Saturday, November 3, 2007

கலைஞர் இரங்கல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

எப்போதும் சிரித்திடும் முகம் - எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோஇமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவியஉத்தம வாலிபன் -
உயிர் அணையான்உடன் பிறப்பணையான்தமிழர்வாழும் நிலமெலாம்
அவர்தம் மனையெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா-
எங்கு சென்றாய்?

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஜெ தொலைகாட்சியில் தடை செய்யப் பட்ட விடுதலை புலிகள் இயக்கதிற்கு ஆதரவாக கவிதை எழுதிய கலைஞருக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது... இந்த இரங்கல் கலைஞர் பதவி ஏற்ற போது ஏற்று கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது எனவும் இந்திய அரசியல் சட்டதிற்கு எதிரானது எனவும்... காங்கிரஸ் அதிருப்தி எனவும் ஜெவின் தமிழர்களுக்கு எதிரான... பார்ப்பன... சிங்கள காட்டுமிராண்டிதனத்தின் அடிவருடிதன கோர முகத்தை காண முடிகிறது.

1 comment:

Harrispan said...

Kalainger Tamilar, Jaya does not have any right to comment about his condolense.
Be ware jaya.