Thursday, October 22, 2009

22ஆம் ஆண்டு நினைவஞ்சலி... இந்தியா ஒழிக... தமிழ் வாழக...

1987 அக்டோபர் 21... தீபாவளி... 'ஹிந்தி'யாவின் நவீன் நீரோ மன்னன்... பெண் பொறுக்கி ராஜிவ்... தமிழ் ஈழத்திற்கு அனுப்பிய கற்பழிப்பு படை... யாழ் மருத்துவமனையில் கோர கொலை வெறி தாண்டவம் ஆடி 68 தமிழர்களை கொன்று குவித்த நினைவு நாள்...

தீபாவளி தமிழர்களுக்கு கருப்பு தினம்...

அன்று தீபாவளி... தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள். இந்தியா தன் இரத்த வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.

அந்த நாட்களில் யாழ்பாணத்தில் மருத்துவமனைகள் இயங்காத காலம். போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம். அப்போது யாழ் அப்பாவி மக்களுக்கு யாழ் மருத்துவமனன மருத்துவர்களும் ஊழியகளும் மருத்துவ சேவை செய்து கொண்டு இருந்தனர், இந்த சேவை அப்பாவி மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவாவது பூத்தி செய்தது.

1987 அக்டோபர் 21 அன்று கோழைதனமாக ராஜிவின் 'ஹிந்தி'ய படைகள் யாழ் மருத்துவமனையில் புகுந்து கோர கொலை வெறி தாண்டவம் ஆடியது, இந்திய படையின் துப்பாக்கிகள் கொண்டு கொண்டு X-Ray அறை, மருத்துவர்களின் ஓய்வு அறை,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகள் என சராமாரியா தாக்குதல் நடத்தி மருத்துவர்கள்,ஊழியர்கள்,நோயளிகள் என தமிழ் உறவுகளை கொன்று குவித்தது...

டாக்டர் C.K.கணேசரட்ணம், டாக்டர். பரிமேல்ழகர், தலைமை செவிலியர் திருமதி.P.வடிவேல், செவிலியர் மங்கையகரசி, உழியர்கள் செல்வரஜா, சீவரட்ணம், வண்டி ஓட்டுணர் சண்முகலிங்கம்,பீற்றர்,துரைராஜா போன்றோர் இந்திய படைகளின் கொலை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த இந்திய கொலை வெறியாட்டத்தை பார்ர்த்த குழந்தைகள் மனதளவில் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த வெறியாட்டத்தை கண்ட வயதான நேயாளிகள் இரத்த அழுத்தத்தால் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் உதவி கேட்டும் சிவபுரணம் பாடி தம்மை காப்பற்றும் படி கேட்ட அப்பாவிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.

இது நடந்த அடுத்தநாள் அக்டோபர் 22 அன்று மருத்துவமனை ஆய்வுக்கு வந்த தலைமை மருத்துவர் டாக்டர்.சிவபாதசுந்தரம் இந்திய இரத்தக் காட்டேரிகளால் கொல்லப்பட்டார்.

'ஹிந்தி'ய காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மருத்துவமனை அமரர் அறைக்கு பின்னால் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

மொத்தமாக 68 தமிழ் மக்கள் ராஜிவின் 'ஹ்ந்தி'ய படைகளால் கொல்லப்பட்டனர். இதில் 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 17 ஊழியர்கள் 55 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.

அப்போதும் தமிழக முதல் அமைச்சர் இந்த காட்டுமிராண்டி தனமான இந்திய தாக்குதலுக்கு மௌன சாட்சியாவே இருந்தார்...

எனது இளமை காலத்தில் நடந்த அந்த தமிழர் கொலை பற்றிய செய்தியை... பிபிசியின் தமிழோசையின் வழியாகவே அறிந்தவன் நான்...

தமிழ் நாட்டு மக்கள்... 1987 அக்டேபர் 22 அன்றும்... சொரானையற்று டெல்லியில் நடந்த இந்தியா ஆஸ்தேலியா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாம் சுற்று உலக கோப்பை போட்டியை கண்டு களித்து... மாலையில் இந்திய வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்...

தமிழ் நாட்டு தமிழனுக்கு சொரனை எப்போது வரும் என்றே தெரியவில்லை...

இந்தியா ஒழிக... தமிழ் வாழ்க...

தமிழா இன உணர்வு கொள்...

1 comment:

சிறுத்தை(தமிழ்தேசியன்) said...

அய்யா தமிழ் குரல்!

நான் வெப் ஈழம் தளத்தில் இந்தியா எனும் வாந்தி தலைப்பில் பதிவு செய்த பின்னுட்டத்தை தோழர் சேகுவரா.. தமிழ்நாடு டாக் கில் எடுத்து வெளியிட்டு உள்ளார்.. தாங்கள் பதிவு செய்த நான் தீவிர பார்பன ஆதரவாளர் எனும் கருத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது..நான் பார்ப்பானின் ஆதரவாளர் இல்லை என்பதை அறியதருகிறேன்.. நான் தீவிரமான தமிழ் தேசிய ஆதரவாளர்.. இதற்கு முன்பு தமிழ்தேசியன் என்ற பெயரில் எழுதி வந்தேன். தட்சு தமிழ் தளத்தில் எழுதிய பின்னுட்டங்களும் இந்த தமிழ்நாடு டாக் தளத்திற்கு வந்துள்ளன.. இப்போது தனியாக பிளாக் தொடங்கி சிறுத்தை என்ற பெயரில் எழுதிவருகிறேன்.. என்னுடைய தளம் (http://siruthai.wordpress.com) மேலும் தமிழ்நாட்டு டாக்கில் இணைய எவ்வளவு பணம் கட்ட வேண்டும் எப்படி இணைவது என்பதை தெரிவித்தால் சக தோழர்களுடன் விவாதிக்க வசதியாக இருக்கும்..

நன்றி
சிறுத்தை(தமிழ்தேசியன்)