Thursday, August 2, 2007

காவிரி நீர் பிரச்சனை...

காவிரி ஆறு தென்னிந்தியாவின் புனித நதியாக கருதப்படுகிறது. காவிரி மேற்கு தொடர்ச்சி மலையில் 1340 மீட்டர் உயரத்தில் இருந்து தோன்றி 800 கிலோ மீட்டர் பயணித்து காவிரி பூம்பட்டினத்தில் கடலோடு கலக்கிறது. காவிரியின் பாசன பகுதி 81,555 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 3.3 % கேரளாவிலும் 41.2 % கர்நாடகாவிலும் 55.5 % பகுதி தமிழ் நாட்டிலும் உள்ளது. காவிரி ஆறு மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது, 1. மேற்கு தொடர்ச்சி மலை 2. கர்நாடகா, 3. தமிழ் நாடு டெல்டா.

ஒரு ஆண்டிற்கு காவிரி நீரின் தேவை 730 டிஎம்சி ஆகும். காவிரி ஆற்றின் நீர் பகிர்வு கர்நாடகா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களால் 1824 ஆம் ஆண்டு சென்னை மற்றும் மைசூர் மாகானங்களுக்கு இடையே ஏற்ப்பட்ட ஒப்பந்ததின் படி பயன் படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் 150 ஆன்டுகள் 1974 வரை அமலில் இருந்தது.

நீர் பாசன தேவைக்காக 1932 இல் கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் 1934 இல் தமிழ் நாட்டில் மேட்டூர் அணை திட்டங்கள் தொடங்கப்பட்டன.

காவிரி நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆகும் வரை நீர் பங்கீட்டில் பெரிய அளவில் பிரச்சனை எதுவும் எழ வில்லை. ஆனால் கர்நாடகா அரசு காவிரி நீர் ஒப்பந்தததை மீறி பல அணை திட்டங்களை நிறைவேற்றியது.

கபினி (1959)
ஸ்வர்ணாவதி (1965)
கேரங்கி (1964)
கேமாவதி (1968)

1824 நதி நீர் ஒப்பந்தத்தை மீறி மேற்க்கண்ட அணைகளை கர்நாடகா கட்டிய போது, தமிழ் நாட்டிலும், கர்நாடாகாவிலும், மத்திய அரசிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. காமராசர், பக்தவச்சலம் ஆகியோர் தமிழக முதல் அமைச்சர்க்ளாகவும், நிஜலிங்கப்பா கர்நாடகா முதல் அமைச்சராகவும், நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தனர். ஆனால் யாருமே கர்நாடகாவின் அத்து மீறலை கண்டு கொள்ள வில்லை.

1974 ஆம் ஆண்டு காவிரி நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆன போது தமிழக அரசு, ஒப்பந்தத்தை நீட்டிக்க முயற்சி செய்தது. ஆனால் கர்நாடகா காவிரி நதி நீர் ஒப்பத்தம் ஏற்ப்பட விரும்பவில்லை. இதனால் தமிழ் நாடு அரசு காவிரி நீர் பங்கீட்டிற்காக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டது. ஆனால் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்ப்பட தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் கர்நாடகா முதல்வர் தேவராஜ் உரூஸ் இருவரையும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுகோள் விடுத்தார். அப்போதும் கூட கர்நாடகா பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தரவில்லை.

1976 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டு, தமிழ் நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1976 ஆம் ஆண்டு மத்தியில் இந்திரா தலைமையிலான மத்திய அரசு காவிரி நீர் பங்கீட்டிற்க்கான கீழ்கண்டவாறு ஆணையிட்டது.

ஓர் ஆண்டிற்க்கான பகிர்வு.

கர்நாடகா - 239 - 261 டிஎம்சி
கேரளா - 39 - 43 டிஎம்சி
தமிழ் நாடு & புதுச்சேரி - 393 - 414 டிஎம்சி

காவிரியின் மொத்த பயன்பாடு 671 - 880 டிஎம்சி என கணக்கிடப்பட்டது.

ஆனால் கர்நாடகா இந்த மத்திய அரசின் காவிரி பங்கீடு ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை.

1977 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக அரசு அரசு பதிவியேற்றது.

பொது தேர்தலில் இந்திரா தலைமையிலான் காங்கிரஸ் அரசு தோற்கடிக்கப்பட்டு மொராஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசு பதவியேற்றது.

கர்நாடகாவில் தேவராஜ் உருஸ் காங்கிரஸை உடைத்து தனியாக ஆட்சியை தொடர்ந்தார். புதிதாக பதவிக்கு வந்த எம்ஜிஆர் காவிரி நீர் பிரச்சனையை மறக்கவே விரும்பினார், அவரது கொள்கைப்படி முந்தய திமுக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.

இப்ப்டியாக மத்திய மாநில அரசுகள் காவிரி பிரச்சனையை கால்ப்பந்து விளையாடிய போது கர்நாடகா மேலும் ஒரு கோல் அடித்தது, அதாவது 1983 ஆம் ஆண்டு ஏகஞ்சி அணை திட்டத்தை நிறைவேற்றியது.

1982 இல் கர்நாடகாவில் ராமகிருஷ்ண கெட்டே தலைமையிம் ஜனதா அரசு அமைந்தது.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, ராஜிவ் காந்தி காங்கிரஸ் அரசின் பிரதமரானார்.

1987 டிசம்பர் இறுதியில் எம்ஜிஆர் இறந்த போது, வி.என்.ஜானகி அதிமுக அரசின் முதல்வர் ஆனார்.

1988 ஆம் ஆன்டு ஜனவரி 31 ஆம் தேதி வி.என்.ஜானகி தலைமையிலான் அதிமுக(ஜ) அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1988 அக்டோபர் மாதம் தொலைபேசி ஒட்டு கேட்ட பிரச்சனையில் ராமகிருஷ்ண கெக்டே பதவி விலகி எஸ்.ஆர்.பொம்மை கர்நாடகா ஜனதா அரசின் முதல்வர் ஆனார்.

1989 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.

1989 ஏப்ரல் மாதம் தேவகவுடா தலைமையில் கர்நாடகாவில் ஜனதா கட்சி உடைந்து, எஸ்.ஆர்.பொம்மை ஆட்சி கவிழ்க்கப்பட்டது. குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1989 நவம்பரில் நடந்த பொது தேர்தலில் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோற்க்கடிக்கப்பட்டு, விஸ்வநாத் பிரதாப் சிங் தலைமையில் தேசிய முன்னனி அரசு அமைந்தது. கர்நாடகாவில் வீரேந்திர பாட்டில் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.

1990 அக்டோபரில் கர்நாடகாவில் வீரேந்திர பாட்டில் பதவி விலகி எஸ்.பங்காரப்பா காங்கிரஸ் அரசின் முதல்வர் ஆனார்.

1990 நவம்பரில் மத வெறியை தூண்டி பாபர் மசூதியை இடிக்க கிளம்பிய எல்.கே.அத்வானி பிகாரில் கைது செய்யப்பட்டதாலும், மண்டல் குழு அறிக்கை அமல் படுத்தப்பட்டதாலும், மத வெறி கொண்ட சமூக நீதிக்கு எதிரான் பஜக தேசிய முன்னனி அரசை கவிழ்த்தது. வி.பி.சிங் பதவி விலகினார். பின்னர் ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து 54 எம்.பி.க்களை கொண்டு சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற பெயருடன் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் ஆட்சி அமைத்தார்.

1991 ஜனவர் 30 ஆம் தேதி தமிழ் நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, ஜெயலலிதா மற்றும் ராஜிவ் நிர்பந்தத்தால் கலைக்கப்பட்டு குடியரசு ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

1991 மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சி, சந்திரசேகர் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதால், சந்திரசேகர் பதவி விலகினார்.

1991 ஜீன் மாதம் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி பி.வி.நரசிம்மராவ் தலைமையில் மத்திய அரசை அமைத்தது. தமிழ் நாட்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது.

1992 நவம்பரில் கம்யூட்டர் வாங்கிய ஊழலில் பங்காரப்பா பதவி விலகி, கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு வீரப்ப மொய்லி முதல்வரானார்.

1994 நவம்பரில் நடந்த கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அரசு தோற்க்கடிக்கப்பட்டு, எச்.டி.தேவகவுடா தலைமையில் ஜனதா தள் அரசு அமைந்தது.

1996 மே மாதம் நடந்த பொது தேர்தலில் தமிழ் நாட்டில் ஜெயலலிதா அரசு தோற்க்கடிக்கப்பட்டு, கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.

மத்திய அரசுக்கு எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் வாஜபாய் தலைமையில் சிறுபான்மை பஜக அரசு 13 நாட்கள் பதவியில் இருந்தது.

பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா தலைமையில் ஐக்கிய முன்னனி அரசு அமைந்தது.

கர்நாடகாவில் தேவகவுடாவிற்கு பின் ஜெ.எச்.பட்டேல் ஜனதா தள் அரசின் முதல்வரானார்.

1997 ஏப்ரல் தேவகவுடா பதவி விலகியதால் இந்திர குமார் குஜ்ரால் ஐக்கிய முன்னனி அரசின் பிரதமரானார்.

1997 நவம்பரில் காங்கிரஸ் ஐக்கிய முன்னனி அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டதால் குஜ்ரால் தலைமையிலான அரசு பதவி விலகியது.

1998 மார்ச் மாதம் நடந்த பொது தேர்தலில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் என்.டி.எ. அரசு அமைந்தது.

1999 மார்ச் மாதம் ஜெயலலிதா கலகம் செய்து வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை வில்க்கி கொண்டதால், வாஜ்பாய் தலைமையிலான என்.டி.எ. அரசு பதவி விலகியது.

1999 செப்டம்பரில் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையில் மீண்டும் என்.டி.எ. ஆட்சி அமைந்தது. கர்நாடகாவில் ஜனதா தள் அரசு தோற்க்க்டிக்கப்பட்டு, எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

2001 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார்.

2001 செப்டம்பர் மாதம் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தணடனை பெற்றிருந்ததால் உச்ச நீதி மன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தமிழ் நாடு முதல்வரானார்.

2002 மார்ச்சில் நிதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஊழலுக்கான தண்டனைகளில் இருந்து விடுதலை பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழ் நாட்டின் முதல்வரானார்.

2004 மே மாதம் நடந்த பொது தேர்தலில் வாஜ்பாய் அரசு தோற்க்க்டிக்கப்பட்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய ஜன்நானயக கூட்டனி அரசு அமைந்தது.

கர்நாடகாவில் தரம் சிங் த்லைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.

2006 ஜனவரியில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டு எச்.டி.குமாரசாமி தலைமையில் ஜனதா தள்(கே) அரசு அமைந்தது.

2006 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் ஜெயல்லிதாவின் அதிமுக அரசு தோற்க்கடிக்கப்பட்டு, கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்தது.

மேலே குறிப்பிட்ட ஆட்சி மாற்றங்களாலும், கர்நாடகா அரசின் ஏமாற்று வேலைகளாலும், அரசியவாதிகளின் அலட்சியதாலும் காவிரி நீர் பிரச்சம்னைக்கு தீர்வு காணப்படவில்லை. ஆனால் கர்நாடகா மற்றும் தமிழ் நாடு அரசியல்வாதிகள் இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை என் சொல்லிக் கொண்டு டெல்லி, சென்னை, பெங்களூர் என சுற்றுலா சென்று அனுபவித்துதான் மிஞ்சியது. கர்நாடகா தமிழ் நாட்டை ஏமாற்றுவதில் பல வழிகளையும் கையாண்டது.

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முரசொலி மாறன் தலைமையிலான திமுக-கம்னிஸ்டு எம்.பி.க்கள் குழு தமிழகத்தின் சார்பில் பிரதமர் வி.பி.சிங் அவர்களை சந்தித்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க கோரியது. காங்கிரஸ் எம்.பி. வைஜெந்திமாலா பாலி இந்த தமிழக எம்.பி.க்கள் குழுவோடு பிரதமரை சந்தித்ததால் பின்னர் ஜெயலலிதாவால் பழிவாங்கப்பட்டார்.

கர்நாடகா அரசு காவிரி நடுவர் மன்றம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது.

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.பி.சிங் அரசில் நீர்வள் துறை அமைச்சராக இருந்த மனுபாய் கொட்டாடியா அவர்களால் பம்பாய் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி சிட்டதோஷ் முக்ர்ஜி தலைமையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

வி.பி.சிங் அரசின் இந்த முடிவுதான் காவிரி நீர் பிரச்சனையின் தீர்வுக்கு மைல் கல் ஆகும். இப்பிரச்சனையை மிச சரியாக கையாண்ட நேர்மையான பிரதமர் வி.பி.சிங் ஆவார்.

1990 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையிலான நடுவர் மன்ற குழு கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்தது.

1991 ஆம் ஆண்டு ஜீன் 25 ஆம் தேதி நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையிலான நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழ் நாட்டிற்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என ஆணையிட்டது.

இடைக்கால தீர்ப்புக்கான புள்ளி விபரம் கீழ்வருமாறு:

மேட்டூர் அணைக்கு வந்த நீரின் அளவு.

ஆண்டு அளவு - டிஎம்சி
1980- 81 392.01 *
1981- 82 403.20 *
1982- 83 173.09
1983- 84 230.37
1984- 85 284.36
1985- 86 158.28 **
1986- 87 187.36
1987- 88 103.90 **
1988- 89 187.37
1989- 90 175.64

* - மிக அதிகமான் அளவு நீர் வரத்து
** - மிக குறைவான அளவு நீர் வரத்து

மிக அதிகமான மற்றும் குறைவான நீர் வரத்துள்ள ஆண்டுகளை கணக்கில் கொள்ளாமல், மற்ற ஆண்டுகளின் சராசரி நீர் வரத்தான 205 டிஎம்சி நீரை தமிழ் நாட்டிற்கு வழங்க நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

ஆனால் கர்நாடகா நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு பதிலடியாக அம்மாநில முதல்வர் பங்காரப்பா, அவருடைய சம்பந்தி நடிகர் ராஜ்குமார், கன்னட வெறியர் வாட்டல் நாகராஜ் மூவரும் கர்நாடகாவில் மாநிலம் தழுவிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை 6 மாதங்களுக்கு டிசம்பர் 1991 வரை கட்டவிழுத்து விட்டனர். மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான் காங்கிரஸ் அரசும் இந்த தமிழர்களுக்கு எதிரன வன்முறை வெறியாட்டங்களை மவுன சாட்சியாக ஆதரித்தது.

1992 ஆம் ஆண்டு மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் பல வகைகளில், டெல்லியில் அலுவலகம் கூட ஒதுக்காமல் அவமானப்படுத்தப்பட்ட காவிரி நடுவர் மன்ற தலைவர் நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி, நடுவர் மன்றத்தில் இருந்து விலகினார்.

1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு பிரதமர் தலைமையில் காவிரி நீர் ஆணையம் அமைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு முயற்சி செய்தது. சில ஆண்டுகள் பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் அதிமுக தலைவி ஜெயலலிதா அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரதமர் தலைமையிலான ஆணையத்தை ஏற்றுக் கொள்ள முடியாது அறிவித்தார்.

2001 இல் இவர் முதல்வர் ஆன பிறகு பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையத்தில் செயல்பாடு முடக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி 5 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் தமிழ் நாட்டிற்கு 419 டிஎம்சி, கர்நாடகவிற்கு 270 டிஎம்சி, புதுசேரிக்கு 6 டிஎம்சி நீரை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என ஆணையிட்டுள்ளது... மேலும் தமிழக எல்லையில் கண்கெடுக்க பட்டு கர்நாடகா 192 டிஎம்சி நீரை தமிழ் நாட்டிற்கு திறந்து விட வேண்டும் எனவும் ஆணையில் குறிபிட்டுள்ளது...

தமிழ் நாடு அரசு இந்த தீர்ப்பை ஏற்று கொள்வதாகவும் சில குறைகளை நீக்க உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது...

ஆனால் கர்நாடகா இந்த நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று கொள்ள முடியாது எனவும் தமிழகதிற்கு நீரை திறந்து விட முடியாது எனவும் அறிவித்துள்ளது...

இந்த நியாயமான தீர்ப்புக்கு... காராணமான முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் நீர்வள துறை அமைச்சர் மனுபாய் கொட்டாடியா... இருவரும் நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டியவர்கள்.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் எத்தனை ஆண்டுகள் ஊசலாடுமோ தெரிய வில்லை...

தமிழக காவிரி டெல்டாவின் நிலை:

20 ஆண்டுகளுக்கு முன் தமிழக டெல்டா விவசாயிகள் நெல் உற்பத்தியில் நாட்டிலேயே சிறந்து விளங்கினர். இப்போது டெல்டாவில் விவசாயதிற்கு போதிய நீர் இல்லை. விவசாய தொழிலாளர்கள் ஒரிரு வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில் உள்ளனர், வருவாய் தேடி நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.காவிரி மற்றும் துனை ஆறுகளில் சரியான நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீரும் குறைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையை வைத்துதான் விவசாயம் செய்ய வேன்டியுள்ளது.

தமிழ் நாட்டின் டெல்டா பகுதியில் விவசாய நில்பரப்பு குறைந்துள்ளது.கர்நாடகாவின் உண்மை நிலை:கர்நாடகாவில் உள்ள அணைகளில் ஆண்டு முழுவதும் 365 நாட்களும், அணைகளின் முழு கொள்ளவிற்கு தேவைக்கதிகமாக, அவசியமில்லாமல், பயன்படாமல் காவிரி நீர் தேக்கி வைக்கப்படுகிறது.தேக்கி வைக்கப்படும் நீரின் அளவிற்கு கர்நாடகாவில் நில்மும் இல்லை.காவிரியிலும் கர்நாடகாவில் காவிரி அணைகளிலும் வெள்ள அபாயம் வரும் போதுதான் உபரியான வெள்ள நீர் தமிழ் நாட்டிற்கு திறந்து விடப்படுகிறது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்ன?அரசியலும், அரசியல்வாதிகளும்தான்...

சுயநல அரசியவாதிகள் - தேவராஜ் உரூஸ், தேவகவுடா

ஏமாற்று பேர்வழிகள் & குறுக்கு புத்தி குணம் கொண்ட அரசியவாதிகள் - பங்காரப்பா, ஜெயலலிதா, நரசிம்மராவ்

நிர்வாக திறமையற்ற மக்களைப் பற்றிய கவலையற்ற அரசியவாதி - எம்.ஜி.ஆர்.

இது போன்ற சுகபோகங்களிலும், லஞ்சத்திலும் , பதவி வெறி பிடித்த நாற்காலி நாயகர்களிடம் தீர்வை எதிர்பார்க்க முடியுமா?தீர்வுதான் என்ன?

1. நாட்டில் உள்ள அனைத்து நதிகளும் தேசியமயகாக்கப்பட வேண்டும். குறைந்தது மாநிலங்களுகிடையே ஓடும் நதிகளாவது தேசிய மயமாக்கப்பட வேண்டும்.

2. மத்திய அரசு தேசிய நதி நீர் ஆணையம் அமைக்க வேண்டும். உச்ச நீதி மன்றம், தேர்தல் ஆணையம் போல் சுதந்திரமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

3. அணைகளில் நீர் கட்டுப்பாடு பணிகள், தேக்குவது மற்றும் திற்ந்து விடுவது மத்திய மாநில் அரசுகள் சார்பற்ற நதி நீர் ஆணையத்திடம் வழங்கப்பட வேண்டும்.

4. மத்திய மாநில் அரசுகள் இந்த ஆணைய பணிகளில் தலையிடக் கூடாது.

5. அணு மின் நிலையங்களுக்கு இணையான பாதுகாப்பு, அணைகளுக்கு வழங்க வேண்டும்.

இவற்றை செய்தால்தான்... குறுக்கு புத்தியுடைய கொடூரமான ஜெயலலிதா, பங்காரப்பா போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து நதிகளை காப்பற்ற முடியும்.

4 comments:

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

நல்லதொரு தொகுப்பு,

இன்னும் இந்த பிரச்சினையில் இருக்கிற நுண்ணரசியலையும் விளக்கி எழுதுங்களேன்....

Unknown said...

முழுமையான நல்ல தகவல்கள் நிறைய உள்ளன.

Selva said...

Nandri

Selva said...

Nandri ,sirantha thagaval