Friday, August 14, 2009

போர் குற்றவாளி - தண்டனைக்குரியவர் - விடுதலை

நாளை 15-08- 2009... இந்தியா என அழைக்கபடும் ஒன்றின் 62வது விடுதலை நாளாம்...

காந்தி-நேரு கூட்டம் விடுதலை பத்திரம் வாங்கும் போது... விடுதலைக்கு வீரத்துடன் போராடிய சுபாஷ் சந்திர போஸை... வெள்ளையர்கள் ஏகாதிபத்தியதிற்கு எதிராக சண்டையிட்ட போர் குற்றவாளி... இவர் இந்தியாவிற்குள் வந்தால் வெள்ளை ஏகாதிபத்தியதித்கு பிடித்து கொடுப்பதாக பத்திரம் எழுதிகொடுத்துள்ளனர்... இன்றும் நேதாஜி இந்தியாற்கு போர் குற்றவாளிதான்...

ஐ.சி.எஸ். பதவி தூக்கி எறிந்து விட்டு... போராட்டதிற்கு வந்த சுபாஷ்... 1940களின் தொடக்கத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தலில் காந்தியால் நிறுத்தப்பட்ட பட்டாபியை தோற்கடித்து காங்கிரஸ் தலைவரான போது... பட்டாபியின் தோல்வி எனது தோல்வி என காந்தி சொன்ன காரணத்தால்... காங்கிரஸை விட்டு விலகி... ஜப்பான்... மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு சென்று... 1942 ஆகஸ்ட் 7ஆம் தேதி... இந்திய தேசிய படையை உருவாக்கினார்... இவரது படையில் போராட்டங்களே... இந்திய விடுதலைக்கு ஆதரவாக... வெள்ளை அரசுக்கு கொடுக்கப்பட்ட பேரிடி... ஆனால் விடுதலையின் போது சுபாஷ் போது குற்றவாளி... இதுதான் இழிவாக இந்தியா வெற்ற விடுதலை...

இந்த ஆண்டு இந்தியர்கள்... மிக மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்களோ?

இந்த ஆண்டு இந்தியாவின் ஆதிக்க வெறிக்கு இரையானவர்கள்... சுமார் 1 1/2 லட்சம் ஈழ தமிழர்கள்... தமிழினத்தின் 1 1/2 லட்சம் உயிர்களை சிங்கள காட்டுமிராண்டிகளுன் சேர்ந்து கொன்று ஒழித்து விட்டு 'ஹிந்தி'யர்கள்... விடுதலை நாளை மகிழ்ச்சியாக கொண்டாட்டும்... இப்படிப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடதானா தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி... முதல் முதலில் 1969இல் முதல் அமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை... 'ஹிந்தி'ய அரசிடம் இருந்து பிச்சையாக பெற்றாரோ?

தமிழர்கள் கொன்றொழித்த மகிழ்ச்சியில் எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேனனும், பிரனாப் முகர்ஜியும், சோனியாவும், ராகுலும், மன்மோகனும், ஏ.கே.அந்தோனியும், இந்து ராமும், சோனா சாமியும், சூனா சாமியும், ஜெவும்... மகிழ்ச்சியாக கொண்டாட்டும்...

'ஹிந்தி'யா போட்ட பிச்சையை கொண்டு... கருணாநிதியும், ஸ்டாலினும், தயாநிதியும் மகிழ்ந்து விட்டு போகட்டும்...

இந்த மானகெட்ட நாட்டில்... உண்மையாய்... உறுதியாய் போராடிய சுபாஷே குற்றவாளியான போது... இந்த கேடு கெட்ட விடுதலை நாள் என்பது போராளிகளுக்கு அவமானம்...

கொலைகாரர்களும்... பிச்சைகாரர்களும் வேண்டுமானால்... கேவலமான விடுதலை நாளை கொண்டாடி விட்டு போகட்டும்...

மானமுள்ள தமிழர்களே... 'ஹிந்தி'யாவின் கொடியை காறி உமிழ்ந்து... காலால் மிதித்து எறியுங்கள்... என்று தமிழனுக்கென்று... அவனது சொந்த மண் உரிமையாகிறதோ... அன்றுதான் தமிழனுக்கு விடுதலை நாள்...

6 comments:

நண்பன் said...

நல்ல பதிவு. சுபாஷ் சந்திரபோஸை பற்றிய புதிய செய்தி அறிந்துகொண்டேன்.

நன்றி.

siruthai said...

ஒடுக்கபட்ட தமிழினத்திற்கு ஆரிய ஏகாதிபத்தியம் அளிப்பதுதான் தீர்வா?

13-வது அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வாய்கிழிய பேசி திரியும் காங்கிரசு களவாணி கும்பல்கள்.அச்சட்டம் ஈழ தமிழர்களால் ஏற்கெனவே நிராகரிக்கபட்டது எனும் உண்மையை ஏனோ செலக்டிவ் அம்னிஷியா போல் மறந்து போகின்றனர்..அல்லது அத்திட்டதினை வலியுறுத்தும் அவர்கள் இந்தியா போன்று மதசார்பற்ற இலங்கை என அவர்களது ஆரிய கூட்டாளியான ராசபக்சேவிடம் வலியுறுத்த தயாரா?சென்னையில் காங்கிரசு பிரச்சார கூட்டதின் போது ராஜீவ்காந்தி’ஜீ ‘ ஏற்படுத்தி கொடுத்த ஒப்பந்தமே தமிழர்களுக்கு தீர்வு என ஊளையிட்ட சோனியா மைனா அந்த ஒப்பந்தித்தின் படி வடக்கு கிழக்கை இணைக்க இலங்கையை மிரட்டுவாரா?
இளித்தவாயன்கள் மேல் ஏறி மிதிக்கு இந்தி தேசியம்

ஈழ தமிழர்களின் அரசியல் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் தீர்ப்பு சொல்ல இவர்கள் யார்?.. http://siruthai.wordpress.com/2009/07/03/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/

அக்னி பார்வை said...

ஏதோ ஒரு நாள் லீவு கிடைக்குது அதுக்கும் ஆப்பு வச்சா எப்படி?

தமிழ் குரல் said...

அக்னி பார்வை,

'ஹிந்தி'ய ஆதிக்கவாதம் அளிக்கும் விடுமுறையை கொண்டு என்ன செய்ய முடியும்?

சிங்கள பேரினவாதமும், பார்ப்பன குரூரமும், உலக சமுதாயமும் சேர்ந்த கொன்றொழித்த எங்கள் இனத்தின் 1 1/2 உயிர்கள் வந்த இந்த கேடு கெட்ட விடுமுறையை கொண்டாட போகிறதா?

தமிழ் குரல் said...

நண்பன்,

1947 ஆகஸ்ட் 15 இல் நேரு செங்கோட்டையில் கொடியேற்றி கொண்டாடி கொண்டிருந்த போது... காந்தி கல்கத்தாவில் மதவெறிக்கு எதிராக உண்ணா விரதம் இருந்த செய்தியும் உலகம் பெரிதாக அறியபடாத ஒன்று...

'ஹிந்தி'யாவின் விடுதலை எனும் ஒன்று... சில ஆதிக்கசக்திகளுக்கும் மட்டுமே பயன்பட்டு வருகிறது என்பதே உண்மை...

தமிழ் குரல் said...

சிறுத்தை,

ஆரிய ஏகாதிபத்தியம் அல்லது பார்ப்பன கொடூரம்... தமிழர்களை கொன்று குவிப்பதில் மகிழ்ச்சியில் திளைக்குமே தவிர தீர்வா கொடுக்க போகிறது...

ஈழ தமிழர்களுக்கு எப்படி சிங்கள காட்டுமிராண்டிகள் இன எதிரிகளோ... அது போல் தமிழக தமிழர்களுக்கு பார்ப்பன குரூரமே இன எதிரி...