Friday, October 16, 2009

தீபாவளி.... தமிழனுக்கு இழிவு...

என்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னிடம் பேசிய போது...

அண்ணே தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?

இல்லப்பா எங்களுக்கு தீபாவளியெல்லாம் பெரிச எதுவும் இல்லை, இங்கதான் இருப்போம், கொண்டாட என்ன இருக்கு?

ஆமாண்ண எங்களுக்கு தீபாவளி கிடையாது, எங்க பாங்காளி ஒருவர் இறந்து விட்டாராம்.

பாருப்பா என்ன வேடிக்கை, ஏற்கெனவே உங்க பங்காளி ஒருவன் செத்த திதிய தீபாவளியா கொண்டாட சொன்னா கொண்டாடுறீங்க, இப்ப சொந்த பங்காளி ஒருவர் இறந்த கொண்டாட மாட்டேங்கிறீங்க.
எப்படிண்ணே?

நீ தமிழனா?
ஆமாண்ணே...

அப்போ நீயுதாம்பா அசுரன், அப்ப நாமம் போட்ட கிருஷ்ணன் கொலை பண்ணதா சொல்லப்படும் நரகாசுரன் தமிழன் எல்லாருக்கும் பங்காளி. உங்களயே அசுரன் அரக்கன் என கதை சொல்லி வந்தேறிகள், உங்க ஆளையே கொலை பண்ணிட்டு கொண்டாட சொல்லி இழிவுபடுத்தினா கொண்டாடுவது நல்லாவ இருக்கு.
நமக்கு ரொம்ப வருசமா கொண்டாடி பழக்கம் ஆயிட்டேண்ணே...

இப்படிதாம்பா நம் மீது திணிக்கப்பட்ட இழிவுகளை, சிந்திக்காமலே மகிழ்ச்சியா கொண்டாடிக்கிட்டு இருக்கிறோம்.

அப்போ என்னதான் சொல்றீங்கண்ணே?

தீபாவளி என்பது தமிழினின் மீது திணிக்கப்பட்ட இழிவு, அந்த இழிவை தமிழன் அறிவிழந்து மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டுள்ளான். இழிவால் நம்மை அவமானபடுத்தும் போது எதிர்க்கிறோமோ, அதைவிட இழிவால் நமக்கு மகிழ்ச்சி என ஆட்டிவிக்கும் போது அந்த இழிவான மகிழ்ச்சியை தூக்கி எறிய வேண்டும்.

நீங்க சொல்றது புரியலையேண்ணே...

உங்களுக்கு புரிய வைக்க, இன்னும் எத்தனை பெரியார் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து போராட வேண்டும் தெரியவில்லையப்பா.
தீபாவளி என்பது தமிழனுக்கு இழிவு, சொரனையுள்ள, மானமுள்ள தமிழன் தீபாவளி கொண்டாட மாட்டான்...

1 comment:

அக்னி பார்வை said...

//என்ன வேடிக்கை, ஏற்கெனவே உங்க பங்காளி ஒருவன் செத்த திதிய தீபாவளியா கொண்டாட சொன்னா கொண்டாடுறீங்க, இப்ப சொந்த பங்காளி ஒருவர் இறந்த கொண்டாட மாட்டேங்கிறீங்க.
//
super