Saturday, August 25, 2007

காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் வாக்குமூலம். 1

நான் பல ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். இல் பணிபுடிந்தேன். பின் இந்து மகாசபையில் சேர்ந்தேன். இந்து கொடியின் ஒரு போர் வீரனாகச் செயல்பட நானாகவே முன்வந்தேன். இந்த நேரத்தில்தான் வீர சாவர்க்கர் இந்து மகாசபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவரது சுறாவளி பிரச்சாரம், காந்தமாகக் கவர்ந்திடும் தலைமையின் கீழ் முன் எப்போதையும் விட இந்து இயக்கம் பன்மடங்கு வளர்ச்சியும் வேகமும் பெற்றது. லட்சக்கணக்கான இந்து பெருமக்கள் இவரை தங்களது தள்பதியாக போற்றினர்.

இந்து மக்களுக்காகத் திறமையுடன், நம்பிக்கையுடனும் வாதாடக் கூடிய தலைவராக சாவர்க்கரை பார்த்தனர். இப்படிப் பட்டவர்களுல் நானும் ஒருவன். இந்து மகாசபையின் நடவடிக்கைகளை நான் பக்தி சிரத்தையுடன் மேற்கொண்டேன். இதனால் எனக்கு சாவர்க்கருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 'சாவர்க்கர் சதனில்' (சாவர்க்கரின் விடு) தரைத் தளத்தில் அமைந்திருந்த இந்து சங்காதன் அலுவலத்திற்கு அவ்வப்பொழுது சென்று வந்தது இதற்க்காகத்தான் என்பதை நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

No comments: