Saturday, July 26, 2008

தாசாவதார... உண்மை முகம்

நான் படத்தில் உள்ள முதல் 10 நிமிட காட்சியில் வருவதை சொல்லி விடுகிறேன்...

முதலில் 12 ஆம் நூற்றாண்டில் தில்லையில் சைவ கோயிலில் ஒண்டு குடுத்தனம் நடத்திய நாமம் போட்ட சாமியை... விரட்ட... வேலை செய்யும்... இரண்டாம் குலோத்துங்கனுக்கு... சைவ மதம் பிடித்து விட்டதாக வசனம் பேசுவார்...

பின்னர் நாமம் போட்ட சாமியை... வேலைகாரர்கள் பெயர்ப்பதாக காட்டி... அதனை... இந்த நாமம் போட்ட நம்பி தடுப்பதாகவும்... காட்டுவார்... அப்போது இந்த நாமம் போட்ட நம்பி... 10 பேரை அடிப்பார்... சிலரை கொல்வதாகவும் காட்டுவார்... பின்னர் இந்த நம்பி தன்னை பற்றி சுயபுராணம் பேசி... அரசனுக்கு பிரம்மகத்தி தோசம் பிடிக்க போவதாக சவால் வேறு...

சோழன் நம்பியை... ஓம் நமச்சிவாய... என சொல்ல சொல்லும் போது... நம்பியின் மனைவி அந்த சைவ சொல்லை என சொல்லுங்கள் என நம்பியிடம் கெஞ்சி கேட்ட போகும் போது... ஓம் எனும் அடுத்த சொல்லான நமச்சிவாய எனும் சொல்லை சொல்லவிடாமல் நாமம் போட்டவர்கள் தடுக்கும் வைணவ மத வெறியையும்... நம்பி... ஓம்.... ..... ........ எனும் நாமகாரர்களின் சொல்லை சொல்லும் மதவெறியையும்... யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்...

ஆனால்...

பின்னர் நாமம் போட்ட நம்பியை... சோழன் கொடூர தண்டனை கொடுப்பதாக காட்டுகிறார்... அப்போது நாம நம்பியை கழுகு வந்து வாழ்த்துவதாகவும்... அதனை சைவர்கள் வில்லால் தாக்கும் அது கோயில் கோபுரம் பக்கம் போவதகவும் காட்டுகிறார்...

ஆனால் நம்பியை... கல்லோடு கட்டி... மிக கொடூரமாக... நம்பியின் மகனை கொண்டு... இறுதி சடங்கெல்லாம் செய்து... கடலில் போடுவதாக காட்டி... நம்பியின் மனைவி தாலியை... சோழன் மீது வீசுவதாக முடிகிறது...

பாட்டின் இடையே... சைவர்கள் வணங்கும் கடவுள் சிவனின் வடிவான லிங்கத்தை... கல் என்கிறார்... (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது) கூடவே... சிவனின் நெற்றி கண்ணை... பூனை கண் என கிண்டல்... (பூனை கண்ணால் பார்த்தால் எதுவும் குற்றம்தான்)... சோழன் மன்னனை விட நம்பி உயர்ந்தவன்... (ராஜனுக்கு ராஜன்... இந்த ரங்கராஜன் தான்)... தில்லை... தொல்லை... சீனிவாசனுக்கும்... ராஜலட்சுமிக்கும் (கமலின் உண்மையான தந்தை... தாய் பெயர்கள்... சீனிவாசன்... ராஜலட்சுமி) பிறந்த நம்பி உயர்வானவன் என்றெல்லாம் சுய விளம்பரம் வேறு...

இப்படி 12 ஆம் நூற்றாண்டு காட்சிகளை பார்ப்பவர்களுக்கு... இரண்டாம் குலோத்துங்கன்... மதவெறியனாகவும்... சைவ சமயத்தினர் கொடூரமானவர்களாகவும்... நாமம் போட்டவர்கள் நல்லவர்களாகவும் காட்டப்பட்டுள்ளது...

ஆனால் உண்மை நிலைக்கு வருவோம்...

இப்போதும் கூட... தில்லையில் நாமம் போட்ட சாமி ஒண்டு குடுத்தனம் இல்லை... தனியாக ஒரு பகுதியை ஆக்கிமித்து கொண்டுள்ளார்... சில மாதங்களுக்கு தில்லை சைவ கோயிலை கூட இந்த நாமம் போட்ட சாமிக்கு ஒரு பகுதியை பிரித்து கொடுக்க வேண்டும் என நாமகாரர்கள் பிரச்சனை செய்து கொண்டுள்ளனர்... படத்தில் காட்டபட்டது ஒன்றும் நடக்கவில்லை...

பல நூற்றாண்டுகளாக தில்லை... தில்லைவாழ் அந்தணர்கள் (தீட்சிதர்கள்) கட்டுப்பாட்டில்தான் உள்ளது... ராஜராஜன் காலத்தில் தீட்சிதர்கள்... மறைத்து வைத்திருந்த சைவ திருமுறைகள் மீட்கப்பட்டன... காடவர்கோன் காலத்தில்... தீட்சிதர்கள் சில காலம் தில்லையில் இருந்து விரட்டப்பட்டனர்... மற்றபடி எல்லா காலங்களிலும் தில்லையில் தீட்சிதர்களின் ஆட்டம்தான்... இரண்டாம் குலோத்துங்கன் வந்தான் என்பது எல்லாம்... கமலின் பொய்... புரட்டு....

சைவ கோயில்களின் நாயன்மார்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில்கள் இரண்டு.... 1. திருஆரூர்... 2. தில்லை (கோயில்)... மாணிக்கவாசகர்... தில்லையை கோயில் என்றுதான் திருவாசகம் பாடியுள்ளார்...

அதே போல் வைணவத்தில் ஆழ்வார்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில்கள் இரண்டு... 1. திருவரங்கம்... 2.திருமலை (திருப்பதி)...

சாதாரண என்னை போன்ற ஒரு முட்டாளின் கேள்வி என்னவென்றால்...

இங்கே தில்லையில் நாம்ம போட்ட சாமிக்காக அழுவோர்... திருவரங்கத்திலோ... திருமலையிலோ... வேறு எந்த நாமம் போட்ட கோயில்களிலாவது ஏதாவது பட்டை(சைவ) போட்ட சாமிக்கு ஒரு அங்குலம் இடம் உண்டா என சொல்ல முடியுமா?

இந்த நியாயப்படி பார்த்தால்... படத்தில் காட்டுவது... தில்லையில் நாமம் போட்ட சாமியை பெயர்த்து எறிவது நியாயமே...

உண்மையில் வைணவம் என்பது... தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றுதானே? அது வந்தேறிகளின் மதம்தானே?

இப்படி வந்தேறி (வைணவ) மதத்தை கமல் தூக்கி பிடிப்பதன் நோக்கம் என்ன? தனது ஆரிய பாசம்தானே?

இன்னொரு செய்தியும் நாம் அறிந்து கொள்வோம்...

இந்த படத்தில் சைவ சமய வெறியனாக காட்டப்பட்ட இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் கம்ப இராமயணம்... திருவரங்கம் கோயிலில் அரகேற்றப்பட்டது...

குலோத்துங்க சோழர்கள் காலத்தில்தான் சோழ நாட்டில் வைணவம் வளர்ந்ததாக சொல்லலாம்...

மேலும்... திருகாரகோணத்தில் (நாகப்பட்டினம்) இருந்த ஜைன மடாலத்தையை சூறையாடி கட்டியதுதான்... நாமகாரர்களின் திருவரங்கம் கோயில்...

இப்படி எல்லா அயோக்கியதனங்களையும் செய்த... நாமகாரர்களுக்கு... இப்போது கமல் பல்லக்கு தூக்குவது... என்ன பாசம் என தெரியவில்லை...

வயது... ஆக... ஆக... தானாக வளரும்... ஜாதி வெறி... இப்போது வளர்வது இதுதான்... கர்நாடகத்தை எதிர்த்து... நடத்தப்பட்ட உண்ணா விரத்தில்... எனக்கும் கும்ளேவும் வேண்டியவர்... வைரமுத்துவும் வேண்டியவர்... என போராட்டம் நீர்த்து போக விரும்பிய நபர் கமல்...

இடையில் கமல்... பகுத்தறிவு பேசி... நம்மை குழப்பி வருகிறார்...

பூனை... கொஞ்சம்... கொஞ்சம் வெளி வந்து கொண்டுள்ளது... விரைவில் சாயம் வெளுத்து விடும்...

4 comments:

Anonymous said...

Room Pottu Yosichiya?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

என் காதுகள் சொல்வதன்படி அது ஊனக்கண்ணே பூனைக்கண் அல்ல.

எழுதியது வாலி ஐய்யா, அர்த்தமில்லாமல் பூனைக்கண்ணைச் சேர்க்க அவரொன்றும் பேரரசு அல்ல.

இதையும் கவிப்பேரரசு என்று எடுத்து இன்னொரு பதிவு போட்டுடாதேங்கோ.

மதுவதனன் மௌ.

தமிழ் குரல் said...

//*
என் காதுகள் சொல்வதன்படி அது ஊனக்கண்ணே பூனைக்கண் அல்ல.

எழுதியது வாலி ஐய்யா, அர்த்தமில்லாமல் பூனைக்கண்ணைச் சேர்க்க அவரொன்றும் பேரரசு அல்ல.

இதையும் கவிப்பேரரசு என்று எடுத்து இன்னொரு பதிவு போட்டுடாதேங்கோ.

மதுவதனன் மௌ.

*//

பிழையை திருத்தியதற்கு நன்றி...

சைவ கடவுள்... சிவ பெருமானுக்கு மூன்றவதாக இருப்பது... ஊன கண் இல்லை... அது நெற்றி கண்...

சிவன் ஒன்றும்... நாம சாமிகளை போல் ஒளிந்து அடிக்கும்... பொட்டை... பேடி இல்லை...

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

Please let me know wat evidence exists to say Vainavam belongs To Aryans? Also, can you prove Saivam is 100% ours?