Wednesday, June 2, 2010

எல்லாம் சரி... பூக்காரி என்றால் இழிவோ?

சமீபத்தில் நான் வினவு தளத்தில் ஒரு பதிவை படிக்கும் போது... பூக்காரியை பற்றி கதையை படிக்க நேர்ந்தது... ஏன் பூக்காரியை பற்றி இழிவாக விபசாரியாக எழுத வேண்டும் என கேட்டால்... புனையப்பட்ட கதை என்கிறார்கள்...

பூக்காரிகளை இழிவாக விபசாரி என எழுதிய கை... ஆயிரம் பெண்களுடன் விபசாரம் செய்த கேடு கெட்ட ஆண் விபசாரிகள் சின்ன, பெரிய சங்கராச்சாரிகளை பற்றிய உண்மை கதை எழுதுமா? கேவலமான ஆதிக்க சாதி ஆண்கள் விபசாரம் செய்யும் போது கண்களை மூடி கொண்டு இருப்பவர்கள் எல்லாம் விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை விபசாரி என எழுதும் போது குரூரமாக ரசிப்பதேனோ?

நான் காட்டும் உதாரணத்தில் கூட வேறு எந்த சமூகத்தின் பெண்களை பற்றி இழிவாக சொல்லவே கூடாது என்பதால்... உலகறிந்த கேடு கெட்ட பொறுக்கிகளான சங்கராச்சாரிகளை உதாரணத்திற்கு காட்டுகிறேன்... பெண்களை இழிவாக எழுதினால் அந்த குரூர பதிவுக்கு எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்...

வாருங்கள் சென்னை... கோயம்பேடு வணிக வளாகத்திற்கு... காலையிலும்... மாலை 11-12 வாக்கில் மல்லிகை... முல்லை பூக்களை கூடை வாங்கி... மாநகர பேருந்திலேயே உட்கார்ந்து... பூக்களை கோர்த்து செல்லும் உழைக்கும் பூக்காரி விபசாரியோ?

அந்த குரூர பதிவர்... விபசாரி என எழுதிய பூக்காரி கட்டிய பூக்களைதான் கடவுளுக்கு போடுவார்கள்...

பூக்களை கட்டுபவள் விபசாரி... என்றால் அந்த பூக்களை போட்டு கொள்ளும் கடவுள்?

சில காலம் முன்பு... வலைபதிவுகளில் வன்முறையோடு எழுதியதாக போலி என்பவரை வலைபதிவாளர்கள் எப்படி எல்லாம் எதிர்தார்கள் என்பதை மறந்து விட்டு... ஆதிக்க சாதிகாரர் என்பதற்காகவும்... பண வசதி படைத்தவர் என்பதற்காகவும்... நண்பர் என்பதற்காகவும்... காப்பாற்ற முனைவது ஏனோ?

சமூகத்தில் விளிம்பு நிலை பூக்காரியை விபசாரி என எழுதியது கண்டிக்க மட்டுமல்ல... தண்டிக்க படவும் வேண்டிய ஒன்று...

இதனை பற்றிய ஒரு பதிவில் உண்மைத் தமிழன்... இடதுசாரி சிந்தனையாளர்கள் வினவு இதனை பற்றி எழுத கூடாது... நாமே ஆல மரத்தடி பஞ்சாயத்து வைத்து ஆதிக்கவாதியை ஆதரிப்போம் என்கிறார்...

நான் இடதுசாரியோ... வலதுசாரியோ... இல்லை... விளிம்பு நிலை... உழைக்கும் பூக்காரியை விபசாரி என எழுதியதை... ஒரு நாகரீக சமூகத்தில் வாழும் மனிதனாக எதிர்க்கிறேன்...

போலிக்கு ஒரு நியாயம்... ஆதிக்க வர்க்க பதிவருக்கு ஒரு நியாயம்... என வலைபதிவு ஆலமரத்தடி பஞ்சாயத்து கருதுமானால்... வலைபதிவாளர்கள் இன்னும் மனுதர்மத்தை மதிக்கும்... காட்டுமிராண்டி சமூகத்தை விட்டு வெளியே வரவில்லை என சொல்லி விடுங்கள்...

ஒரு விளிம்பு நிலை உழைக்கும் பூக்காரியை புனைவில் விபசாரி வன்கொடுமை செய்த ஒரு குரூர புத்திக்கு என்ன துணிச்சல்... பூக்காரி வீட்டு பிள்ளைகள் யாரும் படித்து... வலைபதிவை படிக்க மாட்டார்கள் என்பதுதானே?

குரூர மனத்துடன்... பூக்காரியை புனைந்த அந்த பதிவர்... நேர்மையோடு பதிவை நீக்காமல் வைத்திருக்கட்டும்... பூக்காரி வீட்டு பிள்ளைகள் எல்லாம் வந்து படிக்கும் வரை... அவர்கள் வந்து ஏன் எங்கள் அம்மாவை... அக்காவை... விபசாரி என எழுதி இருக்கிறாய் என கேட்கும் வரை?

அந்த விளிம்பு நிலை... உழைக்கும் பூக்காரி வீட்டு பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? வலைபதிவு ஆலமரத்தடி பஞ்சாயத்து தலைவர்கள்...

எனக்கு பூக்காரியை விபசாரி என எழுதிய பதிவர் வேண்டாதவர் இல்லை... யாரும் வேண்டியவர்களும் இல்லை...

உழைக்கும் வர்க்கத்தின் நேர்மையான... என்னை அண்ணா என அழைக்கும் பூ விற்கும் சகோதரியை பார்த்தவன்... அந்த பூ விற்கும் சகோதரியின் உழைக்கும் சமூகத்தை இழிவு படுத்திய குரூரத்தை எதிர்க்க வேண்டியவன்...

