
இன்று 12 மணி முதல்... முல்லை தீவில் இருக்கும் 2 1/2 லட்சம் மக்களை கொல்ல போவதாக... ராஜபக்சேக்கள் அறிவித்து... கொலை வெறி தாண்டவம் ஆடி கொண்டுள்ளனர்... அந்த சிங்கள பேரின வாத தாண்டவத்திற்கு... இத்தாலிய/இந்தியாவின் சோனியா, எம்.கே.நாராயணன், ஏ.கே.அந்தோனி, பிரனாப் முகர்ஜி, சிவசங்கர மேனன் போன்ற ஆதிக்கவாதிகள் பக்க வாத்தியம் வாசித்து கொண்டுள்ளனர்...
தமிழினம் மொத்தமாக 2 1/2 லட்சம் மக்களை இழக்க போகிறது... தமிழக தமிழர்கள்... 2 1/2 லட்சம் தமிழ் பிணங்களை பார்த்து... ‘இந்தி’யராக ஆனந்தபட போகிறார்களா?
தமிழினம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது... தமிழர்கள்... தேர்தல் திருவிழாவிலும்... ஐபிஎல் கிரிகெட் திருவிழாவிலும்... திக்கு முக்காடி கொண்டுள்ளனர்...
வைகோவிற்கும்... தாவண்ணா பாண்டிக்கும்... மருத்துவர் அண்ணனுக்கும், பாசிச ஜெவுக்கும்... பிணங்கள் விழுவது மகிழ்ச்சியே... எவ்வளவு பிணங்கள் விழுகிறதோ... அவ்வளவு பிணங்களையும் காட்டி ஓட்டு வாங்கி விடலாம் என மகிழ்ச்சியில் இருப்பார்கள்...
தமிழின தலைவர் என அழைக்கப்பட்ட கருணாநிதி... தமிழின அழிவை கண்ணை மூடி கொண்டு.... இந்தாலிய தங்கை சோனியாவோடு ரசித்து கொண்டுள்ளாரோ?
ஈழத்தில் தெரித்து ஒடுவது தமிழ் ரத்தம்... பார்ர்பன ரத்தமாக இருந்தால்... இந்திய ஆதிக்கத்திற்கு அது ரத்தம் என்று தெரிந்திருக்கும்... கருணாநிதிக்கு ஓடுவது தமிழ் ரத்தம்தானா?
தமிழினம் அழிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடும் போது... கருணாநிதிக்கும்... தமிழர்களுக்கான இயக்கம் என சொல்லி கொண்ட இயத்திற்கு அதிகாரம் வேண்டுமா? அதிகாரம் என்பது சம்பாதிக்க மட்டும்தான் முடியுமா? இன அழிப்பை தடுக்க முடியாதோ? அப்படிப்பட்ட அதிகாரத்தை தூக்கி எறிய கருணாநிதிக்கு தடையாக இருப்பது... சுய நலமோ?
இரண்டு தலைமுறை தமிழர்கள்... இவரை தமிழின தலைவர் என பின்னால் சென்று... 5 முறை ஆட்சி அதிகாரத்தை கொடுத்தது... இப்போது... தமிழினத்தை பேரினவாதமும்... இந்திய வல்லாதிக்கமும்... அழிக்கும் போது அமைதியாக வேடிக்க பார்க்கவா?
இந்தியாவே... ஒரு பொறுக்கி ராஜிவின்... சதைக்கு... எத்தனை லட்சம் தமிழனின் உயிர் வேண்டும்?