Friday, October 12, 2007

டி.ராஜேந்தர்

எனக்கு பிடித்த தன்னம்பிக்கை உள்ள மனிதர்களில் இவரும் ஒருவர்.
இந்த மனிதரை பற்றி எவ்வளவு கிண்டலடிக்க முடியுமோ அவ்வளவு கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை இவரை கிண்டலடிப்பவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே.

அஷ்டாவதானியாக பரிணாமித்துக் கொண்டிருக்கும் இவரின் திறமையை மதிப்பிடும் அளவிற்கு இவரைப் பற்றி தரக்குறைவாக எழுதுபவர்களுக்கு திறமை இருக்குமா? சந்தேகம் தான்.

டி.ஆர். உண்மையில் திறமைசாலி என்பதில் சந்தேகம் இல்லை...

அவரது படங்களுக்கு கதை-திரைகதை-வசனம்-பாடல்கள்-ஒளிபதிவு-இசை-இயக்கம் என எல்லா வேலைகளும் அவரே...

மேலும் மற்றவர்களை போல்... வேலையை வேறு ஒருவரை செய்ய விட்டு பெயரை போட்டு கொண்டவர் அல்ல...

அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளை கடந்து வியதகு வெற்றிகளை பெற்றவர்...

பூம்புகாரில் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்...

மாயவரம் கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் தமிழ் முதுகலை பட்டம் படித்த போது... கணிதம் முதுகலை படித்த மாணவியை காதலித்தாராம்... அந்த பெண்ணும் ஏற்று கொண்டு... பெண் வீட்டில் பேசிய போது... இவன் கரடி போல் இருக்கிறான் இவனுக்கு பெண்ணை கொடுப்பது என அவமான படுத்தி... அவரது கல்லூரி காதல் தோல்வியாம்... இதையே காரணமாக காட்டி அவர் குடிகாரனாகவோ... வேறு கேவலமான வேலையை செய்திருக்கலாம்...

பின்னர் எந்த பின்னனியும் இல்லாமல்... கிட்டதட்ட இவரது கதையை மாற்றி... இவரது கதை-திரைகதை-வசனம்-பாடல்கள்-இசை மற்றும் ராபர்ட்-ராஜசேகர் ஒளிபதிவு-இயக்கத்தில் 1980 இல் வந்து பெரும் வெற்றி பெற்ற படம் ஒரு தலை ராகம்...

அந்த படம் வந்த பின்னரும் வாழ்க்கை போராட்டம்தான்... படத்தின் வெற்றிக்கு காராணம் ராபர்ட்-ராஜசேகர் என அறிய பட்டனர்...

ஆனால் டி.ஆர். சென்னை திருவெல்லிகேனி விடுதியில் தங்கி உணவுக்கு போராடிய காலம் அது...

அப்போது இ.எம்.இப்ராகிம் எனும் தயாரிப்பாளர் தஞ்சை சினி ஆர்ட்ஸ் எனும் பெரில் டி.ஆருக்கு இரயில் பயணங்க்ளில் படதிற்கு வாய்ப்பளித்தார்... இந்த படத்திற்கான மெட்டை தயாரிப்பாளுக்கு... திருவெல்லிகேனி உணவு விடுதியில் உள்ள பெஞ்சில் போட்டு காட்டினாராம் டி.ஆர். இந்த படம் 1981 இல் பெரும் வெற்றி பெற்ற படம்... கோவையில் 300 நாட்களுக்கு மேல் ஓடிய படம்...

1983 இல் இவரது உயிருள்ள வரை உஷா எனும் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படம்... அப்போது இவரை போல காதலில் தோல்வி அடைந்த நடிகை உஷாவை திருமணம் செய்து கொண்ட போது வைத்த பெயராம் இந்த படத்தின் பெயர்...

பின்னர் டி.ஆர். சமூக அக்கறை படம் எடுப்பதாக சொல்லி 1984 இல் வந்த படம் தங்கைகோர் கீதம்... இது வரதட்சனைக்கு எதிராக எடுத்த படம்... இதுவும் பெரிய வெற்றி பெற்ற படம்...

அடுத்து அவர் குடி பழக்கதிற்கு எதிராக எடுத்த படம் அவர் வாழ்க்கையில் மற்றொரு திருப்பு முனை... அந்த படத்தின் தயாரிப்பளார் அதிமுக காரர்... ஏதோ பண பிரச்சனை... எம்.ஜி.ஆர். வரை செல்ல... எம்.ஜி.ஆர். இந்த டி.ஆரை அழைத்து... தயாரிப்பாளருக்கு ஆதரவாக பேச... டி.ஆர். எம்.ஜி.ஆரை எதிர்த்து பேசினாராம்... தன்னை யார் எதிர்த்து பேசினாலும் ஏற்று கொள்ள முடியாத எம்.ஜி.ஆர். இந்த டி.ஆரை அடித்து அனுப்பினாராம்... அப்போது அவர் அடி வாங்கி கொண்டு ஓடிய இடம் கலைஞரின் வீடு...

அதன் பின் திமுகவில் சேர்ந்த டி.ஆர். எம்.ஜி.ஆரை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்தவர்... பாளைய்கோட்டை சிறையினிலே... பாம்புகள் பல்லிகள் நடுவினிலே... அஞ்சாமல் நின்றவர் யாரு... அவர்தான் கலைஞர்... என திமுகவிற்கு பிரச்சார பாடல்கள் எழுதியவர்...

1985 இல் வந்த இவரது உறவை காத்த கிளி படம் பெரும் வெற்றி அடையா வில்லை... ஆனால் தோல்வி படம் இல்லை...

1986 இல் வந்த இவரது மைதிலி என்னை காதலி படம் பெறும் வெற்றி படம்...

1987 இல் வந்த இவரது ஒரு தாயின் சபதம்... பெரிய வெற்றி படம்...

1988 இல் வந்த இவரது என் தங்கை கல்யாணி படமும் பெரிய வெற்றி படம்...

பின்னர்தான் இவரது சரிவின் தொடக்கம்...

1989 தேர்தலில் திமுக சார்பில் பூம்புகாரில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது மறுக்க பட்டது... மேலும் விஜயகாந்திற்கு கட்சியில் இல்லாத போதும் கலைஞர் முக்கியதுவம் கொடுப்பதாகவும்... காரைகுடியில் போட்டியிட இராம நாரயணனுக்கு வாய்ப்பளித்ததும்... இவரது கோபத்தை கூட்ட... கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்தார்...

பின்னர் இவரது குடிகார தம்பி வாசுவிற்கு கலைஞர் மகளை திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்க போன போது... ஸ்டாலின் இவரை தாக்கியதாகவும் சொல்வார்கள்... மேலும் தஞ்சை பகுதியில் இருந்து வரவழைக்க பட்ட திமுக இளைஞர்கள் 1989 இல் இவரது வீட்டை தாக்கினார்களாம்...

1989 இல் தனி கட்சி தொடங்கிய இவர்... 1989 மத்தியில் நடந்த திண்டுக்கல் மக்களவை இடைதேர்தலில் இவரது மனைவி உஷாவை நிறுத்தி சுமார் 75 ஆயிரம் வாக்குகள் வாங்க வைத்தாராம்...

1989 இல் இவரது படம் தோல்வி... எனக்கு பெயர் மறந்து விட்டது... இப்போது பாலசந்தர் தொடர்களில் நடிக்கும் திருவரங்கம் ரேனுகா என்பவரின் முதல் படம் அது...

1991 இல் இவரும்... நடிகை ராதவும் வக்கிலாக நடித்து வந்த படமும் பெரும் தோல்வி...

1991 தேர்தலில் ஜெவை எதிர்த்து பர்கூரில் போட்டியிட்டு தோல்வியுற்றார்...

1992 இல் இவரது மகன் சிம்புவை வைத்து எடுத்த எங்க வீட்டு வேலன் பெரிய வெற்றியை பெற்றது...

1995 இல் வந்த இவரது படம் வந்து சுவடு தெரியாமல் பெட்டிக்குள் போனது... பெயர் மறந்து விட்டது...

1995 மே மாதம் மீண்டும் திமுகவில் இணைந்தார்...
1996 தேர்தலில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்... பின்னர் அமைச்சர் பதவி கொடுக்க வில்லை என சொல்லி... அப்போது சில வாரங்கள் ராஜ் டிவி அரை மணி நேரம் அழுது விட்டு சென்றார்...

1999 இல் மும்தாஜை அறிமுக படுத்தி கொஞ்சம் ஆபாசமாக எடுத்த படம் சுமராக ஓடியது...

2000 த்தில் முரளியை வைத்து சொன்னால்தான் காதலா என எடுத்த படமும் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனது...

2001 தேர்தலில் பூங்கா நகரில் தோல்வி அடைந்தார்... மீண்டும் திமுகவில் இருந்து ஒதுங்கினார்...

2002 இல் அவர் மகன் சிம்புவை வைத்து ஒரு படம் எடுத்து மக்களை படுத்தினார்...

2005 ஜெவுடன் சேர்ந்து திமுகவை சாடி கொண்டு இருந்தார்...

2006 தேர்தலில் கூட்டனிக்காக ஜெவுடன் பேசிய முதல் தலைவரே இவர்தான்... பின்னர் ஜெ இவருக்கு நாமம் போட்ட பின் திமுக கூட்டனிக்கு ஆதரவாக பிரச்சாரம் என நகைசுவை செய்தார்...

அப்புறம்தான் வீராசாமி எடுத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தினார்...

இவரது திறமைகள்...

தன்னம்பிக்கை...

நேர்மையானவர்....

கடும் உழைப்பாளி...

ஒழுக்கமானவர்...

குறைகள்...

இவரது 80 கள் பாணியில் நல்ல படங்களாக எடுத்திருந்தால் கூட நன்றாக இருக்கும்... காலதிற்கு ஏற்றார் போல் எடுக்கிறேன் என சொல்லி புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதாகி விட்டது...

எதற்கெடுத்தாலும் அழுவார்... தங்கையாக அழுவதே இவரது உப தொழில்...

பொறுமை இல்லாதவர்.

சண்டை போட தயங்க மாட்டார்... உணர்ச்சி வச பட கூடியவர்...

மற்ற படி இவர் எஸ்.ஜே.சூர்யா... சங்கர்... போல சைகோதனம்... வக்ரம்... வன்முறை... ஆபாசம் இவற்றை கொண்டு பிழைப்பு நடத்துபவர் இல்லை...

8 comments:

ILA (a) இளா said...

உண்மைதாங்க.
இவரிடம் பலநாள் பணியாற்றிய அனுபவத்திலும், சிம்புவை நண்பர்கள் வட்டத்திலும் அறிந்தவைகளை வைத்து சொல்கிறேன்.

1. சினிமா பெண்களை "வேறு" மாதிரியாக பார்க்கும் இடம்(95%). இவர் அதில் ஒரு தங்கம் என்றே சொல்லலாம். பெண்களை மதிக்கும் குணத்தில் இவரைப் போல பார்த்தது இல்லை. இன்னும் ஒரு நடிகை உடனும் கிசுகிசுக்கப்படாத நடிகர்?(சிவகுமார் இருக்கிறார்)

2. மதிக்கும் தன்மை. எப்படியாப்பட்டவராக இருந்தாலும் மதிக்கும் தன்மை. என்னை மதித்து நான் சொன்ன பல விஷயங்களை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.

3. விட்டுக் கொடுக்கும் தன்மை, அடிச்சுக்கவே முடியாது, அதுதான் அவரின் குடும்பத்தின் பலமே.

4. உஷா(அக்காவைப்)சொல்லாமல் விட்டால் எப்படி? உண்மையா மனைவி எப்படி இருக்கனும்னு நினைக்கிறீங்களோ, அப்படி இருப்பாங்க. டி.ஆரின் கடிவாளம் அக்கா கையில்தான் இருக்குதுங்கிறது நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

மயிலாடுதுறை சிவா said...

நீங்கள் சொன்னவற்றில் சிலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. நல்ல உழைப்பாளி, ஒழுக்கமானவர் மற்றும் தன்னம்பிக்கையாளர் என்ற கருத்தில் மாற்றம் இல்லை.

எங்கவூர்காரர் என்பதில் அவர் மேல் ஓர் பாசமும் கூட...

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Raveendran Chinnasamy said...

Good Post with good analysis !! It resembles my thought on him..


He is a great guy until he introduced his son so he fall from great position he carved . I am a great fan upto 1986 for his films .

லக்கிலுக் said...

கொஞ்சம் தற்பெருமைவாதி என்ற விமர்சனம் மட்டும் அவர் மீது எனக்குண்டு. மற்றபடி அவர் நீங்கள் சொன்னது போல சொக்கத்தங்கம் தான்.

Nakkiran said...

ஒப்புக் கொள்கிறேன்... இன்னும் கொஞ்சம் ஒழுங்கா இருந்தா இன்னும் ரொம்ப பெரியாளா ஆயிருப்பார்ன்னு ஒரு ஆதங்கம்....

SurveySan said...

vow. டி.ஆர் பத்தியும் விலாவாரியா எழுதியிருக்கீங்க. சூப்பர்.

வாய்ச்சவடா ஜாஸ்தி. மத்தபடீ இவர் திறமைசாலீ.

கோவி.கண்ணன் said...

//1989 இல் இவரது படம் தோல்வி... எனக்கு பெயர் மறந்து விட்டது... இப்போது பாலசந்தர் தொடர்களில் நடிக்கும் திருவரங்கம் ரேனுகா என்பவரின் முதல் படம் அது...//

சம்சாரா சங்கீதம் ?

அந்தப்படமும் ஓரளவு ஓடியது !

Unknown said...

எல்லாம் சரி ஆனால் அவர் பிறப்பிடம் மயிலாடுதுறை பூம்புகார் இல்லை