11 comments:

காமராஜ் said...

இப்படிக் கோபப்பட்டால் அது சாதியாக்குவதாம்.இங்கு ஒரே கூப்பாடு.

அந்த வக்கிரப்பதிவில்
ஒரு சிலர் தவிர அநேகர் கும்மிவேறு அடித்திருக்கிறார்கள்.

ஏழர said...

அருமை

Dr.Rudhran said...

i agree

ரவி said...

நன்றி தமிழ் குரல்.

ரமி said...

Don't you know that is fiction.

with love,
Ramesh.P

smart said...

நல்ல பதிவுதான். வாழ்த்துக்கள் அப்படியே இவர்களையும் கேள்வி கேளுங்கக் தலைவா!

Anonymous said...

"Don't you know that is fiction.with love,
Ramesh.P"
Even though it's fiction , there is limit for everything. It shows how vulgar he is? Please think do we need this kind of (his writings) fiction stories?
Thnaks
Sangamithra
Thank you Mr/Ms Thamizh for anonymous id
(I don't have blogspot or account. I can't post my comment)

தமிழ் குரல் said...

//*
நல்ல பதிவுதான். வாழ்த்துக்கள் அப்படியே இவர்களையும் கேள்வி கேளுங்கக் தலைவா!
*//

ஸ்மார்ட்,

எப்படியோ ஒரு குரூரமான பதிவை எழுதியவரை காப்பாற்ற அவருக்கு எதிராக எழுதிய அத்தனை பேரை சாடி விட்டீர்கள்...

உங்கள் விருப்பம்தான் என்ன?

ஆதிக்க வெறியுடன்... குரூரமாக எழுதிய ஒருவரை யாரும் எதிர்க்க கூடாது என்பதா?

நான் எதிர்ப்பதாலோ... மற்றவர்கள் எழுதவதாலோ... பதிவு எழுதிய குரூர பதிவர் திருந்த போவது இல்லை... அவரை பொருத்த வரை... உங்களை போன்றவர்கள் ஆதரிக்கும் வரை...

அந்த வரிகள்... அவ பிறப்பு அப்படி... நம்ம வளர்ப்பு இப்படி...

என்றால் பிறப்பால் பூக்காரி இழிவானவளா?

சமூக அக்கறை கொண்ட யாருக்கும் இந்த வரிகள் உருத்தும்...

தமிழ் குரல் said...

ஆட்டையாம்ப்படி அம்பி,

அந்த ஆதிக்க பதிவர், சுகுனா, பைத்தியகாரன், வினவு பற்றிய உங்கள் ஆராச்சிகள் இங்கே வெளியிட்டால், பதிவு திசை மாறி விடும்...

எந்த பதிவரும் எனக்கு வேண்டிவர்களோ... வேண்டாதவர்களோ இல்லை...

உங்கள் ஆராச்சியை உங்கள் தளத்திலேயே வெளியிட்டால் நன்றாக இருக்கும்...

மன்னிக்கவும்...

smart said...

//உங்கள் விருப்பம்தான் என்ன?

ஆதிக்க வெறியுடன்... குரூரமாக எழுதிய ஒருவரை யாரும் எதிர்க்க கூடாது என்பதா?//
அதான் உங்களை பாராட்டிவிட்டேன். எனது எண்ணம் அந்த குருரத்தை கண்டு பொங்குபவர்களின் உதவிதான். எங்க நயன்தாரா அக்காவை கேவலமாக பேசிய ரவியையும் சேர்த்து திட்டுங்கள், என்னை கேவலமாக பேசும் வால் பையனையும் சேர்த்து திட்டுங்கள் என்கிறேன்.

உண்மை இதுதான் உங்களுக்கு வேண்டப் பட்டவர் என்கிற ஒரே காரணத்தால் இவ்வளவு பெரிது படுத்துவது சுய நலம்.
அப்புறம் ஒருவிஷயம் அந்த கதையில் எந்த பெயரும் இல்லை தனிப்பட்டு யாரையும் குறிப்பிடவில்லை. மேலும் //அவ பிறப்பு அப்படி... நம்ம வளர்ப்பு இப்படி// என்று கேட்கும் வாக்கியத்தில் எந்த குறையுள்ளது? நல்ல பிறப்பில் பிறந்தவர்கள் ஏன் கலங்க வேண்டும்? நீங்கலாக அது சாதி இது அதுன்னு நினைச்சு ஏன் வன்மத்தை புகுத்தவேண்டும்? எந்த சாதியும் குறைந்ததில்லை என்று கருதவில்லையா?

தமிழ் குரல் said...

ஸ்மார்ட்,

இங்க வந்த ரவியையும் என்னையும்... வால்பையனையும் என்னையும் கோர்த்து விட பார்ப்பதை என்ன சொல்வது?

அயோக்கியதனம்...
//*

//அவ பிறப்பு அப்படி... நம்ம வளர்ப்பு இப்படி// என்று கேட்கும் வாக்கியத்தில் எந்த குறையுள்ளது? நல்ல பிறப்பில் பிறந்தவர்கள் ஏன் கலங்க வேண்டும்? நீங்கலாக அது சாதி இது அதுன்னு நினைச்சு ஏன் வன்மத்தை புகுத்தவேண்டும்? எந்த சாதியும் குறைந்ததில்லை என்று கருதவில்லையா?
*//

நீங்கள் எல்லாம் எத்தனை காலம் ஆனாலும் திருந்த போவதில்லை...
ஆதிக்க வெறி பிடித்தலையும் மனநோயாளிகள்...
எந்த பெண் பிறப்பால் இழிவானவள்? அப்போது ஒருவர் குரூரமாக எழுதியதை சரியெனும் இன்னொரு குரூர முகம் வெளியே வந்துள்ளது...