Wednesday, August 19, 2009

ஏ மழையே பொய்த்து போ...



மழைக்கு ஏன் என் இனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு?

நேரத்தில் பெய்யாமல் போய் ஆறுகளை வற்ற விட்டு, தமிழர்களின் வயிறுகளை வாட விடுவதும்

நேரம் கடந்து பெய்து எங்களின் பயிர்களில் புகுந்து வடியாமல் நின்று, தமிழர்களின் வயிற்றில் அடித்து விடுவதும்

மழையான போது தமிழனால் தாங்கி கொள்ள முடிந்தது

சம உரிமை பேசிய சாத்தான்கள் சீனாவும், ரஷ்யாவும் கொடுத்த கொத்து குண்டு மழை அக்னியாய்

பாகிஸ்தான் ஓட்டிகள் என் மக்கள் மீது அடை மழையாய் கக்கி தமிழர்களை கரி கட்டைகளாய்

எரித்த போது பொய்த்து போன மழை

இப்போது

என் இனத்தின் குறுதியினை ஆறாக ஓட விட்டு நந்தி கடலில் கரைத்த போது

உடம்பில் ஓடும் செந்நீரையெல்லாம் கண்ணீராய் கொட்டி விட்ட என் இனத்தை

கல்லில் கம்பி கட்டி வேலிக்குள் அடைத்த பின்னும் பட்டினியே பரிசாக கிடைத்த போதும்

வேலிக்குள் மாட்டிய என் இனத்தை கொத்து கொத்தாக கொல்வதை கண்டு மகிழும்

மலையாளத்தான் போல் மகிழ்ச்சியுடன் மழையாக வந்து என இனத்தை அழிக்கின்றாயோ?

ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...

என் இனத்தின் 2 லட்சம் உயிர்கள் கொன்று குருதியை குடித்த பின்னும் இரத்த வெறி அடங்காத

என் இன எதிரிகளை என்ன செய்வது?

என் இனத்தின் இரத்தத்தை குடித்த மூட்டை பூச்சிகள் இரத்த தானம் செய்ய போகிறது என

பத்திரம் எழுதி கொடுத்த தமிழனின் பிணம் திண்ணி கழுகுகளை என்ன செய்வது?

தமிழனுக்கு சொரனை வந்தால் மூட்டை பூச்சிகள் கோபபடும் என சொல்லி தமிழனுக்காக பொங்கிய

எரிமலை அணைந்து குட்டி சுவரான போது என்ன செய்வது?

ஏ மழையே என் இனம் விடுதலை பெறும் வரை பொய்த்து போ...

No comments: