திய ஆக்கிரமிப்புகள்தான் போரை தொடங்க காரணமாக இருந்தது... ஜெர்ம்னியின் ஆதிக்க வெறிக்கு எதிராக போரிட்ட செஞ்சேனைகள்... சிங்கள படைகளுக்கு நிகராக ஒப்பிடபட்டுள்ளது... புல்லரிக்குது...

முதலாளிதுவ ஆதரவு... மேற்கத்திய கட்டுரையை பரப்பும் இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர்... அமெரிக்க ஆதரவு முதலாளிதுவ ஊடங்கள்... தினமும் ஒளிபரப்பி வரும் செய்திகள்... பிடலும்-சேவும் மக்களை கொலை செய்தார்கள்... பிரபாகரன் மக்களை கொலை செய்தார் போன்ற செய்திகளையும் நம்பதான் வேண்டி இருக்கலாம்... இவர்களின் முதலாளிதுவ மேற்கத்திய மோகம் அப்படியும் செய்ய வைக்கும்...

இது போன்ற மேற்கத்திய ஆதரவு கட்டுரைகளை கொண்டுதான் ஈழத்தை முட்டு கொடுக்க வைக்க முடியும்... கட்டுரையாளாரான இன்ஸ்டண்ட் ஈழ ஆதரவாளர் நினைப்பார் என்றால் பாவம் ஈழம்... இருக்கிறது இணையம்.. கிடைக்கிறது மேடை என்பதற்காக கொள்கையில்லாமல்... கோவணமில்லாம் கட்டுரைகள் அரகேற்றபட்டால்... இது போன்ற மேடைகள்... பார்ப்பனர்கள் இடைவேளையில் தயிர் வடை சாப்பிடும் மார்கழி மாத சபாக்கள் போலவும்... எஸ்.வி.சேகர்-கிரேசி மோகன் டிராமாக்கள் போல் ஆகி விடும்...

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றிய கட்டுரையை எழுத விரும்பியவர்... பாசிச ஹிட்லரின் ஜெர்மனிகாக அழுகிறார் பாவம்... ஈராகில் அமெரிக்க படைகள் நடத்தும் அக்கிரமங்களையும்... காஷ்மீரில் இந்திய படைகள் பெண்களுக்கு எதிராக நடத்தும் பாலியல் கொடுமைகளை காண முடியாமல்... கட்டுரையாளரின் கண்கள் குருடாகி விட்டதோ என்னவோ? முதலாளிதுவ ஆதரவு கண்கள் அப்படித்தான் இருக்குமோ?

இந்த கட்டுரையாளர் மற்றவர்களுக்கு 6 ஆலோசனை அல்லது 6 ஆணையிடுகிறார்... இந்த ஆறில் அவரது பங்களிப்பு என்னவோ? இப்படி தன்னை தலைவராக நினைத்து ஆலோசனை அல்லது ஆணை இட்டே... இவர் ஈழம் வாங்கி கொடுத்து விட முடியும் என நம்புகிறார் போலும்...

தமிழின அழிப்பு பற்றி இவரது இந்திய நிலை என்ன என்றோ இவரின் நிலை என்ன என்றோ சொல்லி விட்டு... உலகிற்கு ஆணையிடலாம்... கருணாநிதியை தோற்கடித்து விட்டு இவரை போன்ற இன்ஸ்டண்ட் ஈழ தாய் ஜெயலலிதா... அவரது அண்ணன் ராஜபக்சேவிடம் உரிமையோடு ஈழம் வாங்கி தருவார் என நம்புகிறாரோ?

சிங்கள அரசின் அவசர நிலை சட்டம் பற்றி பாடம் நடத்தும் போதே... ஹிந்திய அரசு காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகளை ஒடுக்கிறேன் என செய்யும் காட்டுமிராண்டிதனம் பற்றி கள்ள மவுனம் சாதிப்பாரோ?

சிங்கள அரசு தமிழர்களுக்கு உதவி செய்ய போராட வேண்டும் என்கிறார்... எங்கு சென்று?

இவர் ஆணையிட்டுதான் ஈழத்திற்கு சர்வதேச தொண்டு அமைப்புகள் செல்ல வேண்டும் நம்புகிறாரோ இந்த கட்டுரையாளர்... சர்வதேச அமைப்புகளை சிங்கள அரசுதான் வெளியேற்றியுள்ளது... அந்த அமைப்புகள் ஈழ பகுதிக்குள் அனுமதித்தாலே போதும்... இதற்கு கட்டுரையாளரின் ஹிந்திய அரசு எத்தனை ஆணிகளை பிடுங்கியது சொல்வாரா?

மனித உரிமை அமைப்புகளுக்கு ஈழத்திற்கு வழி தெரியாது போலும்... இனிமேல் கட்டுரையாளர்தான் மனித உரிமை அமைப்புகளுக்கு ஈழத்தின் வழிகாட்டி... ஷங்கரின் சிவாஜியில் ரஜினி பழகியது... பழக வைக்க போகிறார் போலும்...

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேவ்-தமிழ் நடத்திய நிகழ்வுகள் கலந்து கொண்ட வரையில்... இது போன்ற அரைகுறை கட்டுரையை கண்டதில்லை... இது போன்ற அரைகுறை அறிவிஜீவி கட்டுரைகள் சேவ்-தமிழ் அமைப்பின் நோக்கங்களை மாற்றி விடும்